நீங்க டீ போடுற டைம்குள்ளேயே இந்த ஸ்நாக்ஸை ரெடி பண்ணிடலாம். மீந்த சாதத்தை கூட வீணாக்காமல் இப்படி சூப்பர்னா ஸ்நாக்ஸ் செய்யலாம்னு உங்களுக்கு தெரியுமா?. ஈஸியான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெசிபி.

- Advertisement -

முன்பெல்லாம் காலையில் வடித்த சாதம் மிந்து விட்டால் தண்ணீர் ஊற்றி வைத்து அடுத்த நாள் அதை பழைய சாதமாக மாற்றி சாப்பிடுவது தான் நம் வழக்கம். ஆனால் இப்பொழுதெல்லாம் சாதம் மிந்து விட்டால் அதை அடுத்த வேலைக்கு கூட சாப்பிடுவது இல்லை. அந்தந்த நேரத்திற்கு புதிதாக எதையாவது சமைத்து சாப்பிடும் பழக்கத்திற்கு வந்து விட்டோம். அதுவும் இந்த மழை நேரத்தில் சாதம் மிந்து விட்டால் அது சில்லென்று ஆறி விடும். சாப்பிடவும் முடியாது தண்ணீர் ஊற்றி வைத்து கஞ்சியாகவும் குடிக்க முடியாது. இந்த மாதிரி சூழ்நிலையில் காலையில் வடித்த சாதம் மிந்து விட்டால் அதை வைத்து மாலை வேளையில் ஒரு அருமையான ஸ்னாக்ஸ் தயார் செய்து கொடுக்கலாம் அது எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோமா.

தேவையான பொருட்கள்: சாதம் – 1 கப், முட்டை – 2, கடலை மாவு- 1/2 கப், வெங்காயம் – 2, பச்சை மிளகாய் -2, மஞ்சள் தூள் -1/4 கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் -1/2 டீஸ்பூன், உப்பு -1/4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை, எண்ணெய் – 200 கிராம், கறிவேப்பிலை, கொத்துமல்லி – 1 கைப்பிடி அளவு.

- Advertisement -

இதை செய்ய பழைய சாதம் மீந்து இருந்தால் தான் செய்ய வேண்டும் என்பது இல்லை சிலருக்கு சாதம் குழைய வெந்தால் பிடிக்காது சில நேரங்களில் அப்படி ஆகி விடும் அது போல சமயங்களிலும் இந்த சாதத்தை வீணாக்காமல் குழைந்த சாதத்திலும் இதை செய்யலாம். இந்த ஸ்நாக்ஸ் செய்ய சாதம் குழைந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

ஒருவேளை மீந்த சாதத்தை நீங்கள் ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால் எடுத்து கொஞ்ச நேரம் வெளியில் வைத்து சாதம் விறைப்பு தன்மை நீங்கிய பிறகு தான் செய்ய வேண்டும். சாதம் விரைப்பாக இருந்தால் இந்த ஸ்நாக்ஸ் நன்றாக வராது.

- Advertisement -

இப்போது மீந்த ஒரு கப் சாதத்தில் முட்டை ஊற்றி, சாதத்தையும் முட்டையும் நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டும் சேர்ந்து நல்ல ஒரு பேஸ்ட் பதத்திற்கு வர வேண்டும். அந்த அளவிற்கு இதை மசிக்க வேண்டும்.

அடுத்ததாக இதில் கடலைமாவை சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை எடுத்து பொடி பொடியாக நறுக்கி அதையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் அதிகமாக இருந்தால் இது இன்னும் சுவை கூடுதலாகவே கிடைக்கும். அத்துடன் இரண்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி அனைத்தையுமே பொடி பொடியாக இதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இவற்றுடன் மஞ்சள் தூள், உப்பு கால், மிளகாய்த்தூள், என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்த பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் சூடானவுடன் இதை சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் சேர்த்து பொறுத்துக் கொள்ளுங்கள். எண்ணை நல்ல சூட்டுடன் இருக்க வேண்டும் இல்லை என்றால் இந்த ஸ்னாக்ஸ் கிரிஸ்ப்பியாக இருக்காது.

இதையும் படிக்கலாமே: ரேஷன் கடையில் கொடுக்கும் துவரம் பருப்பில் மொறுமொறு வடை செய்யலாமா? துவரம் பருப்பு இருந்தா சட்டுனு இதை செஞ்சு பாருங்க அசந்து போவீங்க!

அவ்வளவுதான் இந்த ஸ்நாக்ஸ் செய்ய அதிக நேரம் எடுக்காது சீக்கிரத்தில் செய்து கொடுத்துவிடலாம் ஈவினிங் நேரத்தில் டீயுடன் சாப்பிட ஒரு அருமையான ஸ்னாக்ஸ்.

- Advertisement -