அடுத்தவர்களிடம் இருந்து பணத்தை இப்படி வாங்கி பாருங்கள். பணத்தை சேமிக்க, இந்த 2 விரல்களில் ஒளிந்திருக்கும் சூட்சும ரகசியத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

money

வாழ்க்கையில் இந்த பணத்தை சம்பாதிப்பதற்கு எத்தனை போராட்டங்கள். பல போராட்டங்களை கடந்து, நம் கைக்கு அந்த பணம் வந்து சேர்ந்தாலும், அதை சேமிக்க முடியவில்லையே. இதற்கு எத்தனையோ பரிகார முறைகள், எத்தனையோ வழிபாட்டு முறைகள் ஆன்மீக ரீதியாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒரு சுலபமான சூட்சம ரகசியத்தைப் பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை பரிகாரம் என்று கூட சொல்லமுடியாது. யாராவது உங்களிடம் வந்து பணத்தை கொடுத்தால், இந்த இரண்டு விரல்களில் வாங்கி, உங்கள் பஸ்ஸிலோ உங்கள் பீரோவில் வைத்துக்கொள்ளுங்கள் போதும். பணம் உங்களிடம் நிலைத்து நிற்கும். வீண் விரையம் ஆகாது. சேமிப்பு உயரும்.

guru-medu

சரி, நம்முடைய ஐந்து விரல்களில் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய அந்த இரண்டு விரல்கள் எது? அந்த இரண்டு விரல்களுக்குள் அப்படி என்னதான் ரகசியம் அடங்கியுள்ளது? இப்போது தெரிந்துகொள்வோம் வாருங்கள். முதலில் ஆள்காட்டி விரல், இரண்டாவது கட்டை விரல். ஆள்காட்டி விரலின் கிழ் பக்கத்தில் தான் குரு மேடு அமைந்துள்ளது. கட்டை விரலின் கீழ்ப் பக்கத்தில் தான் சுக்கிர மேடு அமைந்துள்ளது.

குருவும் சுக்கிரனும் இணைந்து பணத்தை வாங்கும்போது, அதாவது ஆள்காட்டி விரலும் கட்டை விரலும் சேர்ந்து பணத்தை வாங்கி வைக்கும்போது, அந்த பணம் நிச்சயம் நம்மிடம் தங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இனிமேல் யாரிடம் இருந்து பணத்தை வாங்கினாலும் சரி 10 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை எவ்வளவு தொகையாக இருந்தாலும் அதை உங்களுடைய இரண்டு விரல்களால் வாங்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

money1

அதே இரண்டு விரல்களால் எடுத்து தான் உங்கள் வீட்டு பீரோவில் வைக்க வேண்டும். ஒருநாள் செய்து பார்த்துவிட்டு, இரண்டு நாள் இந்த முறையை பின்பற்றி விட்டு உங்களிடம் பணம் சேரவில்லை என்று அதோடு விட்டுவிட வேண்டாம். தொடர்ந்து பண பரிமாற்றத்தை உங்கள் கையில் இருக்கும் இந்த இரண்டு விரல்களால் செய்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்.

இதே போல் உங்கள் கைக்கு பணம் வரும்போது அதை சந்தோஷமாக வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த பணத்திற்கான செலவு என்பது வரும்போது அந்த பணத்தை செலவு செய்து தான் ஆக வேண்டும். வேறு வழியே கிடையாது. பணத்தைப் பூட்டி வைப்பதன் மூலம் எந்தப் பிரயோஜனமும் இல்லை. இதற்காக கையில் வரும் பணத்தை செலவு செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.

money4

வருமானத்தில் ஒரு சிறிய தொகையை சேமிக்கவேண்டும். மொத்த வருமானத்தையும் சேமித்து வைக்கவேண்டும் என்று நினைப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். உங்களுடைய வருமானத்திற்கு ஏற்ற அளவு சேமிப்பை பெருக்குவதற்கு, மேலே சொல்லப்பட்டிருக்கும் இந்த இரண்டு விரல்களின் மூலம் பணப் பரிமாற்றத்தை செய்தால் நல்ல பலனை பெற முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.