பிரிட்டிஷ் அதிகாரிக்கு காட்சி அளித்த மீனாட்சி அம்மன் பற்றி தெரியுமா ?- உண்மை சம்பவம்

Meenatchi Amman

மனிதர்களுக்குத்தான் இனம், மதம் பேதமெல்லாம், அனைத்திற்கும் அதிபதியாகிய அந்த இறைவனுக்கு இத்தகைய சிறுபிள்ளைத்தனமான பேதங்கள் இல்லை. தன்னை உண்மையாக வழிபடுபவர் எந்த இன, மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவருக்கு அருள் புரிய மட்டுமே அவ்விறைவனுக்குத் தெரியும். அப்படி வேறொரு இன மற்றும் மதத்தைச் சார்ந்த தன் பக்தனுக்கு ஒரு அம்மன் அருள் புரிந்த கதையை இங்கே காணலாம்.

Meenatchi Amman temple

அது 18 ஆம் நூற்றாண்டு. வியாபாரத்திற்காக நம் நாட்டிற்கு வந்த ஆங்கிலேயர்கள் தங்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை நாடு முழுவதும் ஸ்தாபித்திருந்த நேரம். அப்போது மதுரை மாநகரத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டு அவ்வூருக்கு வந்தார் “பீட்டர் ரேவ்ஸ்” என்ற ஆங்கிலேய அதிகாரி. வந்த சிறிது காலத்திலேயே மதுரை மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். ரேவ்ஸ் அனைவரையும் சமமாகக் கருதி அரசு நிர்வாகம் செய்ததால் அவ்வூர் மக்கள் அவரின் சமதர்ம ஆட்சி மதுரையின் முற்கால பாண்டியரின் ஆட்சி முறையை ஒத்திருந்ததால் அனைவரும் அவரைப் “பீட்டர் பாண்டியன்” என்று அழைக்கத்தொடங்கினர்.

அப்படி அவர் மதுரை நகரை நிர்வாகம் செய்யும் போது மதுரையின் அடையாளமான “ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரரின்” கோவிலையும் நிர்வகிக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாக அவர் அடிக்கடி மீனாட்சி அம்மனின் கோவிலுக்குள் செல்ல வேண்டியிருந்தது. அப்படியான சமயங்களில் கோவிலின் பிரம்மாண்டத்தையும், அக்கோவிலின் சடங்குகளையும் கண்டு ஆச்சரியம் அடைந்தார். பிறப்பால் தான் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் மீனாட்சி அம்மனை மனதால் பிராத்தித்தார்.

Meenatchi amman

 

- Advertisement -

ஒரு சமயம் மழைக்காலத்தில், இரவு நேரத்தில் மதுரை மாநகரத்தில் கடுமையான மழைபொழிந்து கொண்டிருந்தது. அந்நேரத்தில் பீட்டர் பாண்டியன் தன் மாளிகையில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் ஒரு சிறுமி பீட்டரின் அறைக்குள் நுழைந்து, அவரை உறக்கத்திலிருந்து எழுப்பி, அவர் கையைப் பற்றிக்கொண்டு அவரை அம்மாளிகையிலிருந்து வெளியே அழைத்து வந்தாள். சற்று நேரத்தில் ஒரு மிகப்பெரிய இடியொன்று அம்மாளிகையின் மீது விழுந்து அம்மாளிகை தரைமட்டமாகியது. இதைக் கண்டு அதிர்ந்த ஆங்கிலேய அதிகாரி, தன் உயிரைக் காப்பாற்றிய அந்த சிறுமி யாரென்று அவளிடம் விசாரித்தார். அதைத் தெரிந்துகொள்ள தன்னைப் பின்தொடருமாறு கூறி அச்சிறுமி முன்னே நடக்க ஆரம்பித்தாள் பீட்டரும் அவளை பின்தொடர்ந்தார்.

meenatchi amman temple

அப்படி அவர்கள் இருவரும் நடந்து மீனாட்சி அம்மன் கோவிலருகே வந்த போது, அந்த சிறுமி பீட்டரைப் பார்த்து சிரித்து விட்டு, “மீனாட்சி அம்மன்” கோவிலுக்குள் சென்று மறைந்தாள். அதைக்கண்ட பீட்டர் சாட்சாத் அந்த மீனாட்சி அம்மனே சிறுமியாக வந்து தன் உயிரைக் காப்பாற்றியதை எண்ணி ஆனந்தம் அடைந்தார்.

இதையும் படிக்கலாமே:
பூதத்தின் சாபம் நீக்கிய ஜோதிடன் – விக்ரமாதித்தன் கதை

இதன் பிறகு தன்னிடமிருந்த விலையுயர்ந்த ஆபரணங்களை, இக்கோவிலுக்கு காணிக்கையாகத் தந்தார். இறந்த பிறகு தன்னை இந்த மதுரை நகரத்திலேயே அடக்கம் செய்து விடுமாறு கூறினார்.அவர் இறந்த பிறகு அவ்வாறே செய்யப்பட்டது.