கொத்து கொத்தாக உதிர்ந்த முடி மீண்டும் அடர்த்தியாக வளர இந்த 3 ஸ்டெப்ஸ் ஃபாலோ பண்ணாலே போதுமே! வாரம் ஒருமுறை செய்தால் 2 மாதத்தில் பெஸ்ட் ரிசல்ட் கிடைக்கும்.

hair-fall-rice-water-katrazhai
- Advertisement -

முடி உதிர்வது நின்று மீண்டும் அந்த இடத்தில் முடி வளர வைப்பது ரொம்பவே சிரமமான விஷயம் தான் என்றாலும், சில குறிப்பிட்ட விஷயங்களை கடைபிடிக்கும் பொழுது சுலபமாகவே மீண்டும் அந்த இடத்தில் முடி வளர செய்து இழந்த முடியை மீட்டு விடலாம். கொத்து கொத்தாக முடி உதிர்வதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இந்த மூன்று விஷயங்களை தொடர்ந்து கடைபிடித்து வரும் பொழுது அடர்த்தியாக முடி வளர துவங்கும். அதற்கு நாம் செய்யப் போவது என்னென்ன? என்பதை தொடர்ந்து இந்த அழகு குறிப்பு பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

முதலில் அடர்த்தியாக இருந்த முடி மெலிந்து போவதற்கு காரணம் தலைமுடியில் இருக்கும் பொடுகு ஒரு காரணமாக இருக்கிறது. பொடுகு தொல்லை இருப்பவர்களுக்கு வேகமாக முடி உதிர ஆரம்பிக்கும். எனவே பொடுகை முதலில் போக்க வேண்டும். அதன் பிறகு தான் நீங்கள் முடி கொட்டுவதை நிறுத்தி, மீண்டும் முடி வளர செய்ய முடியும். சிலருடைய தலையில் ஒரு பேன் கூட இருக்காது. பேன், ஈறு போன்ற இயற்கை காரணிகள் தலைமுடியை விட்டு நீங்கும் பொழுதே நீங்கள் உஷாராக இருக்க வேண்டும்.

- Advertisement -

தலை முடியின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் பொழுது தான் இவையெல்லாம் நம் முடியில் கூடு கட்டி வசித்து வருகிறது. ஆனால் அதன் ஆரோக்கியம் குறையும் பொழுது அங்கு ஒரு பேன் கூட இருக்காது. ஈறு பிரச்சனையும் அவர்களுக்கு இருக்காது எனவே ஈறு, பேன் போன்றவை குறைய ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் உங்களுடைய தலை முடியை பாதுகாக்க ஆரம்பித்து விட வேண்டும். அப்பொழுது தான் முடி உதிர்தல் பெரிய பிரச்சனையாக உங்களுக்கு வந்து நிற்காது.

இந்த மூன்று விஷயங்களில் முதலாவதாக முந்தைய நாளே நீங்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எப்பொழுதும் வழக்கமாக தேய்க்கும் எண்ணெயை தேய்த்தால் போதும். தலைமுடிக்கு மரச்செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது கேசத்தை வலுவாக்கும். மேலும் முடி உதிர்தலையும் தடுக்கும். எப்போதும் எண்ணெய் பசை உள்ள முடி இருப்பவர்கள் அடிக்கடி வெளியில் செல்லும் பொழுது தலைமுடியை பாதுகாப்பாக துணியால் மூடிக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

தூசு, மாசு போன்றவை எண்ணெயுடன் படிந்து அழுக்குகளை உண்டாக்கி விடும். எனவே முடியில் எண்ணெய் பசை தொடர்ந்து இருப்பதும், தலைமுடி உதிர்வை ஏற்படுத்தும். மறுநாள் காலையில் எழுந்ததும் தலை முடிக்கு ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். கைகளால் மசாஜ் செய்யாமல், ஏதாவது ஒரு அடர்த்தியான சீப்பை கொண்டு மசாஜ் செய்யுங்கள். ஐந்து நிமிடம் மசாஜ் செய்த பிறகு, நீங்கள் கற்றாழை ஜெல் மற்றும் அதனுடன் முந்தைய நாள் எடுத்து வைத்த அரிசி களைந்த தண்ணீர் சேர்த்து நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் முகத்தில் முகப்பரு வந்து விட்டதா? இந்த தவறை மட்டும் மறந்தும் செய்யாதீங்க. அப்புறம் முகப்பரு உங்க முகத்தை விட்டு மறையவே மறையாது.

பின்னர் இதை தலைமுடியின் ஸ்கால்ப் பகுதியில் இருந்து நுனி வரை எல்லா இடங்களிலும் தடவி தலை முடியை கொண்டை போல போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அரை மணி நேரம் கழித்து நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு தலைக்கு குளித்து விடுங்கள். இதுபோல வாரம் ஒரு முறை செய்து வந்தால் பொடுகு நீங்கி, தலைமுடி பிரச்சனைகள் ஒவ்வொன்றாக குறைந்து, மீண்டும் இழந்த இடத்திலிருந்து முடி முளைக்க ஆரம்பிக்கும், முடி அடர்த்தியாகவும் செய்யும்.

- Advertisement -