திடீரென்று மீள முடியாத கஷ்டத்தில் சிக்கிக் கொண்டால் உடனடியாக இதை மட்டும் முதலில் செய்யுங்கள். சுலபமாக கஷ்டத்தில் இருந்து மீண்டு வந்து விடலாம்.

temple-prayer
- Advertisement -

மீள முடியாத கஷ்டம் என்பது எப்போது வேண்டும் என்றாலும், யாருக்கு வேண்டும் என்றாலும் வரலாம். யாருடைய தலைவிதி எப்படி அமைந்திருக்கின்றது என்பது யாருக்குமே தெரியாது. அந்த பிரம்மா நம்முடைய தலைவிதியை எழுதும் போது கூட தலைக்கு பின்னால் வைத்து தான் எழுதுவாராம். பிரம்மா என்ன எழுதுகிறார் என்பது அவருக்கே தெரியாதாம்? எழுதி முடித்த பின்பு எடுத்து வாசித்து பார்க்கும் போது தான் தெரியுமாம், இந்த மனிதருக்கு எதற்கு இவ்வளவு பெரிய கஷ்டமான தலைவிதி அமைந்திருக்கிறது என்று. ஏனென்றால் நமக்கு என்ன நடக்கப் போகிறது என்பது முன்கூட்டியே தெரிந்து விட்டால், நம்முடைய மனம் அதை தாங்காது. நம்முடைய தலைவிதி என்ன என்பது நமக்கு முன்கூட்டியே தெரிந்து விட்டால் அதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டுதான் இருப்போம். தவிர வாழ மாட்டோம். (பிரம்மாவே அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் தான் தலைவிதையை பின்பக்கம் வைத்து எழுதிக் கொண்டிருக்கின்றார்.)

விதியின் காரணமாக நம்மை சூழக்கூடிய கஷ்டத்திலிருந்து வெளிவருவது எப்படி. முதலில் தீராத துன்பங்கள் துயரங்கள் வரும்போது கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். கஷ்டம் வந்தால் தான் கோவிலுக்கு செல்ல வேண்டுமா என்ற கேள்வி நிச்சயம் இங்கே எழும். தினமும் கோவிலுக்கு செல்ல வேண்டும். அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது. இருப்பினும் முடியாத சூழ்நிலையில் இருக்கிறீர்கள். தினமும் கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றால் வீட்டில் விளக்கு ஏற்றி இறைவழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

திடீரென்று பெரிய கஷ்டம், தொழில் முடக்கம், வீட்டில் சண்டை சச்சரவு, வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. மன கவலை, பண பிரச்சனை, கடன் சுமை, என்ன செய்வது. கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்து விட்டு சிறிது நேரம் மனதை அமைதியாக வைத்து அந்த இடத்தில் தியான நிலையில் உங்களுடைய வேண்டுதலை வைக்க வேண்டும். ஏனென்றால் நேர்மறை ஆற்றல் நிரம்பி இருக்கக்கூடிய இடம் கோவில். ஆகாயத்தில் இருந்து இறை சக்தியை, நேர்மறை ஆற்றலை ஈர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் கும்பாபிஷேகங்கள் செய்து கோபுர கலசங்கள் நிறுவப்பட்டுள்ளன.

அந்த இடத்திற்கு சென்று நம்முடைய கஷ்டங்களை சொல்லி இறை வழிபாடு செய்யும்போது இந்த பிரபஞ்சத்திலிருந்து நல்ல ஆற்றல் நேரடியாக நம்மை வந்து சேரும். அதனால் தான் கஷ்டம் வந்தால் முதலில் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். கோவிலுக்கு சென்று இறைவனுக்கு நடக்கும் அபிஷேகங்களை பார்க்கலாம். அடுத்து அபிஷேகத்தில் இருந்து வெளிவரக்கூடிய நீர் மிக மிக சக்தி வாய்ந்த நீர்.

- Advertisement -

இதை கோமுக தீர்த்தம் என்று சொல்லுவார்கள். அபிஷேகம் நடந்து முடிந்து அப்படியே வெளியே வரும். கோவிலை வலம் வரும்போது நாம் இந்த கோமுக தீர்த்தத்தை பார்த்திருப்போம். அந்த அபிஷேக தண்ணீரை கூட எடுத்து தலையில் தெளித்துக் கொள்வோம் அல்லவா. அதை ஒரு பாத்திரத்தில் பிடித்து வீட்டிற்கு கொண்டு வாருங்கள்.

அந்தத் தண்ணீரை நன்றாக தெளிய வைத்து வடிகட்டி பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இந்த தீர்த்தத்தை பிரச்சனை என்று வரும்போது உங்களுடைய வீட்டின் மூளை முடுக்குகளில் தெளிக்கலாம். உங்கள் மேல் தலை உச்சியில் படும்படி நன்றாக தெளித்துக் கொள்ளலாம். தொழிலில் நஷ்டம் என்றால் தொழில் செய்யும் இடத்திலும் தெளித்து விடலாம். நிலை வாசல் படியிலும் தெளித்து விடலாம். பணம் வைக்கும் பெட்டியில் கூட லேசாக இந்த நீரை தெளிக்கலாம்.

இப்படி செய்யும் போது உங்களை சுற்றி இருக்கும் கெட்ட ஆற்றல் உங்களை விட்டு நீங்கும். உங்களை துரத்தி வரும் துன்பம் உங்களை விட்டு நீங்கி செல்லும். தீராத கஷ்டத்திற்கு இவ்வளவு சுலபமான பரிகாரமா என்று சிந்திக்காதீங்க. இந்த பரிகாரத்திற்கு ஈடு இணை இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது. கோவிலில் இருக்கும் இறைவனுக்கு சொல்லப்படும் வேதங்களும் மந்திரங்களும் இன்று நேற்று எழுதப்பட்டவை அல்ல. காலம் காலமாக நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வரக்கூடிய விஷயங்கள். அந்த சக்தி அனைத்தும் ஒன்றாக சேர்ந்தது தான் அங்கே இருக்கும்.

இறை சக்தி நிறைந்த அந்த சிலையின் மேல் ஊற்றப்பட்டு வெளிவரக்கூடிய தண்ணீர் தான் அபிஷேக தண்ணீர். அதற்கு அத்தனை மகத்துவம் இருக்கிறது. கஷ்டத்தில் இருக்கும் போது இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். பலனை நீங்களே உணர்வீர்கள்.

- Advertisement -