பணம் பத்தும் செய்யும். இந்த 10 அப்படி என்ன செய்ய போகிறது என்று தெரியுமா?

lakshmi

பணம் சம்பாதிப்பது சிலருக்கு கடமையாக இருக்கும். பலருக்கு தவமாக இருக்கும். ஒரு சிலர் பணம் இல்லையென்றால் எதையும் இந்த உலகத்தில் சாதிக்க முடியாது என்ற தவறான எண்ணம் கொண்டு இருப்பார்கள். பணம் முக்கியம் தான். ஆனால் பணமே அனைத்தையும் தீர்மானித்து விடுவதில்லை. அது தெரிந்தும் பண தேவைகள் வரும் போது மனம் அலைபாய தான் செய்கிறது. ஆயிரம் வேதாந்தங்கள் கூறினாலும் பணம் இல்லாமல் வாழ முடியாது என்பது தானே உண்மை. நீங்கள் சம்பாதிப்பதில் இருக்கும் பிரச்சனைகள், உங்களின் முன்னேற்றங்களில் இருக்கும் தடைகள் சில நெறிமுறைகளை தவறாக நீங்கள் கையாள்வது காரணமாக இருக்கலாம். ஆன்மீக ரீதியாக இவற்றை பின்பற்றினால் இந்த தடைகள் விலகி உங்களது பணத் தேவைகள் பூர்த்தியாகும். அதை பற்றி விரிவாக காண்போம் வாருங்கள்.

praying

சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு விஷயங்களும் நம் வாழ்வியலுடன் தொடர்புடையவை. இறை சக்தியை நெருங்கவும், துன்பங்களில் இருந்து விடுபடவும் துணை செய்கின்றன. அறிவியலும், ஆன்மீகமும் வெவ்வேறானவை என்ற கூற்று சமீப காலங்களில் உடைக்கப்பட்டு வருவதை நீங்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறீர்கள். முன் ஜென்ம பாவ, புண்ணிய அடிப்படையில் தான் இந்த ஜென்மத்தில் உங்களது வாழ்க்கை இணைக்கப் பட்டிருக்கும். சில பரிகாரங்கள் உங்களது பிரச்சனைக்கு தீர்வு கூறுகிறது.

1. முதலாவதாக உங்கள் வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு கட்டாயம் சொம்பில் தண்ணீர் தருவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். கிளம்பும் சமயத்தில் மஞ்சள் மற்றும் குங்குமம் தர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் எந்த ஜென்மத்தில் தரித்திரம் தொடர்ந்திருந்தாலும் அவை நீங்கி செல்வம் அதிகரிக்கும்.

pithrudhosham

2. ஒவ்வொரு அமாவாசை தினங்களிலும் இல்லத்தின் வாசலில் கோலமிடுவதை தவிர்க்க வேண்டும். அன்றைய நாளில் தலையில் எண்ணெய் தடவக் கூடாது. காலையில் எந்த பூஜையையும் செய்யக் கூடாது. உங்களது முன்னோர்களை கட்டாயம் வழிபட வேண்டும். மறந்தும் தவறிவிடக் கூடாது. இதனால் உங்கள் மேல் பிரியமுள்ள உங்களது வம்ச தலைவர்களின் வாழ்த்து கிடைக்கப்பெற்று பணவரவு கூடும்.

- Advertisement -

3. பணவரவில் தடை ஏற்பட்டால் வெள்ளிக் கிழமைகளில் மஹாலக்ஷ்மிக்கு விளக்கேற்றி நிவேதனமாக மொச்சை மற்றும் சுண்டலை வைக்கவும். இந்த வழிபாட்டை சுக்ர ஹோரையில் மேற்கொள்ளவும். பூஜை முடிந்து சிறிது நேரம் கழித்து உங்களது குடும்ப நபர்கள் மட்டும் நிவேதனம் செய்யப்பட்ட பிரசாதத்தை சாப்பிடவும்.

mahalakshmi

4. ஒருவரது ஜனன ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் சுக்ர பகவான் நீசம் பெற்று பகை இல்லாமல் இருந்தால் அவர்களது அதிர்ஷ்டம் சிறப்பான ஒன்றாக இருக்கும். அவர்களின் கையால் சுக்ர ஹோரையில் பணம் பெற்று கொள்ளுங்கள். அந்த நாள் முதல் உங்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும். தொட்டதெல்லாம் துலங்கும்.

5. கோமாதாவின் சக்தி கோமியத்தில் அதிகம் உண்டு. கோமியத்தை வீட்டில் தெளித்தால் சகல செல்வங்களும் கிட்டும். கோமியத்தை சிறிது குளிக்கும் நீருடன் கலந்து குளித்தால் லக்ஷ்மி தேவியின் அருள் கிடைக்கும். இதனை ஒரு மண்டலம் செய்யலாம். இதனால் தரித்திரம் நீங்கி இல்லத்தில் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.

6. சில சாபங்கள் பின்தொடர்ந்து கொண்டே வரும். இதனால் முன்னேற்றத்தில் தடை ஏற்படும். இந்த சாபங்கள் நீங்கினால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். சாபம் நீங்க முழு பாசிப்பருப்பில் வெல்லம் சேர்த்து இரவில் ஊற வையுங்கள். பின்னர் காலையில் பசுமாடு மற்றும் பறவைகளுக்கு உணவாக அளித்து வாருங்கள்.

abishegam

7. வெள்ளிக்கிழமை தினங்களில் பெருமாள் கோவிலுக்கு சென்று தாயாருக்கு பசும்பால் கொடுத்து அபிஷேகம் செய்ய சொல்லுங்கள். மேலும் பச்சை வண்ண வளையலை அணிவிக்க கொடுங்கள். இவ்வாறு செய்தால் உங்களிடம் செல்வ வளம் மேலும் மேலும் அதிகரித்து கொண்டே வரும். புதிய தொழில் காரியங்களில் ஈடுபடுவதற்கு முன்னர் இதனை செய்ய தொழில் வெற்றி பெறும்.

8. தீய சக்தி உங்களிடம் இருந்தால் பணவரவில் தடை ஏற்படும். என்ன தான் முயற்சி செய்தாலும் ஒன்றும் பலன் அளிக்காது. பச்சை வண்ண துணியில் பாசி பருப்பை வைத்து முடிந்து நீங்கள் உறங்கும் போது உங்களது தலையணை அடியில் வைத்து விட்டு காலையில் எழுந்து பாலிதீன் பையில் போட்டு ஓடும் நீரில் விட்டு விட தீய சக்திகள் விலகும். கட்டாயம் ஓடும் நீரில் தான் விடவேண்டும். மாற்று வழியை யோசிக்காதீர்கள்.

gajalakshmi-yantra

9. ஸ்ரீ தேவி வீட்டில் நிரந்தரமாக குடியிருக்க வேண்டும் என்றால் வீட்டின் தலை வாசல் இருக்கும் இடத்தில் வெள்ளியாலான கஜாலக்ஷ்மி தேவியின் உருவம் பதிந்த தகட்டை வாங்கி பதிக்கவும். செல்வம் குறையாமல் இந்த தகடு பாதுகாக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படாது.

thirupathi

10. தமிழ் மாதத்தில் வரும் முதல் திங்கள் அன்று திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யுங்கள். தொடர்ந்து 12 மாதங்களும் முதல் திங்களில் இவ்வாறு தரிசனம் செய்து வந்தால் நிச்சயமாக நீங்கள் செல்வந்தராகி விடுவீர்கள். ஒருவருக்கு செல்வம் நிலைக்க பூர்வ ஜென்ம புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும். ஆனால் பூர்வ புண்ணியம் இல்லாதவர்களுக்கு கூட இந்த தரிசனம் செல்வ பேற்றை வாரி வழங்கும்.

இதையும் படிக்கலாமே
நாம் எல்லோரும் அறிந்த, அதிர்ஷ்டத்தை தரக்கூடிய 2 பரிகாரம். உங்கள் வீட்டில் முறைப்படி செய்கிறீர்களா? இல்லையென்றால் எந்த பலனும் இல்லை.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Panam peruga tips Tamil. Panam peruga in Tamil. Panam peruga pariharam Tamil. Panam sera pariharam Tamil. Panam sera tips Tamil.