உங்க முடி போஷாக்கே இல்லாம டிரையா இருந்தா உடனே இத ட்ரை பண்ணுங்க. முடி பட்டு போல ஷைனிங்கா மாறி தரையை தொடும் அளவிற்கு வளரும். உங்க முடி அழகை பார்த்து நீங்களே பொறமை படுவீங்க.

hair homemade shampoo
- Advertisement -

முடி நன்றாக வளர வேண்டும் என்ற ஆசை படுவார்களை காட்டிலும், இருக்கும் முடி நல்ல போஷாக்குடன் பார்க்கவே அழகாக பளபளவென்று இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் இன்று அதிகம். இப்போதெல்லாம் இதற்கென கிடைக்கும் தேவை இல்லாத கெமிக்கல் கலந்த ஷாம்பூ, க்ரீம், சீரம் போன்றவற்றை அதிக அளவில் பயன்படுத்தி முடியின் இயற்கையான தன்மையே மாறி விடுகிறது. இத்தகைய பிரச்சனையை எளிதில் சரி செய்யக் கூடிய ஒரு இயற்கையான மூலிகை ஷாம்பு முறை பற்றி தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

மூலிகை ஷாம்பு தயாரிக்கும் முறை
இந்த ஷாம்பு தயாரிக்க 100 கிராம் சீயக்காய், 100 கிராம் பூந்திக்காய், 50 கிராம் காய்ந்த நெல்லிக்காய் இவை மூன்றையும் வாங்கி ஒரு முறை வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். காய்ந்த பிறகு பூந்திக்காயில் உள்ள கொட்டைகள் அனைத்தையும் எடுத்து விட்டு இதை ஒன்றிரண்டாக உடைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்த இந்த பவுடரை ஒரு பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து நான்கு டேபிள் ஸ்பூன் வெந்தயம் ஒரு ஸ்பூன் வேப்பிலை பொடி இதற்கு பிரெஷ் ஆன வேப்பிலை கிடைத்தால் அதை எடுத்து பவுடர் செய்து கொள்ளுங்கள். இல்லை எனில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பவுடரை வாங்கி ஒரு ஸ்பூன் மட்டும் எடுத்து இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஏற்கனவே அரைத்த சீயக்காய் பவுடரில் இப்போது அரைத்த இந்த வெந்தயம் வேப்பிலை பொடி இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்.

காலையில் தலைக்கு குளிப்பதாக இருந்தால் முதல் நாள் இரவே அடுப்பில் இரும்பு கடாய் வைத்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி சூடு படுத்துங்கள். இதற்கு இரும்பு கடாய் பயன்படுத்துவது மிகவும் நல்லது இல்லை என்றால் சில்வர் கடாய் பயன்படுத்துங்கள் அலுமினியத்தை பயன்படுத்த வேண்டாம். தண்ணீர் சூடானதும் அரைத்து வைத்த இந்த ஹெர்பல் ஷாம்பு பவுடரில் இருந்து 2 ஸ்பூன் மட்டும் சேர்த்து கலந்து விடுங்கள். இது நன்றாக கொதித்து வரும் போது அடுப்பை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் வரை அப்படியே விட்டு அதன் பிறகு அடுப்பை அணைத்த பின் தட்டு போட்டு மூடி விடுங்கள்.

- Advertisement -

இது இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். மறு நாள் காலையில் இந்த ஷாம்புவை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது வடிகட்டிய இந்த ஷாம்பு உடன் ஒரு ஸ்பூன் திக்கான தேங்காய் பாலை சேர்த்து எப்போதும் போல தலைக்கு குளித்து விடுங்கள். இதில் பூந்திக்கொட்டை சேர்த்திருப்பதால் நுரை வரும். ஆனால் ஷாம்பு அளவிற்கு வராது. எனவே சிறிது நேரம் எண்ணெய் பிசுக்கு போகும் வரை தேய்த்துக் தான் குளிக்க வேண்டும். இதை நீங்கள் அதிக அளவில் தயார் செய்து கூட ஃப்ரிட்ஜில் ஐஸ் க்யூப் ட்ரெயில் ஊற்றி எடுத்து வைத்து விடலாம். தலைக்கு குளிக்க சிறிது நேரத்திற்கு முன்பாக உங்கள் முடியின் அளவிற்கு ஏற்றார் போல் எடுத்து வெளியில் வைத்து பயன்படுத்தலாம்.

சீயக்காய் முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவி செய்யும். அதுவுமில்லாமல் முடியின் ஆரோக்கியத்திற்கு இது நல்லதும் கூட, அதே போல் நெல்லிக்காயும் முடியின் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்து மிக்க உணவு என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இதில் இருக்கும் வைட்டமின் சி முடிவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி செய்யும். இந்த பூந்திக்காய் நுரை வருவதற்காக மட்டுமின்றி முடி ஷைனங் ஆகவும், வெடிப்புகள் இல்லாமலும் உடைந்து விடாமலும் இருக்க உதவி செய்யும். அத்துடன் இந்த தேங்காய் பால் முடி வளர்ச்சிக்கும் வறச்சி தன்மை ஆகாமல் இருக்கவும், முடியில் இருக்கும் தேவையான எண்ணெய் பசையை தக்க வைக்கவும் இது மிகவும் உதவி செய்யும்.

இதையும் படிக்கலாமே: பொடுகு, அரிப்பு, கொப்பளம், பேன், இப்படி பல வகையான பிரச்சனைகளுக்கும் இயற்கையான முறையில் தீர்வு காண இதோ ஒரு சூப்பரான ஐடியா.

உங்கள் முடி எப்பொழுதும் ஆரோக்கியமாகவும், ஷைனிங்காகவும் நல்லபடியான முடி வளர்ச்சிக்கு இந்த ஹெர்பல் ஷாம்பு முறையை பயன்படுத்தி வந்தாலே போதும். இந்த முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -