கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு முடி வளர வேண்டுமா? கருவேப்பிலை ஹேர் பேக்கை இப்படி போடுங்க.

hair2
- Advertisement -

ஹேர் பேக் தயார் செய்ய முடி வளர்ச்சிக்கு தேவையான பொருட்கள் என்றால் 15 லிருந்து 20 பொருட்கள் வரை தான் இருக்கும். அவ்வளவு தான். அந்த பொருட்களை தான் நாம் மீண்டும் மீண்டும் தலைமுடிக்கு ஊட்டச்சத்தை கொடுக்க ஹேர் பேக் போட்டு வர வேண்டும். இந்த பொருட்களின் வரிசையில் இருந்து ஒரே மாதிரி பொருட்களை பயன்படுத்தாமல், வேறு வேறு பொருட்களை பயன்படுத்தி வர வேண்டும். எந்த பொருளோடு எந்த பொருள் சேரும்போது நமக்கு முடி வளர்ச்சி அதிகமாக இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டு ஹேர் பேக்கை போட வேண்டும். (தலைமுடிக்கு ஊட்டச்சத்துக் கொடுக்கும் பொருட்கள் என்றால் நெல்லிக்காய், செம்பருத்தி பூ இலை, கற்றாழை, கருவேப்பிலை, வெந்தயம், ஆளி விதை, கொய்யா இலை, மருதாணி இலை, முட்டை இது போன்ற பொருட்கள் அடங்கும்.)

அந்த வரிசையில் ஒரு கருவேப்பிலை ஹேர் பேக்கை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இந்த கருவேப்பிலையோடு வேறு எந்தெந்த பொருட்கள் சேரும் போது நம்முடைய முடிக்கு ஊட்டச்சத்து அதிகமாக கிடைத்து, முடி வளர்ச்சி கருகருவென அதிகரிக்கும் என்று தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

கருவேப்பிலையோடு இன்றைக்கு நாம் சேர்க்கப் போகும் பொருள் ஆரோவேரா ஜெல். அது இயற்கையாக கிடைத்த அலோவேரா ஜெல்லாக இருந்தாலும் சரி, அல்லது கடையில் வாங்கிய ஆலோவேரா செல்லாக இருந்தாலும் சரி, கடையில் வாங்கிய ஆலோவேரா ஜெல்லாக இருந்தால் கட்டாயமாக அதில் கலர் இருக்கக் கூடாது. வாசனை திரவியமும் இருக்கக்கூடாது. பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். மூன்று கைப்பிடி அளவு கருவாப்பிலைகளை சுத்தமாக கழுவி விட்டு அந்த மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல அரைத்து இதை வடிகட்டி கருவாப்பிலை சாறை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அடர் பச்சை நிறத்தில் கருவேப்பிலை சாறு நமக்கு கிடைக்கும் அல்லவா. இந்த கருவேப்பிலை சாறுடன் ஆலுவேரா ஜெல் 3 டேபிள்ஸ்பூன் சேர்த்து நன்றாக அடித்து கலக்க வேண்டும். இது ஒரு ஜெல் போல நமக்கு கிடைத்திருக்கும். இதில் விளக்கெண்ணெய் 1, ஸ்பூன் லேசாக புளித்த தயிர் 2 டேபிள் ஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்தால் சூப்பரான ஹேர்பேக் தயார். (இந்த பேக் கொஞ்சம் லிக்விட் ஆக தான் இருக்கும்.

- Advertisement -

உங்களுக்கு தயிர் தேவை என்றால் போட்டுக் கொள்ளலாம். தயிர் தேவையில்லை என்பவர்கள் அதை ஸ்கிப் செய்து கொள்ளலாம். ஆனால் தயிரிலும் தலைமுடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. குறிப்பாக உங்களுடைய தலையில் டேன்ட்ரஃப் இருந்தால் அதை சரி செய்ய இந்த தயிர் உதவும். இந்த பேக்கை தலையில் போடுவதற்கு 20 நிமிடங்கள் முன்பு உங்களுடைய தலையில் தேங்காய் எண்ணெயை வைத்து சிக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஹேர் பேக்கை முதலில் ஸ்கால்ப்பில் நன்றாக போட வேண்டும். அதன் பின்பு முடியின் நுனிப்பாகம் வரை மீதம் இருக்கும் ஹர்பேக்கை போட்டு நன்றாக தடவிக் கொள்ளுங்கள். முடியின் நுனியில் நன்றாக ஹேர் பேக்கை போட்டு விடுங்கள். ஒரு கொண்டை கட்டிக்கொண்டு 20 நிமிடங்கள் கழித்து எப்போதும் போல தலைக்கு குளித்துக் கொள்ளலாம்.

அவ்வளவு தான். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த பேக்கை போடுங்க. ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை சாப்பிடுங்க. கூடவே கருவேப்பிலை பொடியை உள்ளுக்கும் எடுத்துக் கொள்ளுங்கள். கூடிய சீக்கிரத்தில் உங்களுடைய முடி கருகருவென வளரத் தொடங்கும்.

இதையும் படிக்கலாமே: வெள்ளை முடியை கருப்பாக்க காசு கொடுத்து ‘ஹேர் டை’ வாங்காதீங்க! இந்த 3 பொருள் இருந்தா போதும் இயற்கையாகவே 10 வயதை குறைத்து விடலாமே!

இளநரை உள்ளவர்கள் இந்த குறிப்பை பின்பற்றி வந்தால் சீக்கிரம் நரைமுடி வெள்ளையாக மாறும். புதிய முடிகள் கருப்பாக வளரும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -