இதையெல்லாம் வச்சு கூட பழைய மிக்ஸிய புதுசா மாத்தலாம்?எப்பவும் போல இல்லாம கொஞ்சம் புதுசா தான் யோசிப்போமே.

- Advertisement -

சில பொருட்கள் இல்லாமல் நம்மால் ஒரு வேலையும் செய்ய முடியாது என்கிற அளவிற்கு நாம் நிறைய பழகிக் கொண்ட பொருட்களில் ஒன்று தான் மிக்ஸி. ஒரு நாளைக்கு ஒருமுறையாவது அந்த மிக்ஸியில் நாம் அரைத்து விடுவோம். மிக்ஸி இல்லை என்றால் அன்று சமைக்கவே தோன்றாது, என்ன செய்வது என்று பெரிய குழப்பம் ஆகிவிடும். அந்த அளவிற்கு மிக்சி அன்றாட தேவைகளில் ஒன்றாகி விட்டது. இப்படி தினமும் உபயோகப்படுவதால் மிக்ஸி சீக்கிரத்தில் பழுதடைந்து பழுதாகி போகிறது. அதற்காக அத்தனை விலை கொடுத்து வாங்கிய மிக்ஸி அப்படியே தூரப் போட்டு விட முடியுமா என்ன? இந்த பழைய மிக்ஸியை புதியதாக மாற்றி சில வழிமுறைகள்.

மிக்ஸியை எளிமையான முறையில் சுத்தம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். அடுத்து ஜாரை எப்படி ஷார்ப் ஆக்குவது என்பதையும் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

- Advertisement -

முதலில் நீங்கள் முகத்திற்கு உபயோகிக்கும் ஏதாவது ஒரு ஃபேஸ் வாஷை எடுத்துக் கொள்ளுங்கள் அடுத்து மிக்ஸியை தேய்த்து சுத்தப்படுத்த ஒரு பழைய டூத் பிரஷ் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு கிண்ணத்தில் இந்த ஃபேஸ் வாஷை கொஞ்சம் சேர்த்து அதில் இந்த பிரஷை தொட்டு மிக்சிக்கு உள்புறம் உங்கள் விரல் வைத்து தேய்க்க முடியாத இடங்களில் எல்லாம் இந்த பிரஷ்ஷில் ஃபேஸ் வாஷ் தொட்டு தேய்த்து பிறகு ஒரு காட்டன் துணி அல்லது டிஷ்யூ பேப்பரோ வைத்து துடைத்து விடுங்கள். மிக்சியில் உள்ள அழுக்குகள் மொத்தமாக வந்துவிடும். மிக்சி ஒயர்யும் கூட இதே முறையில் சுத்தம் செய்யலாம்.

அடுத்தது இதே போன்று டூத் பேஸ்ட்டிலும் செய்யலாம் நீங்கள் உபயோகம் எந்த டுஸ்பேஸ்டாக இருந்தாலும் அதையும் இதைப் போன்று வைத்து தேய்க்கலாம். டூத் பேஸ்ட் உபயோகித்து தேய்க்கும் போது தண்ணீர் சேர்க்க வேண்டாம் அப்படியே நேரடியாக பிரஸ்ஸில் வைத்து தேய்த்து விடலாம்.

- Advertisement -

மிக்ஸி சுத்தம் செய்வதை தெரிந்து கொண்டோம். இப்போது மிக்ஸி ஜாரை எப்படி சுத்தம் செய்வது என்று பார்ப்போம். அதற்கு ஒரு காய்ந்த முட்டை ஓடு, சிறிதளவு பேக்கிங் சோடா, ஒரு டீஸ்பூன் வினிகர் மூன்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்த பிறகு நன்றாக இரண்டு அல்லது மூன்று சுற்று ஓடவிடுங்கள். ஜாரில் உள்ள அழுக்கும் மூடியில் உள்ள அழுக்குமே கூட இதன் மூலம் ஈசியாக எடுத்து விடலாம். இதே கலவை கொண்டு ஜாரின் பின்புறம் உள்ள கறைகளையும் நீக்கலாம்.

இதை இன்னொரு முறையிலும் சுத்தம் செய்யலாம் அதாவது உங்களிடம் இருக்கும் அரிசி பச்சரிசி, புழுங்கல் அரிசி, எந்த அரிசியாக இருந்தாலும் பரவாயில்லை அதில் ஒரு இரண்டு ஸ்பூன் அத்துடன் பேக்கிங் சோடா ஒரு ஸ்பூன் இதை சேர்த்தும் உங்கள் மிக்ஸி ஜாரை சுத்தம் செய்து கொள்ளலாம். இதை வைத்து சுத்தம் செய்த பிறகு அந்த அரிசி பேக்கிங் சோடா பவுடரை கீழே கொட்டாமல் நீங்கள் பூஜை பாத்திரம் தேய்க்கும் போது பீதாம்பரியுடன் இதை சேர்த்தும் தேய்க்கலாம் பூஜை பாத்திரங்களும் பளிச்சென்று ஆகிவிடும்.

- Advertisement -

அடுத்து மிக்ஸி ஜாரின் பிளேடுகள் மங்கி விட்டால் நீங்கள் உடனடியாக அதற்கு புதிய பிளேடு வாங்கி மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. நம்மிடம் இருக்கும் மாத்திரை அட்டை, அதாவது சில்வர் போன்று இருக்கும் அந்த அட்டையை சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி இந்த ஜாரில் போட்டு ஒன்று அல்லது இரண்டு சுற்று சுற்றி எடுங்கள். ஜார் நல்ல ஷார்பாக மாறிவிடும் புதிதாக நீங்கள் பிளேடு மாற்றினால் கூட இத்தனை ஷார்பாக இருக்காது.

இதையும் படிக்கலாமே: உப்பு கரை, எண்ணெய் கரை உள்ள டைல்ஸ் மற்றும் டாய்லெட் சுத்தம் செய்ய 5 ரூபாய்க்கு இந்தப் பொருள் மட்டும் இருந்தா போதுமே!

இதுபோன்று நம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய பொருள்களை  நாமே சுத்தம் செய்து, சின்ன சின்ன விஷயங்களை சரி செய்து பணத்தை மிச்சப்படுத்த பழகிக் கொள்ளலாமே. இந்த குறிப்புகள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -