கொத்துக் கொத்தாக தலை வாரும் பொழுது சீப்போடு முடி வருகிறதா? கவலையே படாதீங்க நம் பாட்டி சொன்ன இந்த ஹெர்பல் டானிக்கை ட்ரை பண்ணி பாருங்க ஒரு முடி கூட கொட்டாது!

hair-fall-onion-juice
- Advertisement -

சீப்பை வைத்து தலையை வாரும் பொழுது சீப்பில் இருக்கும் முடியை வைத்து தான் உங்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை எவ்வளவு தூரம் இருக்கிறது? என்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. கொத்துக்கொத்தாக சீப்போடு முடி சேர்ந்து வந்து விடுகிறது என்றால் முடி உதிர்தல் பிரச்சனை தீவிரமாக இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இப்படி இருக்கும் பொழுது நீங்கள் கண்ட கண்ட ஷாம்பூக்களை தவிர்ப்பது ரொம்பவே நல்லது.

அதற்கு பதிலாக வீட்டில் அரைத்த சீயக்காய் போட்டு குளிப்பது சால சிறந்தது. மேலும் இந்த ஒரு டானிக்கை பாட்டி சொன்னது போல நீங்கள் ட்ரை பண்ணி பாருங்க, இனி ஒரு முடி கூட உங்க தலையில் இருந்து சீப்புடன் சேர்ந்து வராது. அப்படிப்பட்ட ஒரு இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட டானிக் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது? என்பதை தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

முடி கொட்டுதல் பிரச்சனைக்கு தீர்வு தரக்கூடிய அத்தனை சத்துக்களும் நம் அன்றாட உணவுப் பொருட்களிலேயே இருக்கிறது. நாம் பயன்படுத்தக்கூடிய எளிய பொருட்களில் நிரம்பியுள்ள இந்த சத்துக்களை நம் முடிக்கு கொடுத்தால் ஊட்டச்சத்து அதிகரிக்கும். இதனால் முடி உதிர்வது சட்டென நின்று, முடி வளர்ச்சியும் தூண்டிவிடப்படும். இப்படியான பொருட்களை வைத்து தான் நம் முன்னோர்கள் இந்த மாதிரியான டானிக்கை தயாரித்து வந்தனர்.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் ஒரு பத்து பெரிய நெல்லிக்காய்களை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக்கி சேருங்கள். நெல்லிக்காயில் இருக்கும் சத்துக்கள் முடி இழப்பை சரி செய்து மீண்டும் முடி வளர்ச்சியை தூண்டி விடும். அடுத்ததாக கற்றாழையை எடுத்துக் கொள்ளுங்கள். கற்றாழை ஜெல்லில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம். இது தலைமுடியை குளிர்ச்சியாக்கி, பொடுகு பிரச்சனையை தீர்க்கும் ஆற்றல் கொண்டுள்ளது.

- Advertisement -

இவற்றுடன் ரெண்டு கைப்பிடி நிறைய பச்சை கருவேப்பிலை இலைகளை சுத்தம் செய்து சேருங்கள். ஐந்து செம்பருத்தி இலைகள் மற்றும் ஐந்து செம்பருத்தி பூக்கள் சேருங்கள். கடைசியாக ஒரு பத்து சின்ன வெங்காயத்தை தோலுரித்து முழுதாக அப்படியே சேர்த்து மிக்ஸியை இயக்கி நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். அரைத்து எடுத்த இந்த விழுதை ஒரு காட்டன் துணியில் போட்டு நன்கு பிழிந்து அதில் இருக்கும் சாற்றை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
மருதாணி இலையை தேடி இனி அலைய வேண்டிய அவசியமே இல்லை! பூண்டு தோலை வைத்து இன்ஸ்டன்ட் மருதாணி எப்படி செய்வது?

இந்த சாறு தான் நம் தலை முடியை வளர செய்யக்கூடிய டானிக். இதை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாது. ஒரு மாதம் வரை அதிகபட்சம் வைத்து பயன்படுத்தலாம். இதை தலைக்கு குளிக்க போகும் முன்பு தலையில் ஒரு பத்து நிமிடம் நன்கு மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற விட வேண்டும். பின்பு சீயக்காய் கொண்டு தலை முடியை அலசிக் கொள்ளுங்கள். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால் போதும் ரெண்டே மாதத்தில் உங்களுடைய முடியை நீங்கள் வாரும்பொழுது சீப்பில் ஒரு முடி கூட வராது. இந்த டானிக்கை பயன்படுத்தும் பொழுது ஜில்லென்று இருக்கக்கூடாது. நன்கு ஆறிய பின்பு பயன்படுத்துங்கள்.

- Advertisement -