1 ஸ்பூன் பால் பவுடர் இருந்தால் போதும். பாலைவிட உங்களுடைய முகம் தான் வெள்ளையாக இருக்கும் என்றால் பாருங்களேன்.

face
- Advertisement -

வெள்ளை தான் அழகு என்பதை வெள்ளைக்காரர்கள் நம்முடைய ஆழ்மனதில் பதிய வைத்து விட்டு சென்று விட்டார்கள். வெள்ளைதான் அழகு என்று யார் சொன்னது. நம்முடைய நாட்டை பொறுத்தவரை கருப்புதான் கலையான அழகைக் கொடுக்கும். என்னதான் எடுத்துக்காட்டுகலுடன் சொன்னாலும் நமக்கு புரிய போவது கிடையாது. வெள்ளையாக இருக்கக்கூடிய முகம் தான் தேவை என்று அடம் பிடிப்போம் அல்லவா. சரி, உங்களுக்கு வெள்ளையாக வேண்டும் என்று ஆசை இருந்தால் நீங்கள் இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க.

எல்லா மளிகை கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்டிலும் பால்பவுடர் சிறிய பாக்கெட்டில் கிடைக்கிறது. அதை ஒரு சின்ன பாக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள். எலுமிச்சம்பழம் ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் 1 டேபிள்ஸ்பூன் அளவு பால் பவுடர், 1 ஸ்பூன் அரிசி மாவு, எலுமிச்சை சாறு 1 ஸ்பூன், ஊற்றி நன்றாக கலந்து ஒரு ஃபேஸ் பேக் போல தயார் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

மூன்றே பொருட்கள் தான். பால் பவுடர், அரிசி மாவு, எலுமிச்சை பழச்சாறு, தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் ஊற்றி தேவைக்கு ஏற்ப கலந்து கொள்ளுங்கள். முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவி துடைத்து விடுங்கள். அதன் பின்பு இந்த பால் பவுடர் பேக்கை உங்களுடைய முகம் கழுத்து எல்லா இடங்களிலும் நன்றாக அப்ளை செய்து விடுங்கள்.

20 நிமிடங்கள் இந்த பேக் அப்படியே இருக்கட்டும். அதன் பின்பு உங்களுடைய கையையும், முகத்தையும் தண்ணீரில் நன்றாக நினைத்துக்கொண்டு வட்ட வடிவில் லேசாக மசாஜ் செய்து முகத்தை கழுவிப் பாருங்கள். முகம் அவ்வளவு பொலிவாக இருக்கும். இறுதியாக முகத்தை ஐஸ் கியூபை கொண்டு ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் இன்னும் பிரஷ்ஷாக மாறும். முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் அனைத்தும் வெளிவந்து இருக்கும்.

- Advertisement -

ஒருவேளை உங்களுக்கு எலுமிச்சை பழச்சாறு ஒத்துவராது என்றால் அதை சேர்த்துக் கொள்ள வேண்டாம். ரோஸ் வாட்டர் கலந்து கொண்டாலே போதும். அரிசி மாவு உங்கள் வீட்டில் இல்லை என்றால் கடலை மாவையும் பயன்படுத்திக் கொள்ளலாம். வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது ஒரு நாள் விட்டு, ஒரு நாள் இந்த ஃபேஸ் பேக்கை போட்டு வரும் போது உங்களுடைய சருமத்தின் நிறம் கூடிக்கொண்டே செல்லும்.

அதான் நீங்க கூடிய சீக்கிரத்திலேயே வெள்ளையா மாறிவிடுவீர்கள். இதுதவிர முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் வெளியேறி உங்களுடைய முகம் பிரகாசமாக இருப்பதோடு, முகத்தில் இருக்கும் தழும்புகள் படிப்படியாக குறையத் தொடங்கும். ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கு பிடித்திருந்தால் தொடர்ந்து இந்த குறிப்பை பயன்படுத்தி பலன் அடையுங்கள்.

- Advertisement -