மிக்ஸி ஜாரை வேகமாக ஓட வைக்க வீட்டுக்குறிப்பு

mixer
- Advertisement -

நாம எல்லார் வீட்டு மிக்ஸி ஜாரிலும் வரக்கூடிய பிரச்சனை தான் இது. சில மிக்சி ஜாரை பயன்படுத்தலாம் ஒரு வாரம் அப்படியே வைத்துவிட்டால், அந்த மிக்ஸி ஜாருக்கு உள்ளே இருக்கும் பிளேடு சுத்தாது. கையை வைத்து அழுத்தம் கொடுத்து சுற்றினாலும் அந்த பிளேடு சுற்றாது. மிக்ஸியில், ஜாரை செட் செய்து ஓடவிட்டாலும் அது ஓடாது. ஸ்ட்ரக் ஆகி அப்படியே நிற்கும்.

இதை நாம் என்ன செய்வோம். உடனடியாக கடைக்கு கொண்டு போய் தான் சரி பண்ணுவோம். வீட்டில் இருந்தே இதை சரி செய்ய சூப்பர் ஐடியா இருக்குது. இந்த ஒரு பொருளை மட்டும் மிக்ஸி ஜாரில் ஊற்றினால் போதும். அந்த மிக்ஸி பிளைடு தானாக சுற்ற தொடங்கிவிடும். இதற்காக இனி கடைக்கு போக வேண்டாம். இது ஒரு குறிப்பு. இதோடு சேர்த்து மிக்ஸி ஜார் பிளேட் ஷார்ப் இல்லாமல் போய்விட்டால், அதை வீட்டிலேயே நல்ல ஷார்ப்பா மாற்றுவது எப்படி.  இந்த இரண்டு குறிப்புகளும் இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

மிக்ஸி ஜார் பராமரிப்பு வீட்டு குறிப்பு

மிக்ஸி ஜார் பிளேடு ஸ்டக் ஆகிவிட்டால் அதை சரி செய்ய முதல் குறிப்பை பார்த்து விடுவோம். ஒரு சின்ன குழி கரண்டி எடுத்துக்கோங்க. சாம்பார் ஊற்றும் கரண்டி. அதில் 1 ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து நன்றாக சூடு செய்யவும். அதாவது அந்த எண்ணெயிலிருந்து புகை வெளிவரும் அளவுக்கு அதை சூடு செய்து ஜாக்கிரதையாக அந்த எண்ணெயை எடுத்து மிக்ஸி ஜாருக்கு உள்ளே பிளேடு மாட்டி இருப்பாங்க இல்லையா, அந்த நட்டு நடுவில் இந்த எண்ணெயை ஊற்றி அப்படியே ஊற வைத்து விடுங்கள்.

இரண்டு மூன்று நிமிடங்களில் அந்த நட்டுக்கு உள்ளே இருக்கும் துரு எல்லாம் எண்ணெயில் ஊறி வெளியே வர தொடங்கும். பிறகு நீங்கள் அந்த பிளைடை சுற்றிப் பார்த்தால், பிளைட் நன்றாக சுழலும். நீண்ட நாள் மிக்ஸி ஜாரைபயன்படுத்தாமல் இருக்கும்போது அந்த நட்டில் துருப்பிடித்த காரணத்தால் தான் பிளைடு சுழல்லாது. சுடச்சுட தேங்காய் எண்ணெயை அதில் ஊற்றும்போது அந்த துரு எல்லாம் நீங்கி உங்களுடைய மிக்ஸி சரியாகிவிடும். பிறகு வழக்கம் போல உங்கள் மிக்சி ஜார் ஓடும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

அடுத்து மிக்ஸியில் எதுவுமே சரியாக அரைப்படவில்லை. மிக்ஸி ஜாரின் பிளைட் கொஞ்சம் மொக்கையாகி விட்டது என்ன செய்வது. மிக்ஸி ஜாருக்கு உள்ளே கிராம்பு ஐந்திலிருந்து ஆறு, பட்டை 1 சின்ன துண்டு, சின்ன சின்னதா உடைச்சு போட்டுக்கோங்க. ஏலக்காய் 1, கைப்பிடி அளவு கல் உப்பு, போட்டு இதை மிக்ஸியில் வைத்து இரண்டு ஓட்டு ஓட்ட வேண்டும்.

எப்படி என்றால் பல்ஸ்மோடில் ஓட்ட வேண்டும். பட்டன் வைத்த மிக்ஸியாக இருந்தால் பல்ஸ் பட்டன் இருக்கும். சுத்துற மாதிரி பட்டன் வைத்த மிக்ஸியாக இருந்தால், பட்டனை ரிவர்ஸில் சுழற்றினால் பல்ஸ் மோட் உங்களுக்கு ஒர்க் ஆகும். இப்படி நான்கு முறை பல்ஸ் மோடில் அதை சுழற்றி, பிறகு சாதாரணமாக ஓரிருமுறை ஓட்டி விட்டால் உங்கள் மிக்ஸி பிளைடு ஷார்பாக மாறும். உள்ளே இருக்கும் பொருட்களை என்ன செய்வது.

- Advertisement -

தூக்கி குப்பையில் போடாதீங்க. இதற்கு பின்னாடி நிறைய நல்ல விஷயம் இருக்கு. இந்த பொடியை கேலண்டர் பேப்பரில் வைத்து மடித்து, பீரோவில் அலமாரியில் வைத்தால், இந்த நல்ல வாசம் அந்த இடத்தில் எல்லாம் பரவி இருக்கும். ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் திறந்தபடியே இதை போட்டு பாத்ரூமில் வைத்தீர்கள் என்றால் பாத்ரூமில் துர்நாற்றம் வீசாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: மண் சட்டியை சுத்தம் செய்யும் முறை

செருப்பு வைக்கும் இடத்தில் இந்த பொடியை வைக்கலாம். அந்த இடத்தில் கொசு வராது. கெட்ட வாடை அடிக்காது. இந்த மாதிரி உங்க வீட்டில் பலதரப்பட்ட விஷயங்களுக்கு இந்த பொடியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலே சொன்ன வீட்டு குறிப்பு அனைத்தும் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -