முடி உதிர்வை தடுத்து புதிய முடிகளை வளர வைக்கும் கடுகு.

hair loss
- Advertisement -

முடியை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று என்றுதான் பலரும் நினைத்து வருகிறார்கள். ஆனால் ஆரம்பத்திலிருந்து அதை முறையாக பராமரித்து வந்தால் அதனால் நமக்கு எந்தவித பிரச்சனைகளும் ஏற்படாது என்பதுதான் உண்மை. சரி போகட்டும். இதுவரை பராமரிக்கவில்லை. இனிமேலாவது ஒழுங்காக பராமரிப்போம் என்று நினைப்பவர்கள் முதலில் முடி உதிர்வை நிறுத்த வேண்டும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் முடி உதிர்வை நிறுத்துவதற்கும் புதிய முடிகளை வளர வைக்கவும் கடுகை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக நாம் உண்ணும் உணவுகளே நம்முடைய அழகை மேம்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது. சித்த மருத்துவத்தில் நாம் எந்தெந்த உணவுகளை உட்கொள்கிறோமோ அந்த உணவுகளை தான் நம்முடைய சருமத்திற்கு உபயோகப்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. நாம் நன்றாக கவனித்து பார்த்தால் நம்மால் அதை உணர்ந்து கொள்ள முடியும். பச்சைப் பயறு, வெந்தயம், உளுந்து, செம்பருத்தி, கருவேப்பிலை என்று மருந்தாகவும் உணவாகவும் எடுத்துக் கொள்ளும் பொருட்களை தான் நாம் தலைக்கும் முகத்திற்கும் பயன்படுத்தி வருகிறோம்.

- Advertisement -

அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது தான் கடுகு. அனைவரின் இல்ல சமையல் அறையிலும் கடுகு இல்லாமல் இருக்கவே இருக்காது. கடுகு இல்லாத சமையலை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு கடுகு நம்முடைய சமையலில் நீங்காமல் இடம் பிடிக்கும் ஒரு பொருள். இந்த கடுகு நம்முடைய தலைமுடிக்கு பல அற்புதமான பலன்களை தருகிறது. இந்த கடுகை நம் முறையாக உபயோகப்படுத்தினால் நம் தலையில் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடி உதிர்வை முற்றிலும் நிறுத்தி முடி வளர்ச்சியை தூண்டும் என்று கூறப்படுகிறது.

சரி இப்பொழுது கடுகை வைத்து என்ன செய்யலாம் என்று பார்ப்போம். சிறிது கடுகை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த பொடியில் இருந்து ஒரு ஸ்பூன் அளவிற்கு பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு டம்ளர் தண்ணீரை ஊற்றி அதில் இந்த பொடியை போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். தண்ணீர் வற்றி ஒரு டம்ளர் ஆன பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இந்த தண்ணீரை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு ஆமணக்கு எண்ணெயை சேர்த்துக் கொள்ளுங்கள். அதோடு ஒரு விட்டமின் இ கேப்ஸ்யூல் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இப்பொழுது இந்த தண்ணீரை நன்றாக குளுக்கிவிட்டு நம்முடைய முடியின் வேர்க்கால்களில் ஸ்பிரே செய்து ஐந்து நிமிடம் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பிறகு மைல்டான ஷாம்புவோ அல்லது சிகைக்காயோ உபயோகப்படுத்தி தலையை அலசி விட வேண்டும்.

வாரத்தில் இரண்டு நாட்கள் இப்படி நாம் செய்வதன் மூலம் நம்முடைய தலைமுடி உதிர்வு என்பது படிப்படியாக நின்று முடி வளர்ச்சி என்பது அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: இரண்டே நிமிடத்தில் வெள்ளையாக அழகு குறிப்பு

எந்த காரணத்தினால் முடி உதிர்கிறது என்பதை நம்மால் கண்டறிய முடியாது. அது எந்த காரணமாக இருந்தாலும் அந்த காரணங்கள் அனைத்தையும் சரி செய்து நம் முடி உதிர்வை நிறுத்தும் அற்புதமான ஒன்று தான் இது. பயன்படுத்தி பயனடைவோம்

- Advertisement -