ஒரே ஒரு முறை ஜெபித்தாலே பாவங்களை போக்கும் மந்திரம்

sivan-3

நமது முன்னோர்கள் செய்த பாவ வினைகளும் நாம் செய்த பாவ வினைகளும் நம்மை துரத்துகின்றன. அதனால் தான் நாம் இப்பிறவியில் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது என்று ஞானிகள் பலர் கூறி நாம் கேட்டிருப்போம். பாவத்தில் இருந்து நாமும் நம் முன்னோர்களும் விடுபட கீழே உள்ள மந்திரத்தை ஒரே ஒரு முறை ஜபித்தால் போதும். இதோ அந்த அற்புத மந்திரம்.

om manthiram

மந்திரம்:
ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹா.
ஓம் ஸ்ரீ மல்லிகார் ஜுணேஸ்வராய நமஹா.
ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹா.

ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வராய நமஹா.
ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹா.
ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹா.

ஓம் ஸ்ரீ நாகேஸ்வராய நமஹா.
ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வராய நமஹா.
ஓம் ஸ்ரீ த்ரியம் பகேஸ்வராய நமஹா.

ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹா.
ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வராய நமஹா.

- Advertisement -

sivan

அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு 1000 வருடங்களுக்கு மேல் பழமையான சிவன் கோவிலுக்கு சென்று, நான் செய்த பாவங்களையும் என் முன்னோர்கள் செய்த பாவங்களையும் மன்னித்து எங்களுக்கு தயை கூர்ந்து அருள்புரிவாய் இறைவா என மனமுருகி வேண்டி பின் மேலே உள்ள மந்திரத்தை ஒரே ஒரு முறை கூறுவதன் பயனாக பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.

shivan

இதையும் படிக்கலாமே:
எந்த நாளும் சிறப்பாக அமைய இந்த மந்திரத்தை சொல்லுங்கள் போதும்

இந்த மந்திரத்தை கூறும்பொழுது சிவனை தவிர சிந்தையில் வேறெதுவும் இருக்கவே கூடாது. அதற்கு முதலில் நாம் தியானம் இருக்க பழக வேண்டும். தியானம் இருந்து மனதை ஒருமுக படுத்தி பழகிய பிறகு இந்த மந்திரத்தை உச்சரிப்பதே உத்தமமான செயலாகும்.

சிவன் மந்திரங்கள் மற்றும் அனைத்து விதமான தமிழ் மந்திரங்கள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்