நீங்கள் செல்போனில் அதிக அளவில் பணபரிமாற்றம் செய்பவரா? இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன?

mobile-bank

இந்த காலகட்டத்தில் செல்போன் இல்லையென்றால் எதுவுமே இல்லை என்பது போல் ஆகிவிட்டது. குறிப்பாக பணப்பரிமாற்றம் செய்வதால் செல்போன் உடைய பயன்பாடு வெகுவாக அதிகரித்து உள்ளது. செல்போன் பயன்பாடு அதிகரித்த பிறகு அதிக அளவில் வாட்ச் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்தது. அது போல் இப்போது மணிபர்ஸ் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது. மொபைல் போன் மணிபர்ஸாக செயல்படுவதால் அதன் தேவையும் குறைந்து விட்டது என்றே கூறலாம். ஆனால் இதில் இருக்கும் ஆபத்துக்கள் என்ன? நம்மால் இதில் வரும் ஆபத்துக்களில் இருந்து எப்படி தப்பிக்க முடியும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.

mobile-searching

இதனால் முன்பு போல் செல்போன்களை அஜாக்கிரதையாக நாம் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகிவிட்டது. முன்பெல்லாம் மொபைல் போன் தொலைந்தால் சிம் கார்ட் உடைய செயல்பாட்டை நிறுத்தி விடுவது வழக்கம். அதன் பிறகு அந்த மொபைல் போன் மூலம் நம்முடைய தனிப்பட்ட எந்த நிதி சார்ந்த தகவல்களையும் அவர்கள் திருட முடியாமல் போய் விடும். ஆனால் இப்போதைய நிலைமையில் செல்போன் தொலைந்தால் என்ன செய்வது? சற்றும் அதைப் பற்றி யோசிக்க முடியாத ஒரு உணர்வை நமக்கு தருகிறது அல்லவா? அது தான் இன்றைய ஸ்மார்ட்போன்களின் பலவீனமாக இருக்கிறது.

என்ன தான் பாஸ்வேர்டுகள் என்கிற பூட்டு போட்டு வைத்தாலும் அது எளிதாக உடைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்று இருக்கும் சிறு வயதினர்கள் கூட எளிதாக மொபைல் போனை ஹேக் செய்து விடுகிறார்கள். செல்போனில் நீங்கள் பயன்படுத்தும் பணபரிமாற்றம் குறித்த தகவல்களை எளிதாக திருடி விடக்கூடிய ஆபத்துகள் உண்டு. மொபைல் போன் சிறு வங்கிகளுக்கு சமமாக இயங்குவதால் பெரும்பாலானோர் மொபைல் போன் மூலமே பணபரிவர்த்தனை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இதனால் வரும் ஆபத்துகளும் அதிகம் தான் என்பதை முதலில் நீங்கள் உணர வேண்டும்.

mobile-cellphone

ஆனால் இது போன்ற பணபரிவர்த்தனை சார்ந்த பயன்பாடுகளில் அனைத்து வங்கிகளும் ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் வாடிக்கையாளர் எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண் போன்றவற்றை கேட்க தான் செய்கின்றது. இருப்பினும் மொபைல் போன் தொலைந்தால் அதன் மூலம் நம்முடைய பணம் பரிமாற்றம் தொடர்பான விஷயங்களையும், மொபைல் வாலட், கிரெடிட் கார்டு போன்ற தகவல்களையும் திருட முடியும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. எனவே இவைகள் 100% பாதுகாப்பானவை என்று சொல்லி விடவும் முடியாது.

- Advertisement -

இதனால் கூடுமானவரை மொபைல் போனில் பணம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் அதிக அளவு தொகையை வங்கி கணக்கில் வைத்திருப்பது நல்லதல்ல. மொபைல் போனுக்கு கொடுக்கும் வங்கி கணக்கு எண் ஒன்றாகவும், நீங்கள் பணம் சேமிக்க தனியாகவும் வைத்துக் கொள்வது சிறந்தது. தேவையான அளவிற்கு பணத்தை மட்டும் மொபைல் போனுக்கு கொடுக்கப்பட்ட வங்கி கணக்கில் வைத்திருந்தால் போதும்.

bank

உங்களுக்கு தேவையான பொழுது நீங்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களால் முடிந்தவரை மொபைல் போனில் இருக்கும் அத்தனை ரகசிய பாஸ்வேர்டுகளையும் ஒவ்வொரு செயலிக்கும் தனித் தனியாக பயன்படுத்துவது நல்லது. எல்லாவற்றிற்கும் ஒரே பாஸ்வேர்டுகளை கொடுக்காமல் ஒவ்வொரு விஷயத்திற்கும் தனித்தனியான பாஸ்வேர்ட்கள் உபயோகிப்பது சிறந்தது. நம்முடைய அவசர தேவைக்கு மொபைல் பணப்பரிவர்த்தனை பெருமளவு உதவி செய்தாலும் இது போல் இருக்கும் சிக்கல்களை சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

இதையும் படிக்கலாமே
பூச்செடிகள் வளர்ப்பவர்கள் பூக்கள் உதிராமல் இருக்க, பெரிய பூக்கள் பூக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணா போதும்!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.