மொறு மொறுன்னு கீரை வடை சாப்பிட உங்களுக்கு பிடிக்குமா? அடிக்கடி ரோட்டு கடையில் போய் இந்த வடையை நீங்கள் சாப்பிடுபவர்களாக இருந்தால், இனி இதை வீட்டிலேயே சுட்டு சாப்பிடலாமே.

vadai
- Advertisement -

நிறைய இடங்களில் மொறுமொறுப்பாக கீரை வடைகள் ரோட்டு கடைகளில் கிடைக்கும். பாட்டிகள் சுட்டு விற்பனை செய்யும் வடையிலிருந்து வரக்கூடிய வாசமே நம்மை இழுக்கும். மூக்கைத் துளைக்கும். கட்டாயம் இதை வாங்கி சாப்பிட வேண்டும் என்று நாக்கு சொல்லும். ஆனால், அடிக்கடி இதை கடையில் வாங்கி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது அல்ல. வீட்டிலேயே மொறு மொறுப்பாக கீரை வடை செய்வது எப்படி பக்காவான ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பு – 1/2 கப், உளுந்தம் பருப்பு – 1/2 கப், இரண்டையும் சம அளவில் எடுத்து போட்டு நன்றாக கழுவி நல்ல தண்ணீரை ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பருப்பு நன்றாக ஊறி வந்ததும் இதை ஒரு வடிகட்டியில் ஊற்றி தண்ணீரை மட்டும் வடிகட்டி விட்டு விடுங்கள். பருப்பில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இருக்கக் கூடாது. ஊறிய பருப்பை மட்டும் மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.

- Advertisement -

மிக்ஸி ஜாரில் போட்டு இருக்கும் பருப்போடு, வர மிளகாய் – 3, பச்சை மிளகாய் 1, சோம்பு – 1 ஸ்பூன், இஞ்சி தோல் சீவியது – 1 இன்ச், போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் இதை கொறகொறப்பாக கட்டியாக ஆட்டி தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளவும். மாவு தளதளவென ஆட்டி எடுத்து விட்டால், வடையில் மொறுமொறுப்பு இருக்காது. கவனமாக மாவை மிக்சியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள். கிரைண்டரிலும் போட்டு அரைக்கலாம் அது நம்முடைய விருப்பம்.

அரைத்த இந்த மாவோடு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய – கருவேப்பிலை கொத்தமல்லி தழை, தேவையான அளவு – உப்பு, இறுதியாக பொடியாக நறுக்கிய – கீரை, சேர்க்க வேண்டும். சிறு கீரை, அரைக்கீரை, பாலக்கீரை, முருங்கைக்கீரை, என்று எந்த கீரையாக இருந்தாலும் அதை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கழுவி தண்ணீர் முழுவதையும் வடிகட்டி விட்டு, அந்த கீரையை தேவையான அளவு இந்த மாவில் சேர்த்து உங்கள் கையை கொண்டு நன்றாக பிசைய வேண்டும். அவ்வளவு தான். வடை விட மாவு தயார்.

- Advertisement -

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை ஊற்றி சூடு செய்ய வேண்டும். எண்ணெய் நன்றாக சூடாகி வந்ததும் அதில் இந்த வடையை விட வேண்டும். கையைத் தண்ணீரில் நனைத்துக் கொள்ளுங்கள். சிறிய அளவு மாவை உருண்டை செய்து எடுத்து தட்டி, நடுவே ஓட்டை போட்டு, எண்ணெயில் விடுங்கள். மிதமான தீயில் வடை நன்றாக வெந்து மேலே சிவந்து மொறுமொறுப்பாக கிடைக்கும். தடிமனாகவும் வடையை விடாதீங்க. ரொம்ப மெல்லிசாகவும் வடைய விடாதீங்க. மீடியம் சைஸில் வடையை தட்டி விட்டுக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் கேரட்டை மில்க் ஷேக் போடுவது எப்படி? இப்படி ஜூஸ் போட்டுக் கொடுத்தா குழந்தைகள் சமத்தா குடிச்சிடுவாங்களே!

எண்ணெயில் மாவை விட்டவுடன், வடையில் இருக்கும் சடசிடப்பு அதிகமாக இருக்கும். அந்த சிடசிடப்பு எல்லாம் அடங்கி வடை சிவந்து வந்ததும், வடையை எண்ணெயில் இருந்து எடுத்து சுடச்சுட சாப்பிட்டு பாருங்கள். ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இது ஒரு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ரெசிபி. மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -