மீந்த சாதத்தில் அல்வா செய்வது எப்படி?

rice halwa
- Advertisement -

அளவாக சமைப்பது என்பது மிகவும் சிரமமான ஒரு செயல். எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை பேருக்கு மட்டுமே சமைக்க வேண்டும் என்று நினைத்தாலும் கண்டிப்பான முறையில் கூடுதலாக சாதம் வந்துவிடும். அப்படி வந்த சாதத்தை தண்ணீர் ஊற்றி பழைய சாதமாக சாப்பிடலாம் என்று நினைத்தாலும் வீட்டில் இருப்பவர்கள் யாரும் அதை விரும்பி சாப்பிட மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மீந்த சாதத்தை வச்சு அல்வா செய்வது எப்படி என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

மீந்து போன சாதத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து மறுநாள் காலையில் அதை பழைய சாதமாக சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல ஆரோக்கியமான நன்மைகள் நடைபெறுகிறது என்று மருத்துவர் ரீதியாக கூறினாலும் பலரும் அதை விரும்பி உண்ணுவதில்லை. அதற்காகவே மீந்த சாதத்தை வைத்து தோசை, இட்லி, வடை என்று பலவகையாக செய்வது உண்டு. அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடக்கூடிய அல்வாவை எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • சாதம் – 2 கப்
  • தண்ணீர் – 1 1/2 கப்
  • தேங்காய்ப்பால் – ஒரு கப்
  • கான்ஃப்ளவர் மாவு – 1/4 கப்
  • சர்க்கரை – 1 1/2 கப்
  • நெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • பாதாம், முந்திரி, திராட்சை – தேவைக்கேற்ப
  • ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை

செய்முறை

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சாதத்தை போட்டு, 1/4 கப்பு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் கான்ஃப்ளவர் மாவை சேர்த்து 1/4 கப்பு தண்ணீர் ஊற்றி மறுபடியும் அரைக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக அறிந்த பிறகு இதில் தேங்காய் பாலை ஊற்றி பல்ஸ் மூடில் இரண்டு முறை வைத்து எடுத்து விட வேண்டும்.

இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஒரு கப் சர்க்கரையை சேர்த்து 3/4 கப் தண்ணீரை ஊற்றி சர்க்கரை கரையும் வரை கிண்ட வேண்டும். சர்க்கரை நன்றாக கரைந்த பிறகு அரைத்து வைத்திருக்கும் விழுதை அதில் ஊற்றி கிண்டி கொண்டே இருக்க வேண்டும். இதை கைவிடாமல் கிண்ட வேண்டும்.

- Advertisement -

இந்த கலவை கெட்டியாகும் பொழுது மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1/2 கப் சர்க்கரையை சேர்த்து 1/4 கப் தண்ணீரை ஊற்றி நிறம் மாறும் அளவிற்கு அடுப்பில் வைத்து கிண்ட வேண்டும். நிறம் நன்றாக மாறிய பிறகு இந்த சர்க்கரை கரைசலை வெந்து கொண்டிருக்கும் சாதத்தில் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். இதன் மூலம் நாம் செயற்கையான நிறமியை சேர்க்காமல் இயற்கையான நிறமியை சேர்ப்போம். இவை அனைத்தும் நன்றாக கலந்து அடுப்பில் இருந்து இறக்கும் பொழுது ஏலக்காய் தூள் இவற்றை போட்டு நன்றாக கிளறி இறக்கி விட வேண்டும்.

இப்பொழுது ஒரு பாத்திரத்தில் இந்த அல்வாவை ஊற்றி சரிசமமாக பரப்பி விட வேண்டும். அலங்காரத்திற்கு தேவையான பாதாம், முந்திரி, உலர் திராட்சை போன்றவற்றை அதன் மீது வைத்து விட வேண்டும். அல்வா நன்றாக ஆரிய பிறகு நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் அதை நறுக்கி பரிமாற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இரும்பு சத்து நிறைந்த முருங்கைக் கீரை பொடி

மீந்து போன சாதத்தை வீணாக்காமல் ஏதாவது ஒரு முறையில் வீட்டில் இருப்பவர்களுக்கு பிடித்தமான உணவை செய்து கொடுக்கலாம்.

- Advertisement -