மாட்டுப் பொங்கல் அன்று செய்ய வேண்டிய பூஜை

mahalakshmi ko matha pidi maan
- Advertisement -

இன்று உழவர் திருநாளாம் தை திருநாளை அனைவரும் கோலாகலமாக கொண்டாடி வருகிறோம். இந்த கொண்டாட்டத்தை தொடர்ந்து நாளைய தினம் மாட்டுப் பொங்கல் உழவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படும். இந்த பண்டிகை கிராமப்புறங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

நகர்ப்புறங்களில் இத்தகைய பெரிய கொண்டாட்டங்கள் இல்லை என்றாலும் இந்த அற்புதமான நாளை தங்களுடைய செல்வ செழிப்பு உடைய நாளாக மாற்றிக் கொள்ள வழிபாடுகளை செய்ய முடியும். அது என்ன வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

மாட்டுப் பொங்கல் அன்று செய்ய வேண்டிய கோ பூஜை
இன்றைய தினம் கால்நடைகளில் நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாத்தில் பசுமாட்டிற்கு முக்கிய பங்கு உண்டு. இதில் முப்பது முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு மகாலட்சுமி தாயாரே பசு மாட்டிற்கு பின்புறம் தான் வாசம் செய்கிறார் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய பசுவினை நாம் எப்படி வணங்குவது என்று பார்க்கலாம்.

இன்றைய தினம் இரவே நீங்கள் சம்பா கோதுமையை தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். கோதுமையின் அளவு உங்கள் வசதியை பொறுத்தது. மறுநாள் வாய்ப்புள்ளவர்கள் பசுவையும் கன்றையும் உங்கள் வீட்டுக்கு அழைத்து பூஜை செய்யுங்கள். இந்த பூஜை கோசாலைக்கு சென்று செய்யலாம் அல்லது பசுவும் கன்றும் வைத்திருப்பவர்களிடம் அனுமதி செய்யலாம்

- Advertisement -

இந்தப் பூஜையை பசுவையும் கன்றையும் வீட்டிற்கு அழைத்து செல்வது நல்ல பலனை தரும் அப்படி பசுவையும் கன்றையும் வீட்டிற்கு அழைத்து அவைகளுக்கு நீங்கள் ஊற வைத்த அந்த சம்பா கோதுமையுடன் வெல்லத்தை கலந்து தானமாக கொடுக்க வேண்டும். பசுவுக்கும் கன்றுக்கும் வெள்ளை நிற வஸ்திரத்தை போட்டு கு மாலை போட வேண்டும். அத்துடன் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து கற்பூர தீபாராதனை காட்டி வணங்க வேண்டும்.

அதன் பிறகு வீட்டில் உள்ள அனைவரும் பசுமாட்டை சுற்றி வந்து பசுவிற்கு பின்புறம் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும். அப்படி ஆசீர்வாதம் பெற்ற பிறகு பசு நம் விட்டில் நின்ற இடத்திலிருந்து மண் எடுக்க வேண்டும். வீட்டில் டைல்ஸ் தரையிலே இருந்தாலும் பெருக்கி அந்த மண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும். மண் தரையாக இருந்தால் ஒரு பிடி மண்ணை எடுத்து கொள்ளுங்கள். கோசாலையில் பூஜை செய்தாலும் இதே முறையில் செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த மண்ணை சாதாரணமாக அப்படியே எடுக்கக் கூடாது. இன்றைய நாளில் பசுவிற்கு இந்த கோ பூஜை செய்து வணங்கிய பிறகு தான் எடுக்க வேண்டும்.. அப்படி தான் பசுவிற்கு அருள் புரிய அருள் ஆசி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு பிடி மண் நம் வீட்டிற்குள் வந்து விட்டால் போதும் முப்பது முக்கோடி தேவர்களின் அருளும் பெற்றது போல அர்த்தம்.

இதை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில், பீரோவில் அல்லது வியாபார ஸ்தலங்களில் வைத்து விட்டால் பணவரவு அதிகரித்து உங்களுடைய செல்வ நிலை பல மடங்கு உயரும். அத்துடன் இந்த பூஜை செய்த மண் உங்கள் வீட்டிற்குள் வரும் போது உங்கள் தலைமுறையை நிம்மதியாக பல பிரச்சினை என்று வாழும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

மேலும் கண் திருஷ்டி தீய சக்திகளை தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று உணர்ந்தால், இந்த மண்ணில் இருந்து கொஞ்சமாக நாம் குளிக்கும் தண்ணீரில் போட்டு குளித்து விட்டால் அந்த தோஷங்களும் தாக்கங்களும் தீரும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: பண வரவு அதிகரிக்க வாராகி அன்னை வழிபாடு

அற்புதமான இந்த பூஜையை செய்யக் கூடிய நாளைய நாளை தவிர விடாமல் செய்து விடுங்கள். இதில் நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -