இரண்டே வாரத்தில் முடி உதிர்வை கட்டுப்படுத்தக்கூடிய சக்தி இந்த 2 இலைகளுக்கு உண்டு. அடுத்த 2 மாதத்தில், 2 மடங்கு முடி வளர்ச்சியை தரும் ஹேர் பேக்.

hair3
- Advertisement -

முடி உதிர்வை உடனடியாக நிறுத்தி முடி வளர்ச்சியை கொடுக்கக்கூடிய ஒரு சுலபமான பச்சை நிற ஹேர் பேக்கை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். மிக மிக சுலபமாக கிடைக்கும் இந்த இலைகளை ஹேர் பேக்காக போட்டால் தலைமுடி வளராத இடத்தில் கூட சீக்கிரம் தலைமுடி வளரத் தொடங்கும். இரண்டே மாதத்தில் குட்டி குட்டி பேபி ஹேரை பார்க்கக் கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால், இந்த ஹேர் பேக் ஒன்றே போதும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த ரெமிடியை நாமும் தெரிந்து கொள்வோம்.

இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் முருங்கைக்கீரை. வெற்றிலை, செம்பருத்தி பூ இலை. முருங்கைக்கீரை இரண்டு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். செம்பருத்தி இலை ஒரு கைப்பிடி அளவு, வெற்றிலை இரண்டு இருந்தால் மட்டும் போதும். முதலில் இந்த இலைகளை எல்லாம் சுத்தமாக தண்ணீரில் போட்டு கழுவி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அரைத்த இந்த விழுதை வடிகட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நைசாக அரைக்கும் பட்சத்தில் இந்த விழுதை அப்படியே தலையில் அப்ளை செய்து கொள்ளலாம். உங்களுக்கு பேக் திப்பி திப்பியாக இருக்கிறது. தலையை அலசுவதற்கு கஷ்டமாக இருக்கிறது என்றால் ஒரு காட்டன் துணியில் கூட இந்த பேக்கை வடிகட்டியும் பயன்படுத்தலாம்.

அரைத்த இந்த பேகுடன் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து அப்படியே தலையில் அப்ளை செய்ய வேண்டியது தான். இந்த பேக்கை தலையில் அப்ளை செய்வதற்கு முன்பாகவே உங்களுடைய தலையில் நன்றாக தேங்காய் எண்ணெயை வைத்து ஒரு மணி நேரம் ஊற வைத்து இருக்க வேண்டும். இந்த பேக்கை டிரையாக இருக்கும் ஸ்கேல்பில் போடக்கூடாது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: மீசை தாடி கருகருவென்று அடர்த்தியாக வளர இதை செய்தால் போதும்.

முடியை ஒவ்வொரு பாகங்களாக பிரித்து இந்த ஹேர் பேக்கை மயிர்க்கால்களின் வேர்களில் படும்படி நன்றாக அப்ளை செய்ய வேண்டும். மீதம் இருக்கும் ஹேர்பேக்கை முடியின் நுனியில் தடவி விடுங்கள். ஏனென்றால் உங்களுடைய முடிவெடிப்பை சரி செய்யவும் இந்த ஹேர் பேக் பயன்படும். ஹேர்பேக் போட்டுவிட்டு கட்டாயமாக 30 நிமிடங்கள் உங்களுடைய தலையில் இந்த ஹேர் பேக் இருக்க வேண்டும். பிறகு எப்போதும் போல ஷாம்பு போட்டு தலையை அலசிக் கொள்ளுங்கள்.

தலையில் இருக்கும் தேவையில்லாத இன்பெக்சன் பொடுகு அரிப்பு கூட நீங்கிவிடும். இந்த ஹேர் பேக்குக்கு அவ்வளவு பவர். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த ஹேர் பேக்கை போட்டு பாருங்க. இரண்டே வாரத்தில் சூப்பரான ரிசல்ட் தெரியும். அடுத்த இரண்டு மாதத்திற்கும், தொடர்ந்து வாரத்தில் இரண்டு நாட்கள் என்ற கணக்கில் இந்த பேக்கை போட்டு வர உங்களுடைய முடி வளர்ச்சியில் அபாரமான மாற்றம் தெரியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -