அருள்மிகு மூகாம்பிகை கோவில் வரலாறு

mookambika2
- Advertisement -

தேவி ஸ்ரீ மூகாம்பிகை
இத்தளத்தில் முதன்முதலில் அம்பாள் மூகாம்பிகையானவள், சிலை வடிவில் இல்லை. மூலவராக சுயம்பு லிங்கம் மட்டுமே இருந்தது. சிவபெருமானின் லிங்கத்தில், அம்பாள் அரூபமாகவே பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தார். ஆதிசங்கரர் இந்த கோவிலுக்கு வருகை தந்தபோது சுயம்பு லிங்கத்தை மட்டுமே தரிசனம் செய்தார். இந்த கோவிலில் இருக்கும் சுயம்பு லிங்கத்தை முதன்முதலில் வழிபட்டவர் கோல மகரிஷி ஆவார். லிங்கத்தில் அரூப வடிவில் மறைந்திருக்கும் அம்பாளை வெளிக்கொண்டு வருவதற்கு ஆதிசங்கரர் கடும் தவம் மேற்கொண்டார். ஆதிசங்கரரின் வேண்டுதலை ஏற்ற தேவி, மூகாம்பிகை வடிவில் ஆதிசங்கரருக்கு காட்சி தந்தால். அந்த ரூபத்தை மூகாம்பிகை சிலையாக உருவம் அமைத்து பிரதிஷ்டை செய்தார் ஆதிசங்கரர். இங்கு இருக்கும் அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரமும், ஆராதனையும் மட்டுமே நடைபெறும். அபிஷேகங்கள் எல்லாம் லிங்கத்திற்கு மட்டுமே நடைபெறுகிறது. இத்தளத்தில் இருக்கும் லிங்கத்தின் நடுவே தங்க நிற கோடு உள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. கோடு இருப்பதை அபிஷேக நேரத்தில் மட்டுமே காண முடியும். லிங்கத்திற்கு இடது பக்கமாக பிரம்மா விஷ்ணு சிவன் இவர்கள் மூவரும், வலது பக்கமாக சரஸ்வதி லட்சுமி பார்வதி இவர்கள் மூவரும் வீற்றிருப்பதாக இருப்பதாக கூறப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் லிங்கத்தை வணங்கினால் கோடி புண்ணியம் கிடைக்கும். முதன்முதலாக இந்த லிங்கத்தை கோல மகரிஷி  வழிபட்டதால் கொல்லூர் என்ற பெயர் இந்த இடத்திற்கு வந்தது. இத்திருத்தலம் 51 சக்தி பீடங்களில் அம்பாளின் காதுகள் விழுந்த பகுதியாக கருதப்படுகிறது.

mookambika

இங்கு காட்சிதரும் ஸ்ரீ மூகாம்பிகையின் இரு பக்கங்களிலும் ஐம்பொன்னாலான காளி தேவியும், சரஸ்வதி தேவியும் காட்சி தருகின்றனர். இதனால் இவர்களுக்கு முப்பெரும் தேவியர் என்ற சிறப்பு பெயரும் உண்டு. நவராத்திரியின் ஒன்பது தினங்களும் இங்கு விசேஷமான பூஜைகள் நடத்தப்படும். அம்பிகையை பிரதிஷ்டை செய்த ஆதிசங்கரர் மூகாம்பிகையை, சரஸ்வதி தேவியாக நினைத்து வணங்கி ‘கால ரோகணம்’ பாடி அருள் பெற்றார். இத்தளத்தில் இருக்கும் சரஸ்வதி தேவியின் சிலையானது, சரஸ்வதி பூஜை அன்று வீதி உலா எடுத்துச் செல்லப்படுகிறது. குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு வித்தியாரம்ப நிகழ்ச்சியும் சரஸ்வதி பூஜை அன்று சிறப்பாக இத்தளத்தில் நடத்தப்படுகிறது.

- Advertisement -

தல வரலாறு
பல நூறு வருடங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் வாழ்ந்துவந்த மூகாசுரன் என்ற ஒரு அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து பெறக்கூடாத வரங்களை எல்லாம் பெற்று விட்டான். இதனால் அவனது தலைகணம் அதிகமாகி சாதாரண மக்களையும், ரிஷிகளையும் துன்புறுத்தி வந்தான். இதனைக் கண்ட தேவர்கள் மக்களை காப்பாற்ற வேண்டி அம்பிகையிடம் முறையிட்டனர். இதனால் மூகாசுரனிடம் போர் கொண்ட தேவி, மூகாசுரனை வென்றாள். அம்பிகையிடம் சரணடைந்தான் அசுரன். தனது கர்வத்தை அடக்கிய அம்பாளிடம் ஒரு வேண்டுகோளை வைத்தான் மூகாசுரன். தன்னை தோற்கடித்த அந்த இடத்திலேயே மக்களை காக்க தேவி இருக்க வேண்டும் என்ற என்ற முகாசுரன் எண்ணத்திற்கு இணங்க அவன் பெயரிலேயே மூகாம்பிகை என்ற பெயரில் அந்த இடத்தில் தங்கி விட்டால் தேவி.

mookambika

பலன்கள்
கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதியின் அம்சமான மூகாம்பிகையே வழிபட்டால் மிகவும் சிறந்தது.

- Advertisement -

செல்லும் வழி
மங்களூரில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் கொல்லூர் அமைந்துள்ளது.

தரிசன நேரம்:
காலை 05.00AM – 01.00PM
மாலை 03.00PM – 09.00PM

- Advertisement -

முகவரி:
அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில்,
கொல்லூர்-576 220,
குந்தாப்பூர் தாலுக்கா,
உடுப்பி மாவட்டம்,
கர்நாடகா மாநிலம்.

தொலைபேசி:
+91-8254-258 254, 094481 77892.

இதையும் படிக்கலாமே
உங்கள் தினசரி பழக்கவழக்கத்தை இனி இப்படி மாற்றிக் கொள்ளுங்கள். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Mookambika temple history Tamil. Mookambika temple timings kollur. Kollur mookambika temple details. Kollur mookambika temple vazhipadu.

- Advertisement -