மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடக்க செய்ய வேண்டிய சிவ வழிபாடு.

sivan5
- Advertisement -

நன்றாக இருப்பவர்களுக்கே இந்த காலத்தில் திருமணம் நடப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. இதில் மாற்றுத்திறனாளிகளை இந்த உலகம் நல்லபடியாக வாழ விடுமா. மாற்றுத்திறனாளிகளை குறை சொல்லவில்லை. உலக நடைமுறையை பற்றி சொல்கின்றோம் அவ்வளவுதான். நிச்சயம் அவர்களை குறை சொல்லிக் கொண்டே தான் இருக்கும் இந்த உலகம்.

மாற்றுத்திறனாளியாக இருக்கும் ஒரே காரணத்தால் உங்களுக்கு திருமணம் தள்ளி போகிறதா. மாற்றுதிறனாளி சகோதர சகோதரிகளுக்காகவே இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு. எத்தனையோ விதமான மாற்றுத்திறனாளிகள் இறைவனால் இந்த பூமியில் படைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நல்லபடியாக மனவாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காக இந்த பிரத்தியேக பதிவு. மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற திருமணம் வாழ்க்கை அமைய செய்ய வேண்டிய சிவன் வழிபாடு.

- Advertisement -

மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடக்க வழிபாடு

நீங்க மாற்றுத்திறனாளியாக இருக்கிறீங்க. உங்களுக்கு ஏற்ற மணமகன் அமையவில்லை, மணமகள் அமையவில்லை என்றால் ஈசனை இப்படி கும்பிடுங்க போதும். கடவுள் உங்களுக்கான நல்ல வழியை காண்பித்துக் கொடுப்பார். சிவன் கோவிலுக்கு போகணும். நந்தீஸ்வரரை வணங்கி விட்டு, சிவபெருமானை சென்று வழிபாடு செய்து விடுங்கள். கோவிலை மூன்று முறை வலம் வர வேண்டும். பிறகு நந்தி பகவானின்வலது காதில் உங்களுடைய வேண்டுதலை சொல்லுங்க.

எனக்கு நல்ல மாப்பிள்ளை அமையனும். அப்படி இல்லை என்றால், எனக்கு நல்ல மனைவி அமைய வேண்டும், என்னை புரிந்து கொண்டு என்னுடைய குறையை மனதார ஏற்றுக்கொள்ளக் கூடிய வாழ்க்கை துணை அமைய வேண்டும் என்ற பிரார்த்தனையை முழுமையாக வையுங்கள். இந்த வேண்டுதலை எந்த சமயத்தில் வைக்க வேண்டும் தெரியுமா. எமகண்ட நேரத்தில் வைக்க வேண்டும்.

- Advertisement -

மாற்றுத்திறனாளிகள் எமகண்ட நேரத்தில், நந்தி பகவானின் காதில் வேண்டுதலை சொன்னால் அது உடனே பலிக்கும். இது மாற்றுத்திறனாளிகளுக்கான வழிபாடு. சாதாரணமாக இருப்பவர்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளக்கூடாது. சாதாரணமாக எந்தக் குறையும் இல்லாமல் இருப்பவர்கள் எமகண்டத்தில் போய் சாமி கும்பிடாதீங்க. இது சாதாரணமானவர்களுக்கு சொல்லப்பட்டுள்ள வழிபாடு அல்ல. முழுக்க முழுக்க மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் சொல்லப்பட்டுள்ள வழிபாடு என்பதை மீண்டும் ஆழமாக பதிவு செய்து கொள்கின்றோம்.

அதுவும் குறிப்பாக திருமண தடையை உடைக்க இந்த வழிபாடு மிகவும் பயனுள்ளபடி அமையும். என்னால் கோவிலை வலம் வர முடியாது, என்பவர்கள் நீங்கள் சிவபெருமானை வழிபாடு செய்து நந்தி தேவரை வழிபாடு செய்து உங்களுடைய பிரார்த்தனையை நிறைவு செய்து கொள்ளலாம். தவறு கிடையாது. உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எமகண்ட நேரத்தில் சென்று மேல் சொன்ன வழிபாட்டை நம்பிக்கையோடு செய்யுங்கள்.

- Advertisement -

நிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும். ஒரு அம்மா அப்பா இருக்காங்க. அவங்களுக்கு மாற்றுத்திறனாளி குழந்தை இருக்கு. அந்த குழந்தைக்கு திருமண வயது ஆகிவிட்டது. அந்த மாற்றுத்திறனாளி குழந்தைக்கு நல்ல இல்லற வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காக பெற்றவர்களும் இந்த வழிபாட்டை செய்யலாம். தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: பெண்களுக்கான துர்க்கை அம்மன் வழிபாடு

அடுத்தவர்களுக்கு இருக்கும் குறையை சுட்டி காட்டி, அனாவசியமாக அவர்கள் மனது நோகும் படி நடந்து கொள்ளாதிங்க. அந்த பாவத்திற்கான மன்னிப்பு இந்த உலகத்தில் கிடையவே கிடையாது என்ற தகவலுடன் அந்த ஈசனை வழங்கி ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -