இன்னுமா இட்லி செய்ய அரிசி உளுந்து எல்லாம் ஊற வச்சு அரைச்சுக்கிட்டு இருக்கீங்க, இதெல்லாம் எதுவுமே இல்லாமாலே மல்லி பூ மாதிரி இட்லி செய்யலாம் தெரியுமா?

millet idly
- Advertisement -

நம்முடைய தென்னிந்திய உணவு கலாச்சாரத்தில் காலை சிற்றுண்டி என்றால் முதலில் நாம் ஞாபகத்திற்கு வருவது இந்த இட்லி தான். இது மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவு என்றே சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் வந்த விட பாகுபாடும் இல்லாமல் சாப்பிடக் கூடிய ஒரே உணவும் இந்த இட்லி தான். இதை செய்ய வேண்டும் எனில் அரிசி உளுந்து இவற்றை ஊற வைத்து அரைத்து புளிக்க வைத்து என பெரிய வேலை செய்ய வேண்டியது இருக்கும்.

இப்போதெல்லாம் இந்த அளவிற்கு பிராசஸ் செய்யாமல் கடைகளில் கிடைக்கும் இன்ஸ்டன்ட் மாவை வாங்கி கூட இட்லி செய்து கொள்ளலாம். என்ன இருந்தாலும் இட்லி செய்ய அரிசி உளுந்து எதையும் சேர்க்காமல் அதே நேரத்தில் ஆரோக்கியமாக முறையில் மல்லி பூ இட்லி செய்யலாம் என்றால் கொஞ்சம் ஆச்சரியமாக தானே இருக்கிறது. வாங்க அந்த இட்லி ரெசிபியும் எப்படி செய்யறதுன்னு நாம தெரிஞ்சுக்கலாம்.

- Advertisement -

செய்முறை

இந்த இட்லி செய்வதற்கு முதலில் கடைகளில் கிடைக்கும் திணை சேமியா வகைகளில் ஏதாவது ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். இப்பொழுது நிறைய திணை தானியங்களின் சேமியாக்கள் வருகிறது. அதில் உங்களுக்கு விருப்பமானவற்றை வாங்கிக் கொள்ளுங்கள்.

இப்போது நீங்கள் வாங்கிய இந்த தினை சேமியாவை மிக்ஸி ஜாரில் சேர்த்து ரவை பதத்திற்கு உடைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உடைத்து சேமியாவை ஒரு டம்ளரில் அளந்து ஒரு பௌலில் போட்டுக் கொள்ளுங்கள். சேமியா எந்த அளவிற்கு வந்திருக்கிறதோ, அதே அளவிற்கு தயிரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் கால் டீஸ்பூன் உப்பு ஒரு முழு கேரட்டை துருவி சேர்த்துக் கொள்ளுங்கள். இது தவிர உங்களுக்கு வேறு காய்கறிகள் சேர்ப்பதாக இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது காய்கறிகள் சேர்க்காமலும் செய்யலாம்

- Advertisement -

மேலும் இத்துடன் ஒரு கைப்பிடி அல்லது கொத்தமல்லியை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து நாம் ஊற்றிய தயிரின் அளவிற்கு தண்ணீரையும் ஊற்றி இந்த மாவை நன்றாக கலந்து அரை மணி நேரம் வரை மூடி போட்டு வைத்து விடுங்கள். இந்த முறையிலேயே இந்த இட்லி மிகவும் சாஃப்ட்டாக கிடைக்கும் ஒரு வேளை உங்களுக்கு இன்னமும் சாப்டாக கிடைக்க வேண்டும் என நினைத்தால் சிறிதளவு சமையல் சோடாவை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இது தவிர்ப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே: வயிற்றுப்புண், வாய்ப்புண், உடல் உஷ்ணம் தணிய அருமையான சுவையில் ஆரோக்கியமான மணத்தக்காளி கீரை சட்னி வீட்டிலேயே எளிதாக அரைப்பது எப்படி?

இப்போது அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி சூடானவுடன் இட்லி தட்டில் நாம் கலந்து வைத்த மாவை இட்லிகளாக ஊற்றி வைத்து பத்து நிமிடம் வேகவைத்து எடுத்தால் பஞ்சு போல சாஃப்ட் ஆரோக்கியமாக தயார். சுட சுட இந்த இட்லியுடன் நாம் எந்த விதமான சைட் டிஷ் வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம்.

- Advertisement -