ஒத்தையா இருக்கிற முடியை கத்தையா வளர வைக்கும், கருப்பு கொண்டை கடலை! ஊட்டச்சத்து இல்லாமல் உதிரும் முடியை கூட, உதிராமல் பாதுகாக்கும் ஹார்பேக்.

hair16
- Advertisement -

ரொம்பவும் மெல்லிசாக இருக்கக்கூடிய உங்களுடைய முடியை ஒரு சில நாட்களில் அடர்த்தியாக மாற்றவும், ஊட்டச்சத்து இல்லாத ஸ்கேல்பை ஊட்டச்சத்து நிறைந்ததாக மாற்றவும், ஒரு சூப்பரான பெஸ்ட் ஹேர் பேக் ரெமடியை தான் இன்றைக்கு நாம் பார்க்கப் போகின்றோம். தலைப்பை படைத்த உடனே உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த ஹேர் பேக்கில் நாம் முதல் பொருளாக பயன்படுத்த போவது கருப்பு கொண்டை கடலை. கருப்பு கொண்டை கடலையில் இருக்கக் கூடிய புரோட்டின் சத்து, நம்முடைய வேர் கால்களுக்கு நல்ல வலுவை கொடுக்கும். இந்த கருப்பு கொண்டை கடலையை எப்படி ஹேர்பேக்காக பயன்படுத்த போகின்றோம் என்பதை பற்றிய அழகு குறிப்பு இதோ உங்களுக்காக.

கருகரு முடியை தரும் கருப்பு கொண்டை கடலை ஹேர் பேக்:
எட்டு மணி நேரம் கருப்பு கொண்டை கடலையை தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். மறுநாளுக்கு இந்த ஹேர் பேக்கை தயார் செய்ய போவதாக இருந்தால் முந்தைய நாள் இரவே கருப்பு கொண்டை கடலையை தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மறுநாள், காலை மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஊற வைத்திருக்கும் கருப்புக் கொண்ணடை கடலையை தண்ணீரோடு ஊற்றிக் கொள்ளவும். கருவேப்பிலை 1 கைப்பிடி அளவு, தயிர் 2 டேபிள் ஸ்பூன், செம்பருத்தி இலை 15, இந்த பொருட்களை எல்லாம் போட்டு விழுது போல அரைத்துக் கொள்ளவும்.

செம்பருத்தி இலை சேர்ப்பதால் இது ஒரு கொழ கொழப்பு தன்மையோடு நமக்கு கிடைத்திருக்கும். தேவைப்பட்டால் இதை ஒரு காட்டன் துணியில் வடிகட்டி ஒரு கிண்ணத்தில் ஹேர் பேக்கை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஹேர் பேக்கில் முட்டை 1, உடைத்து ஊற்றி நன்றாக கலந்து விட்டு விளக்கெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் ஊற்றி, மீண்டும் இந்த ஹேர் பேக்கை கலந்தால் சூப்பரான ஹேர் பேக் தயார்.

- Advertisement -

உங்களுடைய தலையில் தேங்காய் எண்ணெய் வைத்து, 1 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். பிறகு இந்த ஹேர் பேக்கை தலையில் போட்டு 30 நிமிடங்கள் கழித்து மயில்டான ஷாம்பு போட்டு ஹேர் வாஷ் செய்துவிட்டால் போதும். தலைமுடி சில்க்கியாக மாறும். வேர்க்கால்கள் ஊட்டச்சத்து பெறும். முடி உதிர்வு குறையும். ஒவ்வொரு முடியும் திக்காக வளரும். ரொம்பவும் மெலிசாக இருக்கக்கூடிய உங்களுடைய முடி ஒரு சில நாட்களில் நல்ல அடர்த்தியை பெரும். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த ஹேர் பேக்கை போடலாம்.

இதையும் படிக்கலாமே: அச்சச்சோ முடி கொட்டுமே என்ற பயம் இனி வேண்டவே வேண்டாம். இந்த 2 பொருள் இருந்தால் போதும். எப்போதுமே உங்க முடி பொடுகு அரிப்பு வராமல், உதிராமல் ரொம்ப ரொம்ப பத்திரமா இருக்கும்.

கூடவே வாரத்தில் மூன்று நாட்கள் இந்த கருப்பு கொண்டை கடலையை சுண்டல் செய்து சாப்பிட வேண்டும். முடிந்தால் முளைகட்டிய பயிறு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர உங்களுடைய முடிவுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து, முடி இன்னும் பல மடங்கு அடர்த்தியாக உதிராமல் சீக்கிரம் வளர தொடங்கும். எப்போதும் போல சொல்வது தான். ஹேர் பேக் 50% பலன் தந்தால், 50% நீங்கள் உள்ளுக்கு சாப்பிடக்கூடிய பொருட்களின் மூலம்தான் முடி வளர்ச்சியை பெற முடியும். உங்களுக்கு இந்த எளிமையான அழகு குறிப்பு பிடித்திருந்தால் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -