ஒரு முடி கொட்டிய இடத்தில் கட்டாயம் 10 முடி வளரும். பக்காவான ஹேர் குரோத் ஐடியா இதோ உங்களுக்காக.

hair-fall-image
- Advertisement -

சீப்பை வைத்து தலையை சீவும் போதெல்லாம் நமக்கு ஒரு பயம். எப்போ வழுக்கை விழுந்து விடுமோ என்ற கவலை இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. ஏனென்றால் சீப்பில் கொத்துக்கொத்தாக முடி உதிர்வு. தலையில் பார்த்தால் ஆங்காங்கே வழுக்கை விழுவதற்கான அறிகுறியும் தெரிகிறது. முடி கேப் விட்டு இருக்கிறது. இடை இடையே இருந்த முடியை காணோம். என்ன செய்வது. உடனே பதட்டம் வந்துவிடும். நமக்கு வயதான தோற்றம் தெரியப்போகிறது தலைமுடி வழுக்கை விழப்போகிறது என்று. ஆனால் முடி உதிரும் போது முதலில் நமக்கு பயம் வரக்கூடாது. அந்த முடி உதிர்வதை எப்படி நிறுத்துவது என்று தான் யோசிக்க வேண்டும். முடி உதிர்வை நிறுத்த எளிமையாக பல வழிகள் உள்ளது. இன்று அதில் ஒரு சூப்பரான அழகு குறிப்பு தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வழுக்கை விழாமல் தலை முடியை வளரச் செய்யும் ஹேர் பேக்:
இந்த ஹேர் பேக்குக்கு நான் பயன்படுத்த போகும் பொருள் ஆளி விதை, சின்ன வெங்காயம், விளக்கெண்ணெய், இதில் சின்ன வெங்காயமும் விளக்கெண்ணெயும் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பொருட்கள் தான். அடுப்பில் முதலில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவு ஆளி விதை போட்டு, 2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். இது கொதிக்கட்டும்.

- Advertisement -

இதற்குள் ஒரு மிக்ஸி ஜாரில் 10 லிருந்து 15 சின்ன வெங்காயங்களை போட்டு தண்ணீர் ஊற்றாமல் விழுதாக அரைத்து வடிகட்டினால் கொஞ்சம் சாறு கிடைக்கும். அந்த சாறு தனியாக அப்படியே இருக்கட்டும்.

இதற்குள் ஆளி விதை நன்றாக கொதித்து தண்ணீர், ஜெல் பதத்தில் மாறி இருக்கும். அது சுடச்சுட இருக்கும்போதே ஒரு ஸ்டீல் வடிகட்டியில் வடிகட்டிக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொழ கொழப்புடன் ஒரு ஜெல் மாதிரி லிக்விட் நமக்கு கிடைத்திருக்கும். அதில் இந்த வெங்காயச் சாறை ஊற்றி, 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றி இதை அடித்து கலக்க வேண்டும். முட்டை அடித்து கலக்குவது போல கலக்குங்கள். இல்லையென்றால் இதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் ட்ரான்ஸ்ஃபர் செய்து இரண்டு ஓட்டு ஓட்டி எடுத்துக் கொண்டாலும் சரிதான். நமக்கு தேவையான சூப்பரான ஜெல் கிடைத்துவிட்டது.

- Advertisement -

ஆளி விதை ஜெல், சின்ன வெங்காயச்சாறு, விளக்கெண்ணெய் இந்த மூன்றும் சேர்ந்த கலவை முடி வளர்ச்சிக்கு ரொம்ப ரொம்ப உதவியாக இருக்கும். இதை அப்படியே எடுத்து உங்களுடைய ஸ்கேல்ப் முழுவதும் தடவி மசாஜ் செய்ய வேண்டும். முடிக்கு மேலே தடவாதீங்க. முடியை பாகம் பாகங்களாகப் பிரித்து வேர்க்கால்களில் படுகின்றபடி ஜெல்லை தடவி, ஜென்டில் ஆக விரல்களை வைத்து மசாஜ் செய்யுங்கள். நகத்தை வைத்து மசாஜ் சொரியாதீங்க. (மீதம் நிறைய ஜெல் இருந்தால் நுனி முடி வரை தடவலாம் தவறு கிடையாது. முதலில் கவனம் செலுத்த வேண்டிய இடம் பெயர் கால்கள்.)

இதையும் படிக்கலாமே: உங்க முடி போஷாக்கே இல்லாம டிரையா இருந்தா உடனே இத ட்ரை பண்ணுங்க. முடி பட்டு போல ஷைனிங்கா மாறி தரையை தொடும் அளவிற்கு வளரும். உங்க முடி அழகை பார்த்து நீங்களே பொறமை படுவீங்க.

பிறகு 15 நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு தலைக்கு குளித்துக் கொள்ளலாம். வாரத்தில் ஒரு நாள் இந்த குறிப்பை பின்பற்றி வந்தாலே முடி கொட்டிய இடத்தில் எல்லாம் வளரத் தொடங்கும். மூன்று மாதத்தில் நல்ல ரிசல்ட்டை எதிர்பார்க்கலாம். அதிக முடி உதிர்வு இருக்கிறது. முடி உதிர்ந்த இடத்தில் ஒரு முடி கூட முளைக்க வில்லை என்பவர்கள் உடனடியாக இதை முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற இந்த தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -