அட! முடி வளர இவ்வளவு சிம்பிளான வழி இருக்குன்னு இத்தனை நாள் தெரியாம போச்சே. அப்படின்னு யோசிக்கிற மாதிரி ரொம்ப சிம்பிளான ஒரு டிப்ஸ் இருக்கு. வாங்க அது என்னன்னு தெரிஞ்சுக்கலாம்.

long hair tips
- Advertisement -

இந்த முடி உதிர்வு, இளநரை, பொடுகு இப்படியான பிரச்சனைகள் இன்று பெருமளவில் இருக்கிறது. அதை சரி செய்ய ஷாம்பு, கண்டிஷனர் போன்றவற்றை பயன்படுத்துவதை விட, ரொம்பவே சுலபமா வீட்டிலே அதிக செலவில்லாமல் இந்த முறையை பயன்படுத்தி வந்தாலே போதும். முடி உதிர்வு, இளநரை, பொடுகு போன்ற அனைத்து பிரச்சனைகளும் சரியாகி விடும். அது என்னவென்று இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பொதுவாக முடி சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கு இரும்புச் சத்து குறைபாடும் ஒரு காரணம். எனவே இரும்பு சத்து மிக்க உணவுகளை நாம் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். பேரிச்சம் பழம், கறிவேப்பிலை, நெல்லிக்காய் போன்றவற்றில் எல்லாம் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. அது மட்டும் இன்றி கீரைகளை அதிக அளவு எடுத்து கொள்வதோடு, போதுமான அளவு தண்ணீரையும் அருந்த வேண்டும். இது மட்டுமின்றி மன அழுத்தம் இல்லாமல் இருப்பதும் முடி உதிர்வு பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு. இப்போது முடி தொடர்பான இந்த பிரச்சனைக்கு நாம் பயன்படுத்த போகும் அந்த எண்ணையை எப்படி தயார் செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

முடி உதிர்வை சரி செய்யும் எண்ணெய் தயாரிக்கும் முறை
இந்த எண்ணெய் தயாரிக்க அடுப்பை பற்ற வைத்து அதில் இரும்பு கடாய் வைத்துக் கொள்ளுங்கள். இரும்பு கடாய் இல்லாத பட்சத்தில் சில்வர் கடாய் பயன்படுத்தலாம். நான் ஸ்டிக் பயன்படுத்த வேண்டாம். கடாய் நன்றாக சூடான உடன் 250 ml சுத்தமான தேங்காய் எண்ணெயை சேர்த்து சூடாக்கி கொள்ளுங்கள். எண்ணெய் சூடாகும் நேரத்திற்குள்ளாக இரண்டு முழு நெல்லிக்காயை எடுத்து உள்ளிருக்கும் கொட்டையை நீக்கி விட்டு, சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக நறுக்கிய இந்த நெல்லிக்காய் துண்டுகளை காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் சேர்த்து சலசலப்பு அடங்கும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடுங்கள். நெல்லிக்காயில் உள்ள ஈரப்பதம் முழுவதுமாக நீங்கிய பிறகு எண்ணெயின் சலசலப்பு அடங்கி விடும். அதன் பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகத்தை சேர்த்து அதுவும் கொதித்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த எண்ணெய் நன்றாக ஆறும் வரை அப்படியே விட்டு விட்டு, அதன் பிறகு இதை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். இதை மூன்று மாதம் வரை கூட வைத்து பயன்படுத்தலாம் கெட்டுப் போகாது.

இந்த எண்ணையை தலைக்கு குளிக்கும் முன் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக தலையின் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து மசாஜ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு மைல்டான ஷாம்பூ அல்லது சீயக்காய் சேர்த்து குளித்து விடலாம். சைனஸ் தொந்தரவு உடையவர்கள் 10 நிமிடம் வரை ஊற விட்டால் போதும். உடல் அதிக உஷ்ணத்துடன் இருப்பவர்கள் இரவே கூட இதை தலையில் தேய்த்து விட்டு அடுத்த நாள் காலையில் குளிக்கலாம்.

- Advertisement -

இந்த எண்ணையை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தேய்த்து வரும் பொழுது உடல் சூடு தணிந்து இரும்பு சத்து முழுவதுமாக சேர்ந்து முடி நன்றாக வளரும். இதில் கருஞ்சீரகம் சேர்த்து இருப்பதால் அது முடி வளர்ச்சியை தூண்டுவதுடன், நெல்லிக்காயில் இருக்கும் குளுமை தன்மையும் இது நீக்கி விடும்.

இதையும் படிக்கலாமே: பலரும் அதிகம் பயன்படுத்தும் மருதாணி ஹேர் பேக் மாதம் 1 முறை போட்டாலே கருகருவென்று கூந்தல் அடர்த்தியாக வளருமே! நரைமுடி மறைய, தலை முடி வளர இதை செய்தால் போதுமா?

இந்த எண்ணெய்யை நீங்களும் தயார் செய்து வைத்துக் கொண்டு உங்களின் முடி சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் இதை பயன்படுத்துங்கள். இது நிச்சயம் ஒரு நல்ல தீர்வாக இருக்கும். இது முடி உதிர்வை கட்டுப்படுத்தி வளர தூண்டுவதுடன் இளநரையையும் கட்டுப்படுத்தும்.

- Advertisement -