மே மாத ராசி பலன்கள் – 2020

may

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிம்மதியை தரக்கூடிய மாதமாக தான் பிறக்கப் போகின்றது. பிரச்சினைகள் அவ்வப்போது வந்து போனாலும், அதை எதிர்கொள்ளும் தைரியம், உங்கள் மனதில் ஏற்பட்டுவிடும். சமூகத்தில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்களை சரி செய்ய தாராளமாக முயற்சிகளை மேற்கொள்ளலாம். எடுக்கக்கூடிய எல்லா வகையான புதிய முயற்சிகள் வெற்றியடையும். வீட்டிலிருந்தே அலுவலகப் பணியை செய்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டிய அவசியம் தேவைப்படுகிறது. வருமானத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. உயர் அதிகாரிகளிடம் மட்டும் சற்று கவனமாக பேசுவது நல்லது. வார்த்தை தடுமாறும் பட்சத்தில்  இப்போது நிலவி வரும் சூழ்நிலையில் வேலையை இறப்பதற்கு கூட வாய்ப்பு உள்ளது. தினந்தோறும் சிவபெருமானை நினைத்து மனதார வழிபடுங்கள்.

ரிஷபம்
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சற்று சுமாரான மாதமாக தான் பிறக்கப் போகிறது. வீட்டில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போக வாய்ப்பு இருப்பதால், அனாவசியமான பேச்சுகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளிடம், தந்தை வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அலுவலகப் பணியில் இருந்த பிரச்சனை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். பொருளாதார பிரச்சனை பெரியதாக எதுவும் இருக்காது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு கூடிய விரைவில் நல்ல செய்தி வந்து சேரும். பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளில் மட்டும் கையெழுத்து இட வேண்டாம். சொந்த தொழில் எப்பவும் போல் சுமுகமாக செல்லும். புதிய முதலீட்டினை செய்ய வேண்டாம். தினம்தோறும் வீட்டிலிருந்தே அம்மனை நினைத்து வழிபடுவது மனநிம்மதியை தேடித்தரும்.

மிதுனம்
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சந்தோஷத்தை தரக்கூடிய மாதமாக தான் அமையப்போகிறது. வீட்டில் உறவினர்களுக்கு இடையே மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனை ஒரு நல்ல முடிவுக்கு வந்துவிடும். வருமானத்தில் சற்று பிரச்சனை உண்டாகும். பணத்தட்டுப்பாடு ஏற்படும். இருந்தாலும் மன தைரியத்தோடு எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை உங்களிடம் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை. பொருட்கள் திருடு போவதற்கு வாய்ப்பு உள்ளதால் உங்கள் பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். மாதத்தின் முன் பகுதி சற்று கரடுமுரடாக இருந்தாலும், மாத இறுதியில் எதிர்பாராத அதிர்ஷ்டம் தேடி வர வாய்ப்பு உள்ளது. தினம் தோறும் அனுமன் வழிபாட்டை வீட்டிலிருந்து செய்வது தைரியத்தை அதிகப்படுத்தும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய மாதமாக தான் பிறக்கப் போகின்றது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு கட்டாயம் நல்ல செய்தி வந்து சேரும். இதுநாள் வரை இருந்த பிரச்சனைகள் கூட இந்த மாதம் நல்ல முடிவுக்கு வந்துவிடும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சொந்தத் தொழிலில் சில பிரச்சனைகள் அவ்வப்போது வந்து போக வாய்ப்பு உள்ளது. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை. அலுவலகக் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்கள் தொலைபேசியில், மேல் அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளும் போது சற்று கவனமாக பேசுவது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு மன அமைதியை தேடி தரும்.

சிம்மம்
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சந்தோசமான மாதமாக தான் பிறக்கப் போகின்றது. இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் அனைத்தும் ஒரு நல்ல முடிவுக்கு வந்துவிடும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். அலுவலகத்தில் இருந்து வந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இந்த மாதம் வீட்டிலிருந்தே பணியை செய்து இருந்தாலும், உங்கள் வருமானம் உங்கள் கைக்கு வந்து சேரும். சொந்த தொழிலில் அவ்வப்போது சில பிரச்சினைகள் வந்து போக வாய்ப்பு உள்ளது. இந்த மாத இறுதிக்குள் சரியாகிவிடும். புதிய முதலீடுகளை, யாரையும் நம்பி செய்துவிட வேண்டாம். தினம் தோறும் விநாயகர் வழிபாடு மன அமைதியை தேடி தரும்.

கன்னி
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சற்று சுமாரான மாதமாகத்தான் பிறக்கப் போகின்றது. வருமானத்தில் தட்டுப்பாடு ஏற்படும். கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை நிலவும். வாகனத்தில் செல்லும் போது அதிக கவனம் தேவை. முடிந்த வரை நீண்ட தூரப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. வீட்டிலுள்ளவர்கள் உடல்நலத்தில் ஆரோக்கியம் காட்டவேண்டும். அரசாங்க வேலைகள் தடைபடும். மாத இறுதியில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்கள் மேலதிகாரிகளிடம் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள். தினம்தோறும் சிவனை மனதார நினைத்து வீட்டில் இருந்த ஐந்து நிமிடங்கள் தியானம் செய்வது நல்லது.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம், முன்னேற்றத்தை தரக்கூடிய மாதமாக தான் இருக்கப்போகிறது. வீட்டில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் இந்த மாதம் ஒரு முடிவுக்கு வந்துவிடும். வருமானத்திலிருந்த சிக்கல் நீங்கும். வீட்டில் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் நடந்து, சந்தோஷத்தை அடைவீர்கள். வியாபாரம் முன்னேற்றத்தில் செல்லும். முடிந்தவரை புதிய முதலீட்டை தவிர்ப்பது நல்லது. அலுவலகப் பணியை வீட்டிலிருந்து செய்பவர்களுக்கு அவ்வப்போது சின்னச் சின்ன பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். தினம்தோறும் முருகப் பெருமானை நினைத்து வீட்டில் இருந்து நெய் தீபமேற்றி வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

விருச்சிகம்
Virichigam Rasi
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சந்தோஷத்தை தரக்கூடிய மாதமாக தான் பிறக்கப் போகின்றது. உறவினர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். சொந்தங்களின் அருமை பெருமைகளை புரிந்து கொள்ளும் நேரம் இது. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை நீங்கி ஒரு தீர்வு கிடைக்கும். சொந்த தொழில் முன்னேற்றத்தோடு செல்லும். அத்தியாவசியப் பொருட்களை விற்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வீட்டு குடும்ப விஷயத்தை தயவுசெய்து யாரிடமும் பகிர வேண்டாம். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பெண்கள் தங்களுடைய ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முடிந்தவரை பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். குலதெய்வ வழிபாடு மன அமைதியைத் தேடித் தரும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு பலவிதமான மாற்றங்களை தரப்போகும் மாதமாக தான் இந்த மாதம் பிறக்கப் போகின்றது. அதாவது பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து, சந்தோஷமான தருணத்தை அடையப் போகிறீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது. அநாவசிய பேச்சை தவிர்த்து கொள்ளவேண்டும். வியாபாரம் எப்போதும்போல் சுமுகமாக செல்லும். புதிய முதலீடு எதையும் செய்ய வேண்டாம். அலுவலகத்தில் கிடைக்கக்கூடிய வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைத்தால், வேண்டாம் என்று சொல்லாமல் கஷ்டப்பட்டாவது உங்களது பணியை செம்மையாக செய்து முடிக்க பாருங்கள். எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தினம்தோறும் வீட்டிலிருந்தே அனுமனை நினைத்து வழிபடுவது மனநிம்மதியை தேடித்தரும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சந்தோஷத்தை தரக்கூடிய மகத்தான் பிறக்கப்போகிறது. சற்று உங்களுடைய முன்கோபத்தை மட்டும் அடக்கிக் கொள்ளுங்கள். அனாவசிய பேச்சு பேச வேண்டாம். சின்ன பிரச்சனை கூட பெரியதாக முடிந்துவிடும். வார்த்தையில் கவனம் தேவை. வீட்டில் இருக்கும் பெண்களுக்கே சற்று உடல் நலம் பாதிக்க வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். சிலருக்கு தலை சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழில் சுமுகமாக செல்லும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்கள் கவனமாக உங்களுடைய பணியை செய்ய வேண்டும். தினம்தோறும் சிவபெருமானை நினைத்து வீட்டிலிருந்து தீபமேற்றி வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றத்தை தரக்கூடிய மாதமாக தான் பிறக்கப் போகின்றது. மன தைரியத்தோடு எந்த ஒரு செயலையும் செயல்படுத்துவீர்கள். அதில் வெற்றி அடைவீர்கள். உங்களின் சொந்த பந்தங்கள் உங்கள் பிரச்சினைக்கு கை கொடுப்பார்கள். வியாபாரத்தில் இருந்த தடை நீங்கி முன்னேற்றப்பாதையில் செல்லும். அலுவலகத்திலிருந்து வந்த சின்ன சின்ன பிரச்சினைகள் கூட இந்த மாத இறுதியில் நல்ல முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்டதூரப் பயணங்களில் ஈடுபடவேண்டாம். தினம்தோறும் குருபகவானை வீட்டிலிருந்தே மனதார நினைத்து வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

மீனம்
Meenam Rasi
மீன ராசிக்காரர்களுக்கு இந்த முன்னேற்றத்தை தரக்கூடிய மாதமாக தான் பிறக்கப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். வியாபாரம் நல்ல லாபத்தை பெற்றுத் தரும். பணவரவிற்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. பொருளாதாரப் பிரச்சனை இருப்பது போல் சூழ்நிலை இருந்தாலும், இந்த மாத இடைப்பட்ட பகுதியில் அதற்கான தீர்வு கிடைத்து விடும். அலுவலகப் பணியில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும். மொத்தத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கை உங்களுக்கு உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தினந்தோறும் முருகப் பெருமானை நினைத்து வீட்டில் இருந்து வழிபடுவது நல்ல பலனைத் தேடித்தரும்.

English Overview:
Here we have May month Rasi palan 2020 in Tamil or May matha Rasi palangal in Tamil. This May month Rasi palangal covers Mesham to Meenam Rasi.