எண்ணெய் குடிக்காத மொறு மொறு உளுந்து வடை செய்ய இந்த ஒரு பொருளை சேர்த்து சுடுங்க. இப்படி சுட்டா எண்ணெய் கையிலேயும் படாது, வடையிலும் இருக்காது. இதுவரை யாருக்கும் தெரியாத அந்த சீக்ரெட்டை தெரிஞ்சிக்கலாம் வாங்க.

ulunthu vadai
- Advertisement -

பொதுவாக வீட்டில் விசேஷ நாட்கள் பண்டிகை நாட்களில் சமையல் என்றாலே அது வடை பாயாசத்துடனான சாப்பாடு தான். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வடை எனில் அதுவும் பெரும்பாலும் உளுத்தம் பருப்பு வைத்து செய்யப்படும் இந்த மெதுவடையாகத் தான் இருக்கும். ஆனால் இந்த வடை பெரும்பாலோனருக்கு சரியாக வராது. ஒன்று கல்லு போல மாறி விடும் அல்லது எண்ணெய் குடித்து விடும். இந்த சமையல் குறிப்பு பதிவில் இந்த மெதுவடையை கொஞ்சம் கூட எண்ணெயை குடிக்காமல் அதிக மொறு மொறுப்புடன் சுவையாக செய்வது எப்படி என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை 

இந்த வடை செய்ய முதலில் ஒரு கப் அளவு உளுத்தம் பருப்பை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகு உளுந்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி தட்டு போட்டு இரண்டு மணி நேரம் வரை அப்படியே ஊற வைத்து விடுங்கள். உளுந்து இரண்டு மணி நேரம் கழித்து தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். உளுந்து ஊற வைத்த தண்ணீர் இருக்கட்டும் அதை வீணாக்க வேண்டாம்.

- Advertisement -

அடுத்து தண்ணீர் இல்லாமல் வடித்த உளுந்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் ஒரு முறை நன்றாக அரைத்த பிறகு உளுந்து ஊற வைத்து எடுத்து தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நல்ல ஒரு கெட்டியான பதத்திற்கு இந்த மாவை அரைத்துக் கொள்ளுங்கள். இதில் கடைசியாக ஒரு உருளைக்கிழங்கை வேக வைத்து சின்ன சின்னதாக நறுக்கி அரைத்துக் கொள்ளுங்கள். இதில் உருளைக்கிழங்கை சேர்க்கும் போது வடை எண்ணெயும் குடிக்காது. அதே நேரத்தில் அதிக மொறுமொறுப்பு தன்மையுடனும் இருக்கும். இந்த டிப்ஸ் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

அடுத்து அரைத்த மாவை ஒரு பவுலில் சேர்த்த பிறகு ஒரு மீடியம் சைஸ் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி இவைகளை பொடியாக நறுக்கி சேர்த்த பின்பு அரை ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து மாவை கொஞ்சம் அடித்து விடுங்கள். இப்படி செய்யும் போது மாவு உபரியாகி சுடும் போது உள்ளே சாஃப்ட்டாக இருக்கும்.

- Advertisement -

மாவை தயார் செய்து வைத்த பிறகு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீக்கு மாற்றிய பிறகு டீ வடிகட்டும் சில்வர் வடிகட்டியில் கலந்து வைத்த மாவை கொஞ்சமாக எடுத்து அதன் மேல் வைத்து நடுவில் துளை போட்டு அப்படியே எண்ணெயில் போடுங்கள். மாவை கையிலே எடுத்து போட முடிபவர்கள் சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி போடத் தெரியாதவர்கள் இந்த முறையை முயற்சி செய்யுங்கள். இதனால் கையிலும் எண்ணெய் படாது. இப்படி சுட்டு எடுக்கும் வடையிலும் எண்ணெய் இருக்காது.

இதையும் படிக்கலாமே: பெண்களுக்கு ஏற்படக்கூடிய அனைத்து வகையான நோய்களையும் தீர்க்க உதவும் அத்திக்காயை வைத்து இப்படி ஒரு முறை பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

இதில் குறிப்பிட்டுள்ள டிப்ஸை எல்லாம் சரியாக பின்பற்றி வடை சுட்டுப் பாருங்க. இதுவரைக்கும் இப்படி ஒரு மெதுவடைய நீங்க சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. அவ்வளவு ருசியாவும் கிறிஸ்ப்பியவும் இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க

- Advertisement -