தொடர்ந்து ஹெல்மெட் அணிவதால் முடி அதிகமாக கொட்டுகிறதா? வழுக்கை, முன் நெற்றியில் முடி கொட்டுவது, பூச்சி வெட்டு, முடி அடர்த்தி இன்மை அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய இந்த ஒரு பொருள் மட்டுமே போதுமே

Mudi uthirvu
- Advertisement -

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் நமது சுற்றுச்சூழல் மிகவும் மாசடைந்து கொண்டேதான் இருக்கிறது. தினமும் இந்த சூழ்நிலையில் தான் அனைவரும் பயணிக்கிறோம். பெரும்பாலானோர் இருசக்கர வாகனத்தில் தான் பயணிக்கின்றனர். அதனால் அவர்களின் தலைமுடி மாசடைந்து முடி கொட்டும் பிரச்சனை ஏற்படுகிறது. ஆண்கள் எப்பொழுதும் தலைக்கவசம் அணிந்து செல்வதால் வியர்வை அதிகமாக சுரந்து வழுக்கை விழ ஆரம்பிக்கிறது. அதுமட்டுமில்லாமல் சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளாவிட்டாலும் முடி உதிர்வு அதிகரிக்கும். இவை அனைத்து பிரச்சினைகளையும் இந்த ஒரு பொருள் வைத்து எவ்வாறு நிரந்தரமாக சரி செய்வது என்பதைப்பற்றித்தான் இங்கு பார்க்கப்போகிறோம்.

hair3

முதலில் ஐந்து சின்ன வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் சோற்றுக் கற்றாழையில் முள் போன்று இருக்கும் அதன் இருபுறங்களையும் வெட்டி எடுத்துவிட்டு இரண்டாக பிளந்து கொள்ள வேண்டும். பின்னர் அதன் நடுவில் இருக்கும் ஜெல்லை நீங்கள் வீட்டில் பயன்படுத்தும் ஒரு கரண்டி வைத்து சுரண்டி எடுக்க வேண்டும். அதன் பின்னர் இவை இரண்டையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக ஒரு பசை போன்று அரைத்து எடுக்க வேண்டும்.

- Advertisement -

அரைத்து எடுத்த விழுதினை ஒரு கிண்ணத்தில் மாற்றி அதனுடன் நல்ல சுத்தமான விளக்கெண்ணெய் இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த விழுதை தலையில் நன்றாக முடியின் வேர் கால்களில் படுமாறு தேய்த்துக்கொண்டு, சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் குளிக்க வேண்டும். இதனை தினமும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உங்களின் முடி உதிர்வுக்கான பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும்.

katralai gel

இந்த விழுதினை அப்படியே முடியில் பூசிக்கொண்டு குளிக்கும் பொழுது உங்கள் முடியில் இந்த விழுது கொஞ்சம் திரி திரியாக ஒட்டிக் கொண்டுதான் இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் இதை அப்படியே பயன்படுத்தலாம் ஆனால் வேலைக்கு சென்று தான் ஆக வேண்டும் என்பவர்கள் இதனை தவிர்க்க வெங்காயம் மற்றும் கற்றாழை ஜெல்லை அரைத்து எடுக்கும் பொழுது அதனை ஒரு வடிகட்டி கொண்டு அதன் சாறை மட்டும் வடித்து எடுத்துக்கொண்டு அதனுடன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து முடியில் தேய்த்து பயன்படுத்தினால் முடியில் எந்த ஒரு விழுதும் ஒட்டிக்கொள்ள வாய்ப்பிருக்காது.

- Advertisement -

நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் எப்போதும் அவர்கள் சமையலில் சின்ன வெங்காயத்தை அதிகம் சேர்த்து கொள்வார்கள். ஏனென்றால் சின்ன வெங்காயத்தில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. ஆண்டி ஆக்ஸைடு, சல்பர், ஆண்ட்டி பாக்டீரியாக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் நம் தலைமுடி வளருவதற்கு பெரும் பங்கு வகிக்கிறது.

chinna-vengayam

அதே போல விளக்கெண்ணெயில் நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இதனை பயன்படுத்தும் பொழுது பொடுகு தொல்லை, அலர்ஜி போன்றவற்றை சரி செய்து இளநரையை கருமையாக மாற்றும், சீக்கிரம் முதிர் நரை வராமல் தடுக்கும். சோற்றுக்கற்றாழை உடல் சூட்டை தணிப்பதால் முடி கொட்டும் பிரச்சனை குறைந்து முடி நன்றாக வளர ஆரம்பிக்கும். அதுமட்டுமல்லாமல் உங்களது கூந்தல் மிகவும் மிருதுவாக இருக்க சோற்றுக் கற்றாழை ஜெல் பயன்படுகிறது.

இந்த முறையை பயன்படுத்தி முடி கொட்டிய இடத்தில் மீண்டும் முடி வளர்ச்சியை கண்கூடாக பார்த்து நீங்கள் ஆனந்தம் அடையுங்கள்.

- Advertisement -