5 நிமிசத்துல நல்லா காரசாரமா மிளகு, சீரகம் எல்லாம் சேர்த்து இப்படி மோர் ரசம் வச்சு பாருங்க. இனி எப்ப ரசம் வச்சாலும் இதை தான் ட்ரை பண்ணுவீங்க டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

நம் உணவுப் பழக்கத்தில் என்ன தான் வகை வகையாக சமையல் செய்து வைத்தாலும் கடைசியாக கொஞ்சம் மோர், ரசம் கண்டிப்பாக இருக்கும். ஒரு விருந்தென்றால் எப்படி வடை, பாயாசம் கண்டிப்பாக இருக்குமோ, அதே போல தான் இந்த மோரும் ரசமும். ஒரு சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் கடைசியில் கொஞ்சம் ரசம் ஊற்றி சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தியை இருக்கும் அதை போல் தான் இந்த மோரும். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் மோரை வைத்து ரசம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

ரசத்தில் பல வகை உண்டு மிளகு ரசம், பூண்டு ரசம், தக்காளி ரசம், பருப்பு ரசம் இப்படி ரசமே பல வகைகளில் உண்டு. இந்த மோரை வைத்து ரசம் வைப்பதிலும் ஒரு பலன் உண்டு நிறைய பேருக்கு புளி ஒத்துக் கொள்ளாது என்ன தான் ரசம் உடலுக்கு நல்லது என்றாலும் அதில் புளி சேர்த்து செய்வதால் சிலரால் அதை சாப்பிட முடியாது. அப்படியானவர்கள் இந்த முறையில் ரசம் வைத்து சாப்பிடலாம் சுவையும் பிரமாதமாகவே இருக்கும்.

- Advertisement -

மோர் ரசம் செய்முறை:
முதலில் ஒரு கப் புளித்த தயிரை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் சமையல் சோடா, ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, (அரிசி மாவு சேர்ப்பதால் அடுப்பில் வைத்து ரசத்தை சூடு செய்யும் போது மோர் திரிந்து போகாமல் இருக்கும்). இவை அனைத்தையும் சேர்த்த பிறகு மத்து வைத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதை மிக்ஸியில் சேர்த்து அரைத்தால் ரசத்தின் தன்மை மாறி விடும்.

அடுத்து 1 டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் சீரகம், 4 சின்ன வெங்காயம் உரித்தது, 5 பல் பூண்டு, 2 பச்சை மிளகாய் இவை அனைத்தையும் ஒரு இடி உரலில் சேர்த்து ரசத்திற்கு நன்றாக இடித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடானவுடன், அரை டீஸ்பூன் கடுகு, கால் டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்றாக பொரிந்த உடன் ஒரு கொத்து கறிவேப்பிலையும், இரண்டு காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு பொரிந்தவுடன் ரசத்துக்கு நசுக்கி வைத்த மிளகு, சீரக கலவையை இதில் சேர்த்து நன்றாக பொரிய விட்டு இப்போது அடுப்பை அணைத்து விட்டு, தாளித்ததை எல்லாம் தயிர் கடைந்து வைத்திருக்கிறோம் அல்லவா அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த தயிரில் ரசத்திற்கு தேவையான தண்ணீரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஆந்திரா ஸ்டைலில் தக்காளி பருப்பு கடையல் சாப்பிட்டு இருக்கீங்களா? எப்பவும் செய்ற கடையல் மாதிரி இல்லாம புளிப்பு, காரம், எல்லாம் சேர்த்து செம டேஸ்டா இருக்கும். இட்லி, தோசை, சாதம் என எல்லாத்துக்குமே ஒரு பக்கா வான சைடிஷ்.

கடைசியாக அடுப்பை பற்ற வைத்து எல்லாம் தயார் செய்து வைத்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து லேசாக சூடேறி வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை தூவி மூடி போட்டு வைத்து விடுங்கள். அருமையான மோர் ரசம் தயார். இது லேசாக சூடு ஏறி நுரை வந்தால் போதும் பொங்கி விடக் கூடாது தயிர் திரிந்து விடும்.

- Advertisement -