இந்த ஒரு செடியோ அல்லது இதன் குச்சியோ கூட உங்கள் வீட்டில் இருந்தால் போதும். செல்வத்திற்கு உங்கள் வீட்டில் பஞ்சமே இருக்காது. மகாலட்சுமி உங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்கிவிடுவாள்.

madhulai anmeega palan
- Advertisement -

தற்காலத்தில் பெரும்பாலானோர் தாங்கள் வசிக்கும் இல்லத்தை அழகுப்படுத்த விதவிதமான பூச்செடிகளை வாங்கி வளர்க்கின்றனர். வீடுகளுக்கு நறுமணம் உள்ள பூச்செடிகளை வாங்கி வைத்து நடுவது எவ்வளவு அவசியமோ, அதுபோலவே வீட்டிற்கு நல்ல அதிர்வலைகளை கொடுக்கின்ற மரங்களை வளர்ப்பதும் அவசியமாகும். அந்த வகையில் தெய்வீக ஆற்றல்களைக் கொண்ட நெல்லி, மா, வாழை போன்ற மரங்களின் வரிசையில் மாதுளை பழ செடியும் முக்கிய இடம் பெறுகிறது. இந்த மாதுளம் செடி குறித்தும், அந்தச் செடியை எப்படி நம் வீட்டில் வளர்க்க வேண்டும் என்பது குறித்தும், அதனால் நமக்கு ஏற்படக்கூடிய ஆன்மிகம் சார்ந்த நன்மைகள் என்ன என்பது குறித்தும் இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மாதுளை செடி மற்றும் மாதுளை கனி செல்வத்தின் கடவுளான மகாலட்சுமி அம்சம் நிறைந்ததாகும். எனவே வெள்ளிக்கிழமைகளில் தங்கள் வீடுகளில் பெண்கள் பூஜைகள் செய்யும் பொழுது, மகாலட்சுமி தேவிக்கு ஒரு முழு மாதுளம் பழம் அல்லது மாதுளை முத்துக்களை ஒரு சிறிய தட்டில் வைத்து நைவேத்தியம் செய்து வழிபாடு செய்வதால் வீட்டில் தனலாபம் பெருகும். வீண் விரயங்கள் ஏற்படாது. கடன் பிரச்சனைகள் விரைவில் தீர வழி வகுக்கும்.

- Advertisement -

மாதுளம் பழத்தைப் போலவே மாதுளை மரத்தின் சிறிய அளவிலான குச்சியை உங்கள் பணப்பெட்டியிலையோ அல்லது பணப் பையிலோ வைப்பதால் பொருளாதார ரீதியிலான அதிர்ஷ்டம் ஏற்படும்.

தங்களுக்கு வாழ்வில் பொருளாதார கஷ்ட நிலை ஏற்படாமல் இருக்கவும் வீண் விரயங்கள் உண்டாகாமல் தடுக்கவும், வளர்பிறை வெள்ளிக்கிழமை அல்லது எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற “அஸ்தம்” நட்சத்திர தினத்தில் தாங்கள் வசிக்கும் வீடுகளின் தோட்டப்பகுதியில் வடக்கு அல்லது கிழக்கு திசையில் ஒரு மாதுளம் பழ செடியை நட்டு வளர்த்து வர வேண்டும்.

- Advertisement -

நகர்ப்புறங்களில் மாடி இல்லங்களில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டில் படுக்கை அல்லது கிழக்கு பகுதியில் ஒரு மண்தொட்டியில் மாதுளம் செடியை நட்டு வளர்க்கலாம். புதிதாக வீட்டு மனை வாங்கி வீடு கட்டுபவர்கள் அந்த வீட்டிற்கு குடி புகுவதற்கு முன்பாகவே மேற்சொன்ன நட்சத்திர தினத்தில் அந்த வீட்டுமனையில் வடக்கு, கிழக்கு திசைகளில் ஒரு மாதுளை செடியை நட வேண்டும்.

இப்படி மாதுளை செடியை நட்ட பிறகு, அந்த செடிக்கு தினந்தோறும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அந்த செடி எப்பொழுதும் பசுமையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் பூஜைகள் செய்யும் பொழுது இந்த மாதுளை செடிக்கு சிறிதளவு மஞ்சள் கலந்த நீர் ஊற்றி, தூபங்கள் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இந்த தீபம் ஏற்றினால் படிக்காத பிள்ளைகள் கூட புத்தி கூர்மையாகி படிப்பில் சிறந்து விளங்குவார்கள்

வீடு என்று மட்டும் இல்லாமல் தங்களின் சொந்த தொழில், வியாபார நோக்கங்களுக்காக நிலம் வாங்குபவர்களும், அந்த நிலத்தில் மேற் சொன்ன முறையில் மாதுளைச் செடியை நட்டு வளர்த்து வாரந்தோறும் பூஜைகள் செய்வதால் அவர்களின் தொழில், வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டு செல்வ நிலை உயரும்.

- Advertisement -