- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமாசி தேய்பிறை அஷ்டமி வழிபாடு

மாசி தேய்பிறை அஷ்டமி வழிபாடு

- Advertisement -

காக்கும் கடவுளாக திகழக்கூடியவர் கால பைரவர் என்றும் அவர் காலங்களுக்கு அதிபதியாக திகழக்கூடியவர் என்றும் சனீஸ்வர பகவானின் குருவாக திகழ்கிறார் என்றும் பலரும் அறிந்ததே. அப்படிப்பட்ட காலபைரவருக்கு உரிய திதியாக அஷ்டமி திதி திகழ்கிறது. வளர்பிறை தேய்பிறை என்று இரண்டு அஷ்டமிகள் மாதத்தில் வரும். தேய்பிறை அஷ்டமியில் நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கஷ்டங்களும் பிரச்சினைகளும் தேய்ந்து போகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட தேய்பிறை அஷ்டமி என்பது மாசி மாதத்தின் எட்டாம் நாள் பிப்ரவரி மாதத்தின் 20ஆம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் அனுஷ நட்சத்திரமும் சேர்ந்து வருவதால் கஷ்டங்கள் மட்டுமல்லாமல் கடன் பிரச்சினையும் முற்றிலும் தீரும். இவை தீர்வதற்குரிய வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு நாம் பார்க்க போகிறோம்.

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

காலபைரவரை வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்வில் பலவிதமான நன்மைகள் உண்டாகும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். பலரும் அனுபவபூர்வமாக அதை உணர்ந்தும் இருக்கிறார்கள். தங்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர்ந்து நல்ல நிலைக்கு வருவதற்கு கால பைரவரின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். காலத்தினால் செய்த தவறுகளும் தோஷங்களும், கஷ்டங்களும் நீங்கி நன்மைகள் ஏற்பட வேண்டும் எனில் கால பைரவரை நாம் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்வதற்குரிய மிகவும் உகந்த தினமாக பிப்ரவரி மாதம் இருபதாம் தேதி திகழ்கிறது.

- Advertisement -

அன்றைய தினத்தில் அருகில் இருக்கக்கூடிய கால பைரவரின் சன்னதிக்கு சென்று காலபைரவருக்கு முன்பாக மூன்று தீபங்களை ஏற்ற வேண்டும். ஒன்று வெண்பூசணி தீபம் வெண்பூசணியை வாங்கி அதை இரண்டாக நறுக்கி உள்ளே இருக்கக்கூடிய விதைகளை நீக்கிவிட்டு அதன் சுற்றுப்புறத்தில் மஞ்சளை தடவி குங்குமம் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி 27 மிளகுகளை சிவப்பு நிற துணியில் கட்டி திரியாக போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இதே போல் தேங்காய் தீபம் மற்றும் எலுமிச்சை தீபமும் கால பைரவருக்கு முன்பாக ஏற்றி வைத்து காலபைரவரிடம் உங்களுடைய கஷ்டங்கள் தீர வேண்டும் பிரச்சனைகள் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு உங்களுக்கு தெரிந்த காலபைரவரின் மந்திரத்தை 27 முறையோ 108 முறையோ கூறி வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு காலபைரவரின் மந்திரத்தை கூறும்பொழுது கையில் 11 ஒரு ரூபாய் நாணயங்களை வைத்துக்கொண்டு கூறி பிறகு கடன் பிரச்சினை அனைத்தும் தீர வேண்டும் என்று அந்த 11 ஒரு ரூபாய் நாணயங்களை காலபைரவருக்கு முன்பாக வைத்துவிட்டு வரவேண்டும். வரும் வழியில் காலபைரவரின் வாகனமான நாய்க்கு தங்களால் இயன்ற உணவுப் பொருட்களை வாங்கி தானமாக தர வேண்டும்.

- Advertisement -

ஆலயத்திற்கு சென்று வழிபட இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள் அன்றைய தினம் இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக வீட்டு பூஜை அறையில் இரண்டு அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வைத்து அந்த தீபத்தில் கால பைரவர் இருப்பது போல உணர்ந்து கொண்டு சொர்ண ஆகர்ஷண பைரவரின் அஷ்டகத்தை ஐந்து முறை படிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பைரவரின் அருளால் நம்முடைய கடன் பிரச்சனையும், கஷ்டங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர பரிகாரம்

அதீத சக்தி வாய்ந்த கால பைரவரை முழுமனதோடு சரணாகதி அடைந்து வழிபாடு செய்பவர்களுக்கு கால பைரவரின் அருளால் அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி நன்மைகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்