Astrology : மிதுனம் ராசியினர் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக இதை செய்யுங்கள்

mithunam
- Advertisement -

நமது ஜோதிட சாஸ்திரங்களில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. இந்த பன்னிரண்டு ராசிகள் அனைத்துமே நாவாகிரகங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவையாகும். இந்த ராசிகளில் மூன்றாவதாக வரும் ராசி “மிதுனம்” எனும் ராசியாகும். மிதுன ராசிகாரர்கள் தங்களுக்கு ஏற்படும் ராசி தோஷங்களை போக்கி வாழ்வில் பல நன்மைகளை பெறுவதாற்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

12 ராசிக்கட்டங்களில் மூன்றாவதாக வரும் ராசி மிதுனம் ராசியாகும். இந்த மிதுன ராசியின் அதிபதியாக புதன் பகவான் இருக்கிறார். புதனின் ராசி என்பதால் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சிறந்த அறிவாற்றல் மற்றும் கணித திறனும் இருக்கும். இயற்கையிலேயே பணம் சம்பந்தமான விடயங்களில் யோகம் கொண்டவர்களாக இருந்தாலும் இந்த ராசியினருக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்கி வாழ்வில் மேலும் பல அதிர்ஷ்டங்களும், பொருளாதார மேன்மைகளையும் பெற கீழ்கண்ட எளிய பரிகாரங்களை செய்ய வேண்டும்.

- Advertisement -

மிதுன ராசிக்கார்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் நன்மையான பலன்களையும், அதிர்ஷ்டங்கள், யோகங்கள் போன்றவற்றை பெறுவதற்கு புதன் கிழமைகள் தோறும் ஏதாவது வேளை உணவு அருந்தாமலோ அல்லது பால் பழம் மட்டும் சாப்பிட்டோ விரதம் இருப்பது மிதுன ராசிக்குரிய தோஷங்களை போக்கும் சிறந்த பரிகாரமாகும். மாதந்தோறும் வரும் பௌர்ணமி தினங்களில் விரதம் இருப்பதும் உங்களுக்கு சிறந்த பலன்களை உண்டாக்கும். பணம் சம்பந்தமான விவகாரங்களை புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மேற்கொள்வது சிறப்பு.

baby

நீங்கள் காசி, ராமேஸ்வரம் அல்லது வேறு ஏதேனும் தீர்த்தயாத்திரை செல்லக்கூடிய கோயிலில் பசும் பால் தானம் அளிப்பது உங்கள் மிதுன ராசிக்கு உரிய தோஷங்களை நீக்கும் அதியற்புத பரிகாரமாகும். கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கும் வசதி குறைந்த நோயாளிகளுக்கு மருந்துகள் வாங்கித் தருவதும், சிகிச்சைக்காக உதவுவதும் நல்லது. உங்களால் முடிந்த போது 7 வயதிற்கும் குறைவாக இருக்கும் குழந்தைகளை தொட்டு வணங்குவது மற்றும் அவர்களின் ஆசிகளை பெறுவதும் உங்களின் தோஷங்களை போக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
பரணி நட்சத்திர தோஷ பரிகாரம்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Mithuna rasi tips in Tamil. It is also called as Mithuna rasi dosham pariharam in Tamil or Mithuna rasi in Tamil or Mithuna rasi pariharam in Tamil or Mithunam rasi in Tamil.

- Advertisement -