மீசை தாடி கருகருவென்று அடர்த்தியாக வளர இதை செய்தால் போதும்.

Thadi meesai valar tips
- Advertisement -

ஆண்களுக்கு மீசை மற்றும் தாடி தனி அழகு தான். இளைஞர்கள் பலர் தங்களுக்கு எப்போது மீசை தாடி வளரும் என்று ஏங்குவதுண்டு. மீசை வந்துவிட்டாலே ஆண்களுக்கு ஒரு தன்னம்பிக்கை வரும் என்று கூட சிலர் சொல்வதுண்டு. ஆனால் சில ஆண்களுக்கு 20 வயதை கடந்தும் கூட மீசை வருவதில்லை. சிலருக்கு மீசை தாடி வந்தாலும் அது அடர்த்தியாக இருப்பதில்லை.முன்பெல்லாம் மீசை, தாடி வேகமாக வளர அடிக்கடி ஷேவிங் செய்ய வேண்டும் என்று கூறுவதுண்டு. ஆனால் அடிக்கடி அப்படி செய்வதன் மூலம் உண்மையில் மீசை, தாடி வளருமா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் கூறவேண்டும். அடிக்கடி ஷேவிங் செய்வதன் மூலம் ஏற்கனவே இருக்கும் முடி சற்று தடிமனாக மாறுமே தவிர அடர்த்தியாக வராது. சரி எப்படி அடர்த்தியாக வளரச்செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.

மீசை தாடி அடர்த்தியாக வளர குறிப்பு ஒன்று:

பொதுவாகவே முகத்தில் இறந்த செல்கள் அபப்டியே தங்கி இருக்க வாய்ப்புகள் அதிகம். நாம் பயன்படுத்தும் சோப்பு மூலம் இவைகள் சில நேரங்களில் வெளியேறுவதில்லை. ஆகையால் நாம் குளிக்க செல்வதற்கு முன்பு சுத்தமான டூத் பிரஷ்ஷை பாலில் தொட்டு முகத்தில் எங்கெல்லாம் தாடி மீசை அடர்த்தியாக வளர வேண்டுமோ அங்கெல்லாம் மென்மையாக சிறிது நேரம் தேய்த்து முகம் கழுவிவிட்டு பிறகு குளிக்கலாம். இப்படி வாரத்தில் மூன்று முறை செய்வது நல்லது.

- Advertisement -

மீசை தாடி வளர குறிப்பு இரண்டு (Beard growth tips Tamil):

இரவு தூங்குவதற்கு முன்பு வெறும் நீரில் முகத்தை நன்கு கழுவிட்டு, பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நீரை ஊற்றி ஆவிபரக்கும் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அந்த நீராவியில் முகத்தை காண்பித்து ஆவி பிடிக்க வேண்டும். பிறகு முகத்தை நன்கு துடைத்துவிட்டு, எந்த இடத்தில் மீசை மற்றும் தாடி அதிகமாக வளரவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அங்கு கருஞ்சீரக எண்ணெயை தடவி விட்டு, தூங்கி எழுந்து முகத்தை கழுவி விடலாம். வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் இப்படி செய்தும், மற்ற நாட்களில் வெறுமனே முகத்தை மட்டும் கழுவி கருஞ்சீரக எண்ணெயை தடவி வருவதன் மூலம் தாடி, மீசை நன்கு அடர்த்தியாக வர துவங்கும் முகமும் நீங்கள் நினைத்தது போல அழகு பெரும்.

மீசை தாடி வளர குறிப்பு 3:

பொதுவாக உணவு முறை மூலமும் தாடி மீசையை வளரச்செய்ய முடியும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் தாடி மீசை வளர அதிக அளவில் துணை நிற்கிறது. இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது சூரை மீனில் அதிக அளவில் உள்ளது. இந்த வகை மீனை உட்கொள்வதன் மூலம் அது மயிர்கால்களை தூண்டி தாடி மீசை வளர துணை நிற்கிறது. அதே சமயம் முகம் பளிச்சிடவும் இது உதவுகிறது.

- Advertisement -

மீசை தாடி சீக்கிரம் வளர குறிப்பு 4:

சிலருக்கு தாடி மீசை சிறிய அளவில் வளர்ந்திருக்கும் ஆனால் அதிக அளவில் இருக்காது. அது போன்றவர்கள் தாடி மீசைக்கு சிறிதளவு தேங்காய் என்னை தடவி, தலை முடியை மசாஜ் செய்வது போல நன்கு மசாஜ் செய்யலாம். தேங்காய் என்னைக்கு பதிலாக உங்களால் முடிந்தால் வைட்டமின் இ ஆயிலை கூட பயன்படுத்தலாம்.

மீசை தாடி வளர குறிப்பு 5:

இலவங்கப்பட்டையை நன்கு பொடியாக அரைத்து சிறிதளவு எடுத்துக்கொண்டு அதோடு எலுமிச்சை சாறு சேர்த்து அதை தாடி, மீசைக்கு தடவி இருபது நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடலாம். இதை வாரத்தில் இரண்டு முறை செய்து வர தடி, மீசை வளர்ச்சியில் மாற்றம் இருக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: கலரா இல்லைன்னு வருத்தப்படாதீங்க! நம்ம முகமா இது? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு நீங்களும் வெள்ளையாக மாற 3 நாள் இதை செய்தால் போதுமே!

மீசை தாடி வளர குறிப்பு 6 (Beard growth tips Tamil):

அதிகப்படியான ஸ்ட்ரெஸ் உள்ளவர்களுக்கு தாடி மீசை வளர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆகையால் மனதை எப்போதும் சாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள். அதே சமயம் மீன், முட்டை, பி12 அதிகம் உள்ள உணவு வகைகளை அதிகம் தேர்ந்தெடுத்து உண்ணுவதன் மூலமும் மீசை, தாடி நன்கு வளரும்.

மேலே குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு குறிப்பை தகுந்த முறையில் பின்பற்றுவதன் மூலம் ஒரு மாதத்தில் உங்களுக்கு வித்யாசம் தெரிய துவங்கும்.

- Advertisement -