அவசர தேவைக்கு இந்த உண்டியலில் இருந்து மட்டும் எப்போதும் பணம் சுரந்து கொண்டே இருக்கும். அது என்ன உண்டியல்? நீங்க தெரிஞ்சுக்க ஆசைப்பட்றீங்களா?

money

நினைத்தது நடக்க வேண்டும் என்று நினைத்தால் அது ‘ஆசை’. நினைத்ததெல்லாம் நடந்தே ஆக வேண்டும் என்று நினைத்தால் அது ‘பேராசை’. இன்னும் சிலருக்கு நல்லதோ கெட்டதோ ஏதாவது ஒன்று ‘நடந்தால் போதும்’ என்று இருக்கும். அந்த வரிசையில் நீங்கள் எந்த ரகம்? நீங்களே யோசித்து தெரிந்து கொள்ளுங்கள். ‘எண்ணிய முடிதல் வேண்டும். நல்லவை எண்ணல் வேண்டும்’ எங்கேயோ கேட்டது போல இருக்குதா? நம்ம பாரதியார் நமக்காக சொல்லிவிட்டுச் சென்ற வரிகள் தான் இது. நாம் நினைத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்றால், நமக்கு எண்ணங்கள் நன்றாக இருக்க வேண்டும். இதை மனதில் வைத்துக் கொண்டு இந்த பரிகாரத்தை தொடங்க போகின்றோம். நல்ல எண்ணத்தில், நல்ல குறிக்கோளுக்காக, உங்களுக்கு எது தேவையோ அதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு நல்லதே நடக்கும் என்று எண்ணி இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

savings-money

முதலில் இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுக்கு பணத்தேவை பூர்த்தியாக வேண்டும் எனும் பட்சத்தில் தேவைக்கான அளவுள்ள பணத்தை மட்டும் நினைத்துதான் பரிகாரத்தை செய்ய வேண்டும். பரிகாரம் இருக்கிறது என்பதற்காக நாம் வாங்கும் சம்பளம் 10,000 ரூபாயாக இருக்கும். அடுத்த மாதத்திலேயே மாதம் 1,00,000 லட்சத்துக்கு ஆசைப்படக்கூடாது. இந்த இடத்தில் 10,000 ரூபாய் சம்பளம் ஆனது, 20,000 ஆக உயர வேண்டும் என்பதே சரியான நோக்கம். ஆசைகள் பெரியதாக இருக்கலாம். அதுவே பேராசையாக இருக்கக்கூடாது அல்லவா? சரி பதிவை பார்த்து விடுவோம்.

தேவைக்கான பணம் நமக்கு கிடைத்துக்கொண்டே இருக்கவேண்டும்! நமக்கு பணம் கிடைத்துக்கொண்டே இருக்கவேண்டும்! என்ற ஒரு வார்த்தையை மனதிற்குள் உச்சரித்துக்கொண்டே பரிகாரத்தை செய்ய தொடங்குங்கள். ஒரு மூடி போட்ட கண்ணாடி பாட்டில் எடுத்துக் கொள்ளலாம் அல்லது மரத்தினால் செய்யப்பட்ட உண்டியல் ஆக இருந்தாலும் இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

bay-leaf

அந்த உண்டியலில் முதலில் 2 பிரியாணி இலை, ஒன்பது 1 ரூபாய் நாணயங்கள், ஒரு பச்சை நிற ரூபாய் நோட்டு, இவைகளை போட்டுவிடுங்கள். இதோடு ஒரு ஸ்பூன் வெந்தயத்தையும் அந்த பாட்டிலில் போட்டு விட வேண்டும். அதன் பின்பு ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்து உங்களுடைய தேவைக்கு எவ்வளவு பணம் தேவை?

- Advertisement -

அவரவர் தகுதிக்கு எவ்வளவு பணத்தேவை இருக்கின்றதோ, உங்களுக்கு வீடு வாங்கும் கனவு இருக்கலாம், அல்லது நிலம் வாங்கும் கனவு இருக்கலாம், வண்டி வாகனம் வாங்கும் கனவு இருக்கலாம். அதற்கு ஒரு மாதத்திற்கு எவ்வளவு சேமிக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் இருக்கும் அல்லவா? அந்தத் தொகையை, அந்த வெள்ளை பேப்பரில், பச்சை நிறப் பேனாவைக் கொண்டு எழுதி அந்த டப்பாவில் போட்டு வைத்து விடுங்கள்.

money1

உங்களுடைய குறிக்கோளை அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் விடாமுயற்சியோடு சேர்ந்து இருக்க வேண்டும். அதன் பின்பு உங்கள் கையில் கிடைக்கும் பணத்தை அக்கவுண்டில் வைத்திருந்தாலும், அதாவது வங்கிக் கணக்கில் வைத்து இருந்தாலும் ஒரு சிறு தொகையை கொண்டு வந்து இந்த பாடலிலும் சேகரியுங்கள். மாதம் 100 ரூபாய் போட்டாலும் போதும். அப்போது வங்கியில் சேமிக்கும் தொகையானது அதிகரிக்கும். பாடலில் சேரும் பணமும் அதிகரிக்கும்.

இந்த பாடலில் இருக்கக்கூடிய பணம் உங்களது வருமானத்தை இரட்டிப்பாக பெருக்கும். உங்களது வங்கி சேமிப்பை ஒருபக்கம் சுரக்க வைத்துக் கொண்டே இருக்கும். இதற்கு அர்த்தம் என்ன? உங்களுடைய சம்பாத்தியம் உயரும். உங்களுடைய நேர்மறை ஆற்றலை ஊக்குவிக்கக் கூடிய சக்தி அந்த கண்ணாடி பாட்டிலில் இருக்கக்கூடிய பிரியாணி இலக்கு உண்டு. நம்பிக்கை இல்லாமல் செய்து பார்த்தால் நிச்சயமாக பலன் இருக்காது. முழு நம்பிக்கையோடு உங்களால், உங்களுடைய தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்ற எண்ணத்தோடு இந்த பரிகாரத்தை செய்பவர்கள் மூன்றே மாதத்தில் நல்ல முன்னேற்றம் அடைய முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வாழ்க்கையில், நீங்கள் நினைத்தால் வாழும்போதே சொர்க்கத்தை பார்க்க முடியும்? தூங்கும் போது உங்கள் தலையணைக்கடியில் இந்த பொருளை வைத்து தூங்கினால்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.