அதிகம் எண்ணெய் சேர்க்காமல் மசாலா உதிராமல் மீனை பொரிப்பது எப்படி

fish fry
- Advertisement -

அசைவ வகைகளில் மீன் குழம்பு மீன் வறுவலுக்கு என தனியாக ஒரு கூட்டமே இருக்கும். அசைவத்தில் மற்ற வகைகளை விட மீனுக்கென தனியாக ஒரு சுவை உண்டு. இந்த மீனை பொறுத்த வரையில் குழம்பு வைப்பதாக இருந்தாலும் சரி பொறிப்பதாக இருந்தாலும் அதற்கான பக்குவத்தில் தான் செய்ய வேண்டும். அப்படி மீனை பக்குவமாக அதே நேரத்தில் மசாலா உதிராமல் குறைந்த எண்ணையில் எப்படி பொரிப்பது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்த மீன் பொரிக்க உங்களுக்கு விருப்பமான எந்த மீனாக இருந்தாலும் அதை வாங்கி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். மீனை வாங்கும் போது கவனமாக பார்த்து வாங்க வேண்டும். பழைய மீனாக வாங்கி விட்டால் நீங்கள் என்ன தான் பக்குவமாக செய்தாலும் கூட வறுக்கும் போது உடைந்து விடும்.

- Advertisement -

ஒரு அகலமான பாத்திரத்தில் சுத்தம் செய்து வைத்த மீனை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் குழம்பு மிளகாய்த் தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, கால் டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் கான்பிளவர் மாவு இந்த மாவு சேர்க்கும் போது மசாலா உதிராமல் அனைத்தும் மீனுடன் கலந்து இருக்கும். இவை எல்லாம் சேர்த்த பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் சாறையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த மீனில் தண்ணீரே சேர்க்காமல் மீனில் இருக்கும் தண்ணீரிலே இந்த மசாலாவை முழுவதுமாக கலந்து விடுங்கள். ஒரு வேளை தண்ணீர் ஊற்ற வேண்டும் என தோன்றினால் ஒரே ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். இதனால் மசாலா முழுவதும் மீனின் மீது நன்றாக ஒட்டிக் கொள்ளும்.

- Advertisement -

நீங்கள் பொரிக்கும் போது கொஞ்சம் கூட மசாலா உதிராது.மீனில் மசாலாவை நன்றாக கலந்த பிறகு ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அடுத்து அடி அகலமான ஒரு பேனை எடுத்துக் கொள்ளுங்கள். இது போல அடிப்பக்கம் அகலமான பேனில் மீனை வறுக்கும் போது உங்களுக்கு அதிகமான எண்ணெய் செலவு ஆகாது.

இப்போது பேன் நன்றாக காய்ந்தவுடன் நான்கு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த எண்ணெய் நன்றாக சூடான பிறகு மசாலா கலந்து வைத்த மீனை ஒன்றுடன் ஒன்று ஒட்டாதவாறு வைத்த பிறகு அடுப்பை மிதமான தீக்கு மாற்றி விடுங்கள். ஐந்து நிமிடம் வரை மீனை அப்படியே வேக விடுங்கள். அதன் பிறகு மெதுவாக மறுபுறம் திருப்பிப் போடுங்கள். மீன் ஒருபுறம் வெந்து சிவந்த பிறகு மறுப்புறம் திருப்பி போடுங்கள். மீன் வேகும் முன் திருப்பினாலும் உடையும்.

இதையும் படிக்காலமே: இட்லி மாவு போண்டா உள்ளே சாப்டாவும் மேல நல்லா மொறு மொறுன்னு கிறிஸ்ப்பியாவும் வர இந்த பொருளை சேர்த்து தான் செய்யணும். இந்த டிப்ஸ் பாலோ பண்ணி போண்டா சுட்டு பாருங்க சூப்பரா இருக்கும்

மீனை திருப்பிப் போட்டு மறுபடியும் ஐந்து நிமிடம் வரை வெந்த பிறகு மீனை எடுத்து விடுங்கள். பேனில் மீதம் இருக்கும் மீனையும் அதே எண்ணெயில் பொரித்து விடலாம். இந்த முறையில் நீங்கள் மீனை பொறித்தால் மசாலா உதிராமல் குறைந்த எண்ணையில் மொறு மொறுவென்று இருப்பதோடு மீனின் சுவையும் அட்டகாசமாக இருக்கும். நீங்களும் ஒரு முறை இப்படி மீனை பொரிச்சு பாருங்க.

- Advertisement -