2021 புத்தாண்டு பலன்கள் – மேஷம்

new-year-mesham
2021 new year rasi palan Mesham

இன்னும் சிறிது நாட்களில் கடக்க இருக்கும் 2020ஆம் ஆண்டின் முடிவிற்காக நம்மில் பலரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறோம். இந்த வருடம் போல் எப்போதும் உலக மக்கள் துயரத்தை சந்தித்திருக்க மாட்டார்கள். உலகின் மிக மோசமான வருடமாக இருக்கும் 2020 கடக்க இருக்கும் நிலையில், வர இருக்கும் புதிய 2021 ஆம் ஆண்டை பற்றிய பயமும் தொற்றிக் கொண்டுள்ளது. இந்த ஆண்டாவது உலக மக்களுக்கு சுபீட்சத்தை தருமா? என்கிற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்கும் அதிகமாகவே இருக்கிறது என்று கூறலாம். அவ்வகையில் வர இருக்கும் 2021 ஆம் ஆண்டிற்கான பலன்களை 12 ராசியில், முதலாவதாக இருக்கும் மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

Mesham Rasi

மேஷ ராசியில் பிறந்த நீங்கள் இதுவரை மனம் தளர்ந்து இருந்தாலும் இனி வரும் காலங்களில் மனோதிடம் அதிகரிப்பதை உணர்வீர்கள். ஆண்டின் தொடக்கத்தை விட, இறுதியில் உங்களுக்கு நல்ல நேரம் ஆனது ஆரம்பிக்கும். உங்கள் ராசிக்கு ராகு, கேது முறையே 2-வது மற்றும் 8-வது வீட்டில் அமர போகின்றார்கள். அதே போல் சனிபகவான் 10-ஆம் இடத்திலும், குரு பகவான் 11-ஆம் இடத்திற்கும் பெயர்ச்சி ஆவார்கள். ஆண்டின் தொடக்கத்திலேயே செவ்வாய் பகவான் உங்களுடைய சொந்த ராசிக்கு வருவதால் நல்ல பலன்களும் உண்டாகும்.

குடும்பம்:
குடும்பத்தைப் பொறுத்தவரை மேஷ ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களே உள்ளன. வீட்டில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இருக்கும் சூழ்நிலையை புரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நலமாகும். ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் ஒருவரை மாற்றி ஒருவருக்கு தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே ஆரோக்கிய ரீதியான அக்கறை கூடுதலாக இருப்பது நல்லது. குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளை மேற்கொள்வதால் இல்லத்தின் மகிழ்ச்சியை அதிகரிக்கலாம். மனதிற்குப் பிடித்த வரன்கள் அமையக்கூடிய யோகம் உண்டு. உங்கள் காதல் திருமணத்தை நோக்கிய பயணத்தில் செல்லும்.

astro wheel 1

வியாபாரம் மற்றும் தொழில்:
தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இறங்கி இருந்த முன்னேற்றத்தை மீண்டும் மேலே தூக்கி செல்ல நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டியது இருக்கும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்குரிய சூழ்நிலைகளையும் நீங்கள் அவர்களுக்கு உருவாக்கி தர வேண்டும். உங்கள் ராசிக்கு சனி பகவான் பத்தாம் இடத்தில் இருப்பதால் திடீர் வாய்ப்புகள் வந்து சேரும். வருகின்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.

- Advertisement -

உத்தியோகம்:
மேஷ ராசியில் பிறந்த உத்தியோகஸ்தர்களைப் பொறுத்தவரை ஓரளவுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் போன்றவற்றில் சாதகப் பலன்கள் கிடைக்கும். மேலதிகாரிகளுடன் இருக்கும் மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை மேம்படும். சக பணியாளர்களிடத்தில் இருந்து வந்த குழப்பங்களும் தீரும். புதிய வாய்ப்புகள் தட்டிப் போகவும் சந்தர்ப்பங்கள் அமையலாம். எனவே புத்திக்கூர்மையுடன் செயல்பட்டால் நல்லது நடக்கும்.

mesham

பொருளாதாரம்:
பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலையை உங்களுடைய சாதுர்யமான நடவடிக்கைகளால் எளிதாக சமாளித்து விடுவீர்கள். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் பொழுது ஒரு முறைக்கு பலமுறை ஆலோசனை செய்வது மிகவும் நல்லது. குரு பகவான் 11-ஆம் இடத்திற்கு வரும் பொழுது பொருளாதார ரீதியான முன்னேற்றங்களை ஏற்படுத்துவார்.

astrology-2

பெண்களுக்கு:
மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு உறுதியான முடிவுகள் எடுக்கும் திறன் வளரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இதுவரை மன உளைச்சலில் இருந்தாலும், அவை படிப்படியாக மாறி தெளிவான சிந்தனையைக் கொடுக்கும். குடும்பத்தில் வேலை பளு அதிகரிப்பதால் உடல் அளவிலும், மன அளவிலும் சோர்ந்து போவதற்கு வாய்ப்புகள் உண்டு. உணவு கட்டுப்பாடு விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருந்தால் நிறைய பிரச்சனைகளை சுலபமாக எதிர் கொள்ளலாம்.

வரவிருக்கும் 2021 ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்கள் ஆகிய உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்