நீங்கள் ஆசையாய் வளர்த்த செடிகள் இந்த மழைக்காலத்தில் வீணாகி விடுமோ என்ற கவலை பட தேவையே இல்லை. இதோ எளிமையான மழைக்கால செடி பராமரிப்பு குறிப்புகள்.

- Advertisement -

மழைக்காலம் வந்து விட்டாலே தோட்டம் வைத்து பராமரிப்பவர்களுக்கு கொஞ்சம் கடினமான காலக் கட்டம் தான். இது மழை நேரத்தில் பார்த்து பார்த்து வைத்த செடிகள் எல்லாம் தண்ணீர் தேங்கி, பூச்சி அரித்து, பாதி செடிகளுக்கு மேல் வீணாகி விடும். இந்த நேரத்தில் செடிகளுக்கு எந்த உரங்களையும் கொடுக்க முடியாது. இந்த மழைக்காலத்தில் செடிகளை பாதுகாக்க சின்ன, சின்ன குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால் செடிகள் பட்டுப் போகாமலும், அழுகாமலும் பார்த்துக் கொள்ளலாம் அந்த குறிப்புகள் இதோ இந்த பதிவில்.

மழைக்காலம் தொடங்கி இருக்கும் இந்த நேரத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, செடிகளில் அடியில் தண்ணீர் வடிய இருக்கும் துளைகள் சரியான முறையில் இருக்கிறதா, அல்லது அடைப்பு இருக்கிறதா என்பது தான். முதலில் இதை சரி பார்த்துக் கொள்ளுங்கள் அதில் அடைப்பு இருந்தால் தண்ணீர் தங்கி செடிகள் வீணாகி விடும்.

- Advertisement -

மண்ணை சுற்றி நன்றாக கிளறி விடுங்கள் மண் இறுகி இருக்கும் பொழுது தண்ணீர் இறங்கி கீழே செல்லாமல் மேலும், மேலும் இறுகி வேரில் பரவ வாய்ப்பில்லாமல், வேர் அழுகி செடிகள் பட்டு போய் விடும் எனவே மண்ணை நன்றாக கிளறி விடுங்கள்.

மழைக்காலத்தின் ஈரத்திற்கு புதுப்புது பூச்சிகள் செடிகளை தாக்க ஆரம்பிக்கும். அதற்கு கொஞ்சம் மஞ்சள் தூளை போட்டு விடலாம். செடியில் ஈரம் குறைவாக இருந்தால் தண்ணீரில் கலந்து தெளித்து விடுங்கள்.

- Advertisement -

படிகார கல் பொடியையும் மழைக்காலத்தில் இந்த செடிகளுக்கு கொடுக்கலாம். இதன் சத்துக்கள் செடிகளுக்கு அவசியம் தேவைப்படும் பரிகாரத்தை வாங்கி பவுடர் செய்து அதையும் செடிகளில் தூவி விடலாம்.

மணல் ஈரமாக இருக்கும் சமயத்தில் கட்டாயமாக அதில் எறும்புகள் அதிகம் வரும். இதை போக்க இந்த நேரத்தில் ஈரப்பசை அதிகமாக இருக்கும் எனவே உரங்கள் எதையும் ஊற்ற முடியாது. அதற்கு சமையலுக்கு பயன்படுத்தும் பட்டையை பவுடர் செய்து செடிகளின் தண்டு பகுதிகளில் லேசாக தூவி விடலாம்.

- Advertisement -

இதே போல் சாம்பலும் பயன்படுத்தலாம் இதுவும் செடிகளுக்கு நல்ல உரம். முன்பெல்லாம் இதை அதிக அளவில் பயன்படுத்தி வந்தார்கள் சாம்பலையும் மணலில் தூவி விடலாம். இதில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது மழைக்காலத்தில் செடிகள் செழித்து வளர அதிகம் தேவைப்படும்.

மழை விட்ட ஒன்று இரண்டு நாள் கழித்து கட்டாயமாக செடிகளுக்கு காய்ந்த மாட்டுச்சாண உரம் அல்லது மண்புழு உரம் இரண்டில் ஏதாவது ஒன்றை கொடுத்து விடுங்கள். ஏனென்றால் மழை பெய்து செடிகளில் இருக்கும் சத்துக்கள் எல்லாம் வெளியேறி இருக்கும் எனவே மழை விட்டவுடன் முதலில் இதை செய்து விடுங்கள் செடிகள் அப்போது தான் பழைய படி நன்றாக வளரும் புதிய கிளைகள் வந்து மொட்டுக்கள் வைக்கும்.

இந்த மழைக்காலத்தில் சிறு சிறு செடிகள் நீங்கள் வைத்து இருந்தால் அந்த செடிகளுக்கு அருகில் ஒரு குச்சியை நட்டு செடியை அணைத்து கட்டி விடுங்கள். முடிச்சு போடக் கூடாது நார் அல்லது காட்டன் துணி கிழித்து அதை கொண்டு கட்ட வேண்டும் கயிறு கொண்டு கட்டி விட்டால் செடி வளர்ச்சி பாதிக்கும்.

மழை நேரங்களில் மணலை நாம் அடிக்கடி கொத்தி விட வேண்டும். அப்போது தான் செடிகளின் வேர் பகுதிக்கு ஆஃசிஜன் சென்று செடி வளரும் தண்ணீரும் தேங்காமல் வடிந்து விடும்.

இந்த நேரங்களில் கிளைச் செடிகளும் அதிகம் வளரும் அதை அவ்வப் போது நீக்கி விட்டால் நல்லது. இல்லை என்றால் நாம் செடிகளுக்கு கொடுக்கும் சிறு சிறு உரங்களும் அந்த கிளை செடிகள் உறிந்து செடிகள் வளர தடைப்பட்டு விடும். அதே போல செடிகளிலும் தேவையற்ற இலைகள் இருந்தால் அதையும் நீக்கி விடுங்கள். இந்த குறிப்புகள் அனைத்தும் இந்த மழைக்காலத்தில் உங்கள் செடிகள் வீணாக்காமல் நன்றாக செழித்து வளர உதவு செய்யும்.

- Advertisement -