இந்த 1 பொருளை வீட்டின் பூஜை அறையில் வைத்தால் வாழ்க்கையில் உங்களுக்கு இருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் நொடியில் தவிடுபொடியாகும்! என்ன பொருள் அது?

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் பிரச்சனைகள் நிறைந்து இருக்கும். எல்லோருக்கும் ஒரே பிரச்சினைகள் என்பது இருப்பதில்லை. சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அவரவர் தகுதிக்கு ஏற்ப பிரச்சனைகளும் அவர்களை பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். குறிப்பாக வீட்டில் இருக்கும் கடன் பிரச்சினைகள், குடும்ப பிரச்சனைகள் மனதிற்கு பாரமாக இருந்து கொண்டிருக்கும். இது போன்ற ஒரு எதிர்மறையான சூழ்நிலையில் இருப்பவர்கள் இந்த ஒரு பொருளை மட்டும் பயன்படுத்தினால் இருக்கின்ற எல்லா பிரச்சினைகளும் வந்த வழியே திரும்பி சென்று விடும். குலதெய்வ அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும். அது என்ன பொருள்? அதை வைத்து என்ன செய்யலாம்? என்பதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

maram-tree-karungali

நாம் வாழ்கின்ற இந்த பூமியில் நம்மை சுற்றிலும் நல்ல சக்திகள் நிறைந்து இருக்கும். எந்த விசைக்கும் ஒரு எதிர்விசை உண்டு என்பது அறிவியல் ஒப்புக் கொண்டுள்ள உண்மை. அது போல நல்ல சக்திகள் என்பது பூமியில் இருக்கும் பொழுது அதற்கு எதிர்மறையான கெட்ட சக்திகளும் இருக்கத் தான் செய்யும். ஆனால் அது நாம் நினைக்கும் பேய், பிசாசு, பூதம் போன்று இல்லாமல் நமக்கு எதிர்மறை ஆற்றல்களை கொடுப்பதாக இருக்கும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட தக்க ஒன்றாகும். இப்படியிருக்கும் சக்திகள் சில விசேஷ மரங்களால் ஈர்க்கப்படும். அவ்வகையில் நல்ல சக்திகளை ஈர்க்கும் இந்த மரம் தெய்வீக ஆற்றலை கொண்டுள்ளது என்று குறிப்பிடப்படுகிறது.

பழங்காலம் முதல் இன்று வரை குறி பார்க்கும் நபர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் கையில் ஒரு கோல் வைத்திருப்பார்கள். அதை நம் உள்ளங்கையில் வைத்து ரேகை பார்த்து குறி சொல்வார்கள். இது கண்டிப்பாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அந்த கோல் கருங்காலி மரத்தால் செய்யப்பட்டது. கருங்காலி மரம், பிரபஞ்சத்தில் இருக்கும் நல்ல ஆற்றல்களை தன்னகத்தே இழுத்துக் கொள்ளும் சக்தி படைத்தது. இதில் தெய்வீக ரகசியங்களும் இருப்பதால் குறி பார்ப்பவர்கள் அந்த காலத்தில் இதனைப் பயன்படுத்தி வந்தார்கள். இதன் மூலம் சரியாக எதிர்காலத்தை கணிக்க முடிந்தது.

karungali-kattai

அந்த கருங்காலி மரம் பல்வேறு வடிவங்களில் இன்று விற்பனைக்கு உள்ளன. கருங்காலி மரம் என்பது சாதாரண மரம் போல் அல்லாமல் நாளாக நாளாக கருமை அடையக் கூடியது. கருங்காலி கட்டை பல்வேறு வடிவங்களில் பல்வேறு விலைகளில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கப் பெறுகின்றன. இதனை வைத்து பூஜை செய்தால் குலதெய்வம் எங்கிருந்தாலும் ஓடோடி நம் வீட்டிற்கு வரும் என்பது ஐதீகம். அது போல் கருங்காலியால் ஆன காப்புகள், மாலைகள் என்ற நவீன யுகத்துக்கு ஏற்ப பல விதங்களில் உருவாக்கப்படுகின்றன.

- Advertisement -

உண்மையான கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட இந்த பொருட்களை நாம் பயன்படுத்தும் பொழுது நம்மிடம் இருக்கும் அத்தனை கெட்ட சக்திகளும் நீங்கி, நல்ல ஒரு அதிர்வலைகள் உண்டாகும். பிரபஞ்சத்தில் இருக்கும் சக்திகளை தன்னுள்ளே கொண்டுள்ள கருங்காலி கட்டை நம் வீட்டில் இருந்தால் எந்த ஒரு தோஷமும் அணுகுவதில்லை. துஷ்ட சக்திகள் எல்லாம் தெறிக்க ஓடி விடும். எந்த ஒரு சூழ்நிலையிலும் நேர்மறையான எண்ணங்கள் நம்மிடம் இருந்து விலகி நிற்காமல் நல்ல பாதையை கற்றுக் கொடுக்கும்.

karungali-kattai1

கருங்காலி கட்டை வாங்கி வந்து அதற்கு முறையாக தண்ணீரால் கழுவி சுத்தம் செய்த பின் பன்னீர் அபிஷேகம், பால் அபிஷேகம் செய்து சந்தன குங்குமம் இட்டு பயபக்தியுடன் பூஜை அறையில் வைத்தால் போதும். உங்களுக்கு இருக்கும் கடன் தொல்லைகள், பகைவர்கள் பிரச்சனைகள், குடும்பத்தில் இருக்கும் சண்டை சச்சரவுகள், தொழில் தடை, திருமணத்தடை, வருமான தடை, வியாபார விருத்தியின்மை, வேலையின்மை, ஆரோக்கிய பிரச்சனைகள் என்று எந்த வகையிலும் உங்களுக்கு பிரச்சனைகள் இருந்தாலும் கருங்காலிக் கட்டையை வழிபடுவதன் மூலம் நொடியில் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே
உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தை பார்த்து, பொறாமைப்பட்டு, வயிற்றெரிச்சல் பாடுபவர்களின் கண் திருஷ்டி கருகிப் போகும். இந்த 3 பொருட்களை நெருப்பில் போட்டால்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.