- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்சூப்பரான ஒன் பாட் ரசம் சாதம். இதுநாள் வரைக்கும் இந்த 1 பொருளை போட்டு யாரும்...

சூப்பரான ஒன் பாட் ரசம் சாதம். இதுநாள் வரைக்கும் இந்த 1 பொருளை போட்டு யாரும் ரசம் சாதம் செஞ்சி இருக்கவே மாட்டீங்க. இதன் ருசியில் உங்கள் நாக்கு சொக்கி போகும்.

- Advertisement -

பொதுவாகவே காய்ச்சல் வந்த சமயத்தில், சளி பிடித்த சமயத்தில் ரசம் சாதம் சாப்பிட ரொம்ப ரொம்ப பிடிக்கும். நம்முடைய தமிழ்நாட்டு உணவில் இந்த ரசத்துக்கு அத்தனை முக்கியத்துவம். சுவைக்கு மட்டும் இல்லைங்க இது ஒரு சில ஆரோக்கியத்திற்கும் நன்மை தரக்கூடிய விஷயமாக இருக்கிறது. வழக்கமாக நாம் வைக்கும் ரசம் ஒரு பக்கம் இருக்க, இன்று ஒரு வித்தியாசமான புதினா பூண்டு ரசம் சாதத்தை எப்படி வைப்பது என்று தான் புதுசாக தெரிந்து கொள்ள போகின்றோம். ஒன் பார்ட் ரசம் சாதம். உடனடியாக 20 நிமிடத்தில் செய்துவிடலாம். நேரத்தை கடத்தாமல் நாவூரும் சுவையில் இந்த ஒன் பாட் ரசம் சாதம் எப்படி செய்வது என்று பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.

செய்முறை 

இந்த ரசம் சாதம் செய்வதற்கு முன்பு ஒரு மசாலா பொடி அரைக்கணும். ஒரு குக்கரை எடுத்து அடுப்பில் வைத்து அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, துவரம் பருப்பு 2 ஸ்பூன், வர மல்லி 1 ஸ்பூன், வெந்தயம் 1 சிட்டிகை, சீரகம் 1 ஸ்பூன், மிளகு 1 ஸ்பூன், பூண்டு 4 பல், வரமிளகாய் 2, எல்லாவற்றையும் பொன்னிறமாக வறுத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து 1 டம்ளர் அரிசியை தண்ணீரில் போட்டு 1/2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மீண்டும் அந்த குக்கரை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் 1 பச்சை மிளகாய் போடுங்க. நறுக்கிய தக்காளி பழம் 2, இடித்த பூண்டு பல் 5, போட்டு நன்றாக வதக்கனும். தக்காளியின் பச்சை வாடை போனதும் 1/2 கைப்பிடி அளவு புதினா இலைகளை சேர்த்து வதக்கிக்கோங்க.

அடுத்து பெரிய நெல்லிக்காய் அளவு புளியை, தண்ணீரில் போட்டு நீர்க்க கரைத்து அந்த புளிக்கரைசல் தண்ணீரை குக்கரில் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் ரசப்பொடியையும் போட்டு தண்ணீரை நன்றாக கொதிக்க வையுங்கள். புளியின் பச்சை வாடை நீங்கட்டும். 5 லிருந்து 7 நிமிடங்கள் புளி தண்ணீர் கொதிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு 1 டம்ளர் அளவு அரிசிக்கு நான்கு டம்ளர் அளவு தண்ணீர் தேவைப்படும். புளிக்கரைசலோடு சேர்த்து நான்கு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, ஊற வைத்திருக்கும் அரிசியை இதில் போட்டு, நன்றாக கலந்து விட்டு குக்கரை மூடி 5 லிருந்து 7 விசில் விடவும். சாதம் சூப்பராக வெந்து ரசம் சாதம் தயாராகி இருக்கும். இறுதியாக சூப்பர் தாளிப்பு கொடுக்கணும்.

தாளிப்பு கரண்டியில் 1 ஸ்பூன் நெய்யில், கடுகு, தட்டிய பூண்டு பல் 4, வரமிளகாய் இரண்டு, கருவேப்பிலை 1 கொத்து, போட்டு தாளித்து இதை அப்படியே ரசம் சாதத்தில் கொட்டி கலந்து பரிமாறி பாருங்கள். இதனுடைய டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும். ரெசிபி பிடிச்சவங்க மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்