இந்த காரணங்களால் கூட செல்போன் வெடிக்குமா என்ன? செல்போன் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களை நீங்களும் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் .

- Advertisement -

இன்றைய நவீன காலக்கட்டத்தில் ஒரு மனிதன் உண்ண உணவு, உடுக்க உடை இவைகள் இல்லாமல் கூட வாழ பழகிக் கொண்டாலும் கொள்வானே அன்றி, செல் போன் இல்லாமல் வாழ முடியவே முடியாது என்கிற நிலைமை வந்தாயிற்று. இந்த மொபைல் போன் ஈர்ப்பு என்பது பெரியவர்களை விட குழந்தைகளை தான் அதிகம் தாக்கி உள்ளது. இப்போது எல்லாம் பிறந்த குழந்தை முதல் இந்த செல்போனை கையில் கொடுத்தால் தான் அழுகையே நிறுத்துகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த மொபைல் எந்த அளவிற்கு நம்முடைய அன்றாட வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி விட்டது என்று. வெறும் தகவல் பரிமாற்றத்திற்காக மட்டுமே அறியப்பட்ட இந்த கருவி அது இல்லை என்றால் வாழ்க்கை இல்லை என்ற நிலைமைக்கு நம்மை கொண்டு போய் விட்டது. இந்த மொபைல் போனை நாம் வாங்குவது பயன்படுத்துவது இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் இதை சரியாக பராமரிக்காத பட்சத்தில் ஏற்படும் அபாயகரமான விஷயங்களை பற்றிய சில தகவல்களை இப்போது இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.

மொபைல் போன் வாங்குபவர்கள் அனைவருமே அதை வாங்கும் போதும் இருக்கும் ஆர்வம் அதை பராமரிக்கும் போது காட்டுவது கிடையாது. மொபைல் போனில் மற்ற பராமரிப்புகளை நீங்கள் சரியாக செய்யவில்லை என்றாலும் கூட பெருமளவில் பாதிப்பு கிடையாது. அதிகப்பட்சம் உங்களின் போனில் உள்ள போட்டோக்கள் போன்ற டேட்டாக்கள் போக வாய்ப்பு உள்ளது அதை சர்வீஸ் சென்டர்களில் கொடுத்து திரும்ப பெறலாம். இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் மொபைல் சார்ஜ் மற்றும் பேட்டரி இவைகள் தான். இதை தான் நாம் கவனமாக பராமரிக்க வேண்டும். இதை சரியாக பராமரிக்காத பட்சத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

- Advertisement -

மொபைல் போனில் கவர் போட்டு பயன்படுத்துபவர்கள் போனை சார்ஜில் போடும் போது போனை கவரில் இருந்து எடுத்த பிறகு தான் சார்ஜ் போட வேண்டும். ஏனென்றால் மொபைல் சார்ஜ் போடும் போது பேட்டரி சூடாகும் அந்த சமயத்தில் போன் கவருடன் இருந்தால் வெப்பம் வெளியேறாமல் தங்கி போன் பழுதாக வாய்ப்புகள் அதிகம்.

இவை அனைத்திலும் விட மிக முக்கியமான ஒன்று போன் சார்ஜில் இருக்கும் போது பேச கூடாது. நாம் பொதுவாகவே ஃபோன் பேசும் போது பரிமாற்றப்படும் தகவல்கள் அனைத்துமே சேட்டிலைட் வாயிலாக தான் நடைபெறும். போன் சார்ஜில் இருக்கும் போது நாம் பேசினால் சேட்டிலைட் அதிர்வலைகளும் போன் சார்ஜின் அதிர்வலைகளும் ஒன்றாக சேரும் போது போன் வெடிப்பதற்கான வாய்ப்புகள் பெருமளவில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே போன் சார்ஜில் இருக்கும் போது எக்காரணத்தை கொண்டும் பேசக்கூடாது.

- Advertisement -

இதை விட இந்த போன் பராமரிப்பில் முக்கியமான விஷயம் எந்த காரணத்திற்காகவும் போனை முழுமையாக சார்ஜ் போடக் கூடாது. இந்த தகவல் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை ஆனால் போனை பொறுத்தவரையில் 100% வரை முழுவதுமாக சார்ஜ் போடவே கூடாது. போனை அதிக பட்சம் 90 சதவீதம் வரை சார்ஜ் போட்டாலே போதும். 100% ஒரு முறை சார்ஜ் போடுவதற்கு பதிலாக 40, 50 இப்படி குறைந்த அளவில் சார்ஜை இரண்டு மூன்று தடவை கூட போடலாம். இதனால் போன் பேட்டரி நீண்ட நாள் உழைக்கும்.

அதே போல் போன் சாரஜ் போடும் போது சார்ஜ் ஏறி முடிந்து விட்டால் போனை நாம் அப்படியே எடுத்து விடக் கூடாது. முதலில் சார்ஜர் ஸ்விட்சை ஆப் செய்து விட்டு இரண்டு நிமிடம் கழித்து தான் போனை சார்ஜரில் இருந்து தனியாக எடுக்க வேண்டும். ஏனென்றால் சார்ஜர் போடும் போது அது பேட்டரி புல் ஆகும் பிராசஸில் இருக்கும். நீங்கள் நேரடியாக சுவிட்ச் ஆஃப் பண்ணாமல் அதற்கான நேரமும் தராமல் எடுக்கும் பொழுது பேட்டரி வீணாக போகும் நிலை ஏற்படும். போன் வெடிப்பதற்கான வாய்ப்பும் உண்டு.

இரவில் தூங்கும் போது பலர் போனை சார்ஜில் போட்டு விட்டு அப்படியே உறங்கி விடுவார்கள். போன் ஃபுல் சார்ஜ் ஆகும் போது பேட்டரி ஆனது அதிக அழுத்தத்திற்கு ஆளாகிறது. அந்த போனில் அழைப்பு வரும் போது நீங்கள் அதை உடனடியாக எடுத்து பேசினாலோ அல்லது சார்ஜ் ஸ்விட்ச் ஆஃப் பண்ணாமல் உடனடியாக பேட்டரி பின்னை போனில் இருந்து எடுத்துவிட்டு கால் ஆன் செய்தாலோ பேட்டரி அதீக அழுத்தமாகி வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இப்போதெல்லாம் மொபைல் வெடித்து அதனால் ஏற்படும் விபத்துக்களை நாம் அடிக்கடி கேள்விப்படுகின்றோம் கொஞ்சம் கவனமாக நடந்து கொண்டால் போதும். இது போன்ற அசம்பாவிதங்களை தடுத்து விடலாம். இந்த தகவல்கள் மிகச் சிறியதாக இருந்தாலும் மிக மிக முக்கியமான ஒன்று என்ற விஷயத்தை உங்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டு நீங்கள் தெரிந்து கொண்ட இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் உறவினருக்கும் தெரியப்படுத்தி இது போன்று விபத்துக்கள் ஏற்படாமல் மொபைல் பயன்படுத்த உதவியாக இருக்கும்.

- Advertisement -