புதினா அழகு குறிப்பு

mint beauty
- Advertisement -

பல மருத்துவ குணம் மிகுந்த பொருளாக புதினா விளங்குகிறது. புதினாவை நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் போது அது நம்முடைய உடலில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மைகளை நீக்க உதவுகிறது. அப்படிப்பட்ட புதினாவை நம்முடைய முகத்தில் தடவுவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய நச்சுகளும் நீங்கும். இப்படி முகத்தில் இருக்கும் நச்சுகள் நீங்குவதால் முகம் ஜொலிக்க ஆரம்பிக்கும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் புதினாவை எந்தெந்த வகையில் பயன்படுத்தினால் என்னென்ன பலன் அடைய முடியும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

முகம் பிரகாசமாக இருக்க

ஒரு கைப்பிடி அளவு புதினாவை எடுத்து சுத்தம் செய்து அதை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் பாதி வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக பிசைந்து முகத்தில் தடவி 20 நிமிடம் அப்படியே விட்டுவிட்டு பிறகு குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு நான்கு முறை செய்வதன் மூலம் இயற்கையான பிரகாசத்தை பெற முடியும்.

- Advertisement -

முகப்பருக்கள் நீங்க

ஒரு கைப்பிடி அளவு புதினாவை எடுத்து அரைத்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ள வேண்டும். அரை எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை அதனுடன் சேர்க்க வேண்டும். இப்பொழுது இதை நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். இப்படி தடவுவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய பருக்கள் அனைத்தும் நீங்கும். அதோடு மட்டுமல்லாமல் வறண்ட சருமமும் பொலிவாக தெரியும்.

எண்ணெய் பசை நீங்க

ஒரு கைப்பிடி அளவு புதினாவை எடுத்து நன்றாக அரைத்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு முல்தானி மெட்டி, ஒரு ஸ்பூன் அளவிற்கு தயிர், ஒரு ஸ்பூன் அளவிற்கு தேன் இவை மூன்றையும் கலந்து நன்றாக பேஸ்ட் ஆக தயார் செய்து கொள்ள வேண்டும். இதை முகத்தில் தடவி 20 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி கழுவுவதன் மூலம் முகத்தில் அதிகப்படியாக சுரக்கக்கூடிய எண்ணெய் பசை குறைய ஆரம்பிக்கும். அதோடு நம்முடைய முகத்தின் எச்பி அளவும் சமம் சரிசமமாக இருக்கும்.

- Advertisement -

கருமை நீங்க

ஒரு கைப்பிடி அளவு புதினாவும் பாதி வெள்ளரிக்காயும் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து விழுதாக்கி கொள்ள வேண்டும். இந்த விழுதை முகத்தில் தடவி 20 நிமிடம் அப்படியே உலர விட வேண்டும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை செய்வதன் மூலம் சூரிய ஒளி கதிர்களால் ஏற்பட்ட கருமை அனைத்தும் நீங்கி முகம் இயற்கையிலேயே நல்ல நிறமாக மாறும்.

கரும்புள்ளிகள் நீங்க

ஒரு கைப்பிடி அளவு புதினா இலையை எடுத்து அதை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு முல்தானி மெட்டியையும் ஒரு ஸ்பூன் அளவிற்கு தக்காளி சாறையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி அரைமணி நேரம் அப்படியே விட்டுவிட்டு முகத்தை கழுவ வேண்டும். வாரத்திற்கு மூன்று நாட்கள் இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: செம்பருத்தி ஃபேஸ் க்ரீம்

சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய இந்த புதினாவை நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்காக நாம் எப்படி உணவாக எடுத்துக் கொள்கிறோமோ அதே போல் நம்முடைய சரும ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -