பித்தளை விளக்குகள் புதுசு போல பளபளக்க சமையல் கட்டில் இருக்கும் இந்த மாவு போதுமா? இது தெரிஞ்சிருந்தா இவ்ளோ நாளா தேய்க்க கஷ்டப்பட்டிருக்க மாட்டேனே!

pooja-items-wheat-flour
- Advertisement -

பித்தளை விளக்குகள், பூஜை பொருட்கள், சாமான்கள் போன்றவற்றை துலக்குவதற்கு ரொம்பவே சிரமமான ஒரு விஷயமாக இருந்திருக்கும். ஆனால் நம் வீட்டில் சமையல் கட்டில் ஒளிந்து கொண்டிருக்கும் இந்த ஒரு மாவு பித்தளை விளக்குகளை பளிச்சென ஜொலிக்க செய்யும் ஆற்றல் கொண்டிருப்பதை அனைவரும் அறிவீர்களா? அப்படி என்ன மாவு அது? அதை வைத்து எப்படி பித்தளை விளக்குகளை சிரமப்படாமல் சுத்தம் செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் வீட்டு குறிப்புகளாக தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பூஜைக்கு பயன்படும் பித்தளை சாமான்கள் அல்லது அண்டா, குண்டா போன்றவை எது இருந்தாலும் நீங்கள் சுத்தம் செய்வதற்கு வீட்டில் இருக்கும் இந்த ஒரு மாவை பயன்படுத்தலாம். பொதுவாக பித்தளை சாமான் தேய்ப்பதற்கு புளி போன்றவற்றை உபயோகிப்பது உண்டு. வினிகர், பேக்கிங் சோடா போன்றவற்றையெல்லாம் கூட பயன்படுத்தி தேய்ப்பது உண்டு. ஆனால் இப்படி எல்லாம் நாம் செய்யப் போவதே கிடையாது.

- Advertisement -

எவ்வளவு கடினமான கறையுள்ள பித்தளை சாமான்களையும் ரொம்ப சுலபமாக சுத்தம் செய்வதற்கு முதலில் உங்கள் சமையல் கட்டில் இருக்கும் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கோதுமை மாவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தூள் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த மாவுடன், ஒரு முழு எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம்.

எலுமிச்சை சாறில் இருக்கும் தண்ணீரை இதற்கு போதுமானது. இந்த மாவை கொண்டு நீங்கள் உங்களுடைய பூஜை சாமான்களை ஸ்க்ரப்பர் அல்லது கைகளாலேயே லேசாக தேய்த்து கொடுத்தால் போதும், மங்கிப் போன நிறம் மாறி புதுசு போல பளிச்சென மாறும். எல்லா பித்தளை சாமான்களையும் இது போல தேய்த்து கழுவி எடுத்துக் கொள்ளலாம். எலுமிச்சை சாறு சேர்ப்பதால் இரண்டு நாட்கள் ஆனாலும் பித்தளை பொருட்களில் கருப்பு புள்ளிகள் தோன்றாது.

- Advertisement -

இந்த முறையில் நீங்கள் பூஜை சாமான்களை சுத்தம் செய்தால் ஒரு மாதத்திற்கு ஒருமுறை நீங்கள் பூஜை சாமான்களை தேய்த்தாலே போதும் அவ்வளவு பளிச்சென இப்படியே இருக்கும், சீக்கிரம் கறுத்து போகாது. பூஜை சாமான்களில் இருக்கும் வேலைப்பாடுகள் நிறைந்த இடத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்க அதற்கென தனியாக உபயோகப்படுத்தாத டூத் பிரஷ் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். இந்த பிரஷ்ஷால் நீங்கள் தேய்த்தால் ரொம்ப சுலபமாக இண்டு இடுக்குகளில் இருக்கக் கூடிய அழுக்குகளும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
அதிகம் புளித்து போன இட்லி மாவு கொஞ்சம் இருந்தா கூட தூக்கி வீசாதீங்க, மறக்காம இந்த 2 விஷயத்தை உங்கள் வீட்டிலும் செஞ்சு பாருங்க யூஸ்புல்லா இருக்குமே!

பிறகு கழுவி சுத்தம் செய்த பின் கொஞ்சம் கூட ஈரம் இல்லாமல் காட்டன் துணியால் துடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இது ரொம்பவும் முக்கியமானது. ஈரத்துடன் அப்படியே காய வைத்து விட்டால் ஆங்காங்கே கருப்பு புள்ளிகள் தோன்றிவிடும். ஈரத்துணியால் துடைத்ததும், கொஞ்சம் பவுடர் அல்லது விபூதி போட்டு தேய்த்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் மஞ்சள் குங்குமம் வைத்து அலங்கரித்துக் கொள்ளலாம். இந்த முறையில் நீங்கள் பித்தளை சாமான்களை துலக்கி வைத்தால் அடிக்கடி துலக்க வேண்டிய அவசியம் இல்லை. மாதத்திற்கு ஒரு முறை துலக்கினால் போதும், அந்த அளவிற்கு உங்களுக்கு நீண்ட நாட்களுக்கு கறுத்து போகாமல் அப்படியே இருக்கும்.

- Advertisement -