மாயவரம் ஸ்பெஷல் ‘விட்டேனா பார் இட்லி உப்புமா’ வை இப்படித்தான் செய்யனுமா? இது என்ன பெயரே வித்தியாசமா இருக்கே!

idli-upuma
- Advertisement -

ஆமாங்க, மாயவரத்தில் இந்த இட்லி உப்புமா மிகவும் பிரபல்யம். இந்த இட்லி உப்புமாவுக்கு பெயர் ‘விட்டேனா பார் இட்லி உப்புமா’ தான். மாயவரத்தில் இருப்பவர்களுக்கு இது நன்றாக தெரியும். சில மசாலா பொருட்களை சேர்த்து அரைத்து செய்யக்கூடிய இந்த மசாலா இட்லி ரெசிபியை இன்று நாம் பார்க்கப் போகின்றோம். மீதமான இட்லி அல்லது ஆறிப்போன இட்லி, இப்படி இந்த உப்புமாவை இட்லியை வைத்து நாம் சுவையாக செய்யப் போகின்றோம். ரெசிபி படித்து பாருங்கள். மிஸ் பண்ணாமல் ஒருமுறை முயற்சி செய்தும் பாருங்கள். இதனுடைய சுவை ரொம்ப ரொம்ப வித்தியாசமாக இருக்கும்.

செய்முறை

இந்த ரெசிபி செய்ய முதலில் பத்து இட்லிகளை எடுத்து உங்கள் கைகளாலேயே உதிர்த்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் குறைந்த அளவில் இட்லி இருந்தாலும் பின் சொல்லக் கூடிய அளவுகளை குறைத்து செய்து கொள்ளலாம்.

- Advertisement -

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து தோல் உரித்த பூண்டு – 3 பல், தோல் உரித்த சின்ன வெங்காயம் – 15 பல், நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 ஸ்பூன், வரமிளகாய் – 2, ஒரு சின்ன துண்டு – புளி, போட்டு இதை தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். ரொம்பவும் புளித்த இட்லியில் இதை செய்தால் புளி சேர்க்க வேண்டாம்.

அடுத்த அடுப்பில் ஒரு கடாயை வைத்து 3 ஸ்பூன் – எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு பொன்னிறம் வரும் வரை சிவக்க வறுக்கவும்.

- Advertisement -

பிறகு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 10 பல், நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 கைப்பிடி அளவு, வரமிளகாய் – 1 போட்டு, வதக்குங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வரை வதங்கி வந்ததும் மிளகுத்தூள் – 1/4 ஸ்பூன், சீரகத்தூள் – 1/4 ஸ்பூன், நம் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் பேஸ்ட் இதில் போட்டு, தேவையான அளவு – உப்பு, போட்டு மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், நெய் – 1 ஸ்பூன் விட்டு நன்றாக கலந்து விட வேண்டும்.

நாம் அரைத்த மசாலாவின் பச்சை வாசனை நீங்க வேண்டும். இட்லியில் ஏற்கனவே உப்பு இருக்கும் ஜாக்கிரதையாக உப்பு தேவையான அளவு போட்டுக் கொள்ளுங்கள். நாம் அரைத்த மசாலா விழுதின் பச்சை வாடை முழுவதும் போன பின்பு இந்த மசாலாவில் உதிர்த்து வைத்த இட்லியை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து விட்டு கலந்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: அறுசுவையும் சேர்ந்தது போல ஒரு சட்னி செய்து சாப்பிட ஆசைப்படுறீங்களா? வெறும் 10 நிமிடத்தில் அறுசுவையில் சட்னி ரெசிபி இதோ உங்களுக்கு.

இட்லியில் நாம் அரைத்த மசாலா எல்லாம் சேர்ந்து இட்லி நன்றாக சூடாகி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி பரிமாறி பாருங்கள் இது வேற லெவல் டேஸ்ட் இருக்கும். ரெசிபி பிடிச்சிருக்கோ, இல்லையோ மிஸ் பண்ணாம முயற்சி செய்து பாருங்கள். செய்த பிறகு இந்த டிஷ் எல்லோரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

- Advertisement -