வரவுக்கு மீறிய செலவா? இந்த விஷயத்தை கவனித்தால் போதும். பணம் தங்க எளிய வாஸ்து குறிப்பு!

vasthu-money

எவ்வளவுதான் சம்பாதித்தாலும் சம்பாதித்த பணம் முழுவதும் விரயம் ஆகிக்கொண்டே இருக்கிறது. பணம் தங்குவது இல்லை. வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது என்று சிலர் புலம்புவதை பார்த்திருக்கிறோம். சம்பாதித்த பணத்தில் சிறிதும் சேமிக்க முடியாமல் போவதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம். எதற்கு பணம் செலவாகிறது என்று அவர்களுக்கே புரியாமல் இருக்கும். பணம் மட்டும் வந்த வழியே சென்று கொண்டே இருக்கும். இதற்கு வீட்டின் அமைப்பும் சிறு சிறு மாற்றங்களும் கூட காரணமாக இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அப்படி என்ன பிரச்சனைகளால் பணம் வீணாக வாய்ப்புகள் உள்ளது என்று இப்பதிவில் காணலாம்.

vastu

வாஸ்து சாஸ்திரத்தின்படி பணம் விரயம் ஆவதற்கு தென்மேற்கு மூலையில் இருக்கும் சில விஷயங்கள் முக்கிய காரணமாக இருக்கும். அதன்படி தென்மேற்கு மூலையில் படுக்கை அறை அமைத்திருந்தால், அந்த அறையை கட்டாயம் குடும்பத்தின் தலைவராக இருப்பவர் உபயோகப்படுத்தக் கூடாது. அவ்வாறு உபயோகப்படுத்தும் பட்சத்தில் தேவையற்ற வழிகளில் பணம் செலவாகிக் கொண்டே இருக்கும். குடும்பத் தலைவரை தவிர மற்ற குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தலாம். அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. யாரால் குடும்பம் இயங்கிக் கொண்டிருக்கிறதோ அவர்கள் ‘தென்மேற்கு மூலை படுக்கை அறையை’ பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

வீட்டின் தென்மேற்கு பகுதியை தெருத்தாக்கம் இல்லாமல் அமைத்திருப்பது அவசியமாகிறது. உங்கள் தெருவின் பார்வை தென்மேற்கு மூலையில் படாதபடி இருக்க வேண்டும். அப்படி தெருத்தாக்கம் இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டில் அனாவசிய செலவுகள் வந்து கொண்டே இருக்கும். அதேபோல் வடகிழக்கு பகுதி, தென்மேற்கு பகுதியை விட தாழ்வாக இருக்கக் கூடாது. அதையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள். வடகிழக்கு பகுதி, தென்மேற்கு பகுதியை விட தாழ்வாக இருக்கும் போது தேவையற்ற விரயங்கள் ஏற்படக்கூடும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

cash-box

பணத்தை தென்மேற்கு பகுதியில் தேக்கு பெட்டியில் சேமித்து வைப்பது நல்ல ஒரு பணவரவை ஏற்படுத்தும். தேக்கு மரம் எதையுமே தன்னுள் தேக்கி வைப்பதால் அதற்கு தேக்கு என்றே பெயர் வந்தது. அதன் திடத்தன்மை எவ்வளவு உறுதியானதோ அந்த அளவிற்கு தன சேமிப்பு உண்டாகும். எனவே தேக்கு மரத்தால் ஆன பணப்பெட்டியை சேமிப்பிற்கு பயன்படுத்தும் பொழுது பணம் தங்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

- Advertisement -

வீட்டின் பணப்பிரச்சனைக்கு வடமேற்கு பகுதி பாதிக்கப்பட்டிருப்பது காரணமாக இருக்கலாம். எனவே வடமேற்கு பகுதியை பாதிப்பு ஏற்படாதவாறு அமைத்திருப்பது உறுதி செய்து சரி பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டின் வடமேற்கு பகுதியில் பாதிப்புகள் இருப்பது தேவையற்ற வழிகளில் பணம் விரயம் ஆவதற்கு வழிவகுக்கும். உதாரணத்திற்கு வடமேற்கில் கூரை பகுதி தாழ்வாக அமைத்திருந்தால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கடன் கொடுக்க வேண்டி வரலாம். பிறருக்கு ஜாமீன் கையெழுத்து போடுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இதுவும் தேவையற்ற செலவுகளில் அடக்கம் தானே? இது போன்ற பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு வீட்டில் இருக்கும் வாஸ்து குறைகளை சரியான வாஸ்து நிபுணர்களை அணுகி சரி பார்ப்பது நல்லது.

நம் அனைவரின் வாழ்விலும் பணம் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அதை நல்ல காரியங்களுக்காக செலவு செய்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. உடல் நலம் பாதிப்பது, அதனால் மருத்துவ செலவு ஏற்படுவது, பிறருக்கு கடன் கொடுப்பது, அதனால் வரும் பிரச்சனைகளை சமாளிப்பது, வழக்குகளுக்காக செலவு செய்வது போன்ற விஷயங்களால் செலவு செய்யக்கூடிய பணமானது வீண்விரயம் தான். சுப காரியங்கள் செய்தல், வீடு கட்டுதல், தொழில் அமைத்தல் போன்ற விஷயத்திற்காக செலவு செய்வது நல்லது. அனாவசியமாக பணம் செலவழிய வாஸ்து பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதனை சரி செய்வதன் மூலம் உங்களின் உழைப்பு வீணாவது தடுக்கப்பட்டு சேமிப்பு உயரும் என்பது உண்மையான ஒரு விஷயமாகும்.

இதையும் படிக்கலாமே
செல்வத்தை தன்வசம் ஈர்க்கும் இந்த வாஸ்து பொருட்கள் உங்கள் வீட்டில் இல்லையா!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான வாஸ்து சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vastu tips for money in Tamil. Vastu tips Tamil. Vastu tips for home Tamil. Vastu tips for money problem. Vastu tips for wealth.