முடி கொட்டும் பிரச்சினைக்கு மூன்றே நாட்களில் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு எளிமையான செலவில்லாத சூப்பரான ஹேர் பேக்.

green-tea-hair-fall
- Advertisement -

முடி கொட்டும் பிரச்சனை என்பது ஓரளவுக்கு கண்ட்ரோலில் தான் இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக கையோடு முடி வருவது குதிரைவால் போட்டுக்கொண்டு வீட்டில் இருந்தால் வீடு முழுவதும் முடி பறக்கிறது என்று சிலபேர் கொண்டை கட்டிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை எல்லாம் இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் எல்லாம் முடி உதிர்வை நிறுத்துவதற்கு ஏதாவது வழியைத் தேடி தான் ஆக வேண்டும். அதிகமாக இருக்கும் முடி உதிர்தலை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கு வீட்டில் இருந்தபடியே அழகு குறிப்பு ஒன்றை இன்று தெரிந்து கொள்ள போகின்றோம்.

அதிக முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு தரும் ஹேர் பேக்:
இந்த ஹேர் பேக் தயார் செய்ய நமக்கு டீ தூள், கருஞ்சீரகம், வெந்தயம், இந்த மூன்று பொருட்கள் தேவை. முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி 1 ஸ்பூன் டீ தூள், போட்டுக் கொள்ளவும். சாதாரண டீ தூள் நீங்கள் வீட்டில் குடிக்க பயன்படுத்தும் டீ தூள் அல்லது கிரீன் டீ என்று சொல்லுவார்கள் அல்லவா அந்த தேயிலையையும் இந்த இடத்தில் பயன்படுத்தலாம். தண்ணீர் நன்றாக கொதித்து தண்ணீரின் நிறம் மாறி வந்ததும் இந்த தண்ணீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். டீ தூள் தண்ணீர் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம், 1 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம், போட்டு சிவக்க வறுத்து அதை நன்றாக ஆற வைக்கவும். பிறகு மிக்ஸி ஜாரில் வறுத்த இந்த இரண்டு பொருட்களையும் போட்டு கொதிக்க வைத்திருக்கும் டீ தூள் தண்ணீரை இதில் ஊற்றி விழுதாக அரைக்கவும். சூப்பரான கொழ கொழப்பாக ஒரு பேக் உங்களுக்கு கிடைத்திருக்கும். இதை வடிகட்ட வேண்டும். ஒரு காட்டன் துணியில் ஊற்றி இந்த பேக்கை வடிகட்டி எடுத்தால் தலையில் போடுவதற்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த ஹேர்பேக் தயார்.

உங்களுடைய தலையில் பொடுகு பிரச்சனை இருந்தால், இந்த ஹேர்பேக்கோடு இரண்டு ஸ்பூன் தயிர் கலந்து தலைக்கு ஹேர்பேக் போட்டுக் கொள்ளவும். தயிரும் தலைமுடி வளர்ச்சிக்கு நன்றாக உதவி செய்யும் ஒரு பொருள்தான். இந்த ஹேர் பேக்கை தலையில் போடுவதற்கு முன்பு உங்களுடைய தலையில் இருக்கும் சிக்கை முழுமையாக நீக்கிவிட்டு, தலைக்கு தேங்காய் எண்ணெய் வைத்து பிறகு 1 மணி நேரம் கழித்து இந்த பேக்கை போடுவது ரொம்ப ரொம்ப நல்லது.

- Advertisement -

ஊட்டச்சத்து இல்லாத உங்களுடைய தலைமுடியை, ஊட்டச்சத்து நிறைந்த தலை முடியாக மாற்றுவதற்கு இந்த ஹேர் பேக் மிகவும் பயன்படும். அதேசமயம் உங்களுக்கு நரைமுடி வர தொடங்கிவிட்டால் இந்த ஹேர் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள். இதில் நாம் சேர்த்திருக்கும் கருஞ்சீரகம் உங்களுடைய தலைமுடியை கருகருன்னு வளரச் செய்யும். இருக்கின்ற நரை முடியும் ஒரு சில நாட்களில் கண்ணுக்கு தெரியாமல் கருப்பாக மாறிவிடும்.

இதையும் படிக்கலாமே: மூலிகை சீயக்காய் தூள் எப்படி அரைப்பது என்று உங்களுக்கு தெரியுமா? இதோ துல்லியமான அளவுகளில் உங்களுக்கான பட்டியல்.

இந்த ஹேர் பேக் போடுவதோடு சேர்த்து உங்களுடைய ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை சாப்பிட்டு வர வேண்டும். நெல்லிக்காய் கருவேப்பிலை முருங்கை கீரை பச்சை காய்கறிகள் பேரிச்சம்பழம் வேர்க்கடலை போன்ற உணவுப் பொருட்களை உணவில் நிறைய சேர்த்துக் கொள்ளும் போது தலைமுடி வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் தெரியும்.

- Advertisement -