மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் பெருக இவற்றை செய்யுங்கள்

sevvai

ஒரு மனிதனுக்கு சிறந்த கல்வி, செல்வம் இல்லையென்றாலும் தைரியமான குணம் இருக்கும் பட்சத்தில் நியாயமான விடயங்களில் துணிந்து ஈடுபட்டு, வாழ்வில் மிக உயரிய நிலையை அடையலாம். ஒரு மனிதனுக்கு தைரியமான குணம் அமைய ஜாதகத்தில் அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவான் நல்ல நிலையில் இருக்க வேண்டும். அப்படியான அந்த செவ்வாய் பகவானுக்குரிய நட்சத்திரங்களில் ஒன்றாக மிருகசீரிடம் நட்சத்திரம் இருக்கிறது. இந்த மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கி அதிர்ஷ்டங்களும், யோகங்களும் அதிகம் உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

sevvai

27 நட்சத்திரங்கள் வரிசையில் ஐந்தாவதாக வரும் நட்சத்திரம் மிருகசீரிடம் நட்சத்திரம் ஆகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தின் அதிபதியாக செவ்வாய் பகவான் இருக்கிறார். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதையாக சந்திர பகவான் இருக்கிறார். செவ்வாய் பகவானின் ஆதிக்கம் கொண்டிருப்பதால் இயற்கையிலேயே மிகுந்த தன்னம்பிக்கை மற்றும் தைரியம் கொண்டவர்களை மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் தங்களின் வாழ்வில் மிக உயர்வான நிலையையும், செல்வங்களையும் பெறுவதர்க்கு கீழ்க்கண்ட பரிகாரகங்களை செய்து வருவது நல்லது.

மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு சென்று, சிவனுக்கும் அம்பாளுக்கும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பிறகு அங்கிருக்கும் செவ்வாய் பகவானுக்கு அபிஷேகம் செய்து, சிகப்பு நிற வஸ்திரம் சாற்றி, பூஜைகள் செய்து வழிபட வேண்டும். இந்த பரிகாரத்தை செய்து வந்தாலே செவ்வாய் பகவானால் நன்மையான பலன்கள் ஏற்படும். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வள்ளி-தெய்வானையுடன் இருக்கின்ற முருகன் கோவிலுக்கு சென்று முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இந்த வழிபாடு வாழ்வில் அதிர்ஷ்டங்களை அதிகரிக்கச் செய்யும். திங்கட்கிழமைகள் மற்றும் பௌர்ணமி தினங்களில் சிவபெருமான் சந்திரசூடேஸ்வரராக இருக்கும் சிவன் கோயில்களுக்கு சென்று சிவனை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.

chitra pournami sivan

மிருகசீரிடம் நட்சத்திரத்துக்குரிய தலவிருட்சமாக கருங்காலி மரம் இருக்கிறது. கருங்காலி மரம் தலவிருட்சமாக இருக்கும் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதால் மிருகசீரிட நட்சத்திரங்களின் தோஷங்கள் நீங்குகிறது. கஷ்டத்தில் இருக்கும் உங்கள் உடன்பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு உங்களால் முடிந்த பொருள் உதவி செய்வதும் செவ்வாய் பகவானின் நல்லருளை உங்களுக்கு கிடைக்கச் செய்யும் சிறந்த பரிகாரமாகும். ஏழை பெண்களின் சீமந்தத்திற்கு பொருளுதவி செய்தல் மற்றும் கோயில் குளம், பொதுமக்களுக்கான கிணறு வெட்டுதல் போன்ற காரியங்கள் செய்வதால் உங்களுக்கு தோஷங்கள் நீங்கி வாழ்வில் மேன்மேலும் அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும் ஏற்படுத்தக்கூடிய பரிகாரமாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
தனுசு ராசியினருக்கு அதிர்ஷ்டங்கள் ஏற்படச் செய்யும் பரிகாரங்கள்

இது பன்னிரு மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Mirugasiridam nakshatra dosha pariharam in Tamil. It is also called Mirugasiridam natchathiram in Tamil or Natchathira pariharangal in Tamil or Chevvai bhagavan natchathirangal in Tamil or Mirugasirida natchathira pariharangal in Tamil.