தலைமுடி அசுர வேகத்தில் வளர, முடி இனி உதிராமல் இருக்க தினமும் பருக வேண்டிய ஒரு மோர்? இத குடிச்சா ஹேர் ஃபால் தொல்லை இனி இல்லை!

long-hair-butter-milk
- Advertisement -

தலைமுடி எல்லோருக்கும் அடர்த்தியாகவும், நீளமாகவும் இருப்பது தான் ரொம்பவும் பிடிக்கும். அப்படி இருப்பவர்களை பார்க்கும் பொழுதே நமக்கு ஒரு விதமான பொறாமை எண்ணம் மேலோங்கி விடும். நீண்ட அடர்த்தியான கூந்தல் பெற முதலில் தலைமுடி உதிர்வதை சரி செய்ய வேண்டும். இதற்கு முதலில் நீங்கள் தலைமுடி உதிர்வதில் இருந்து தடுப்பதற்காக உரிய சத்துக்களை உள்ளுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். நம் அன்றாட உணவில் இருக்கும் சத்துக்கள் நம் தலைமுடிக்கு போதுமானது ஆனால் இன்றைய மாறிய உணவு பழக்க வழக்க முறைகளின் படி அந்த சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்காமல் போய்விட்டது. இதனால் தான் முடி உதிர்வது வேகமாக தொடர்கிறது.

மேலும் அந்த இடத்தில் மீண்டும் புதிய முடியை வளர விடாமல் சுற்றுச்சூழல் அமைப்பும் உள்ளது எனவே இதிலிருந்து எளிதாக மீண்டு வருவதற்கு தினமும் இந்த மோர் குடித்தால் போதும். இந்த ஒரு டம்ளர் மோர் தினமும் குடித்தால் முடி சார்ந்த எந்த ஒரு பிரச்சனையும் உங்களை நெருங்கி வராது. அந்த அளவிற்கு எஃபக்டிவாக மற்றும் சுலபமாக தயாரிக்க கூடிய இந்த மோரை எப்படி செய்யப் போகிறோம்? என்பதை இனி தொடர்ந்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

முடி உதிர்வு பிரச்சனையை தடுத்து நிறுத்தக்கூடிய மோர் தயாரிக்க தேவையான பொருட்கள்:
பச்சை கருவேப்பிலை – ஒரு கைப்பிடி, சீரகம் – ஒரு டீஸ்பூன், துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், கெட்டியான தயிர் – 2 டீஸ்பூன், தண்ணீர் – 200ml, இந்துப்பு – ஒரு ஸ்பூன்.

முடி உதிர்வு பிரச்சனையை தடுத்து நிறுத்த செய்ய வேண்டியது என்ன?
தலைமுடி உதிர்வு பிரச்சினை பெரும்பாலும் இளம் வயதிலேயே இப்பொழுது துவங்குகிறது. இந்த பிரச்சினையை முற்றிலுமாக யாராலும் தவிர்க்க முடியாது என்பதால் இதனை கொஞ்சம் கொஞ்சமாக உணவு முறை பழக்கத்தினை மாற்றுவதனால் மட்டுமே செய்து கொள்ள முடியும். சால்ட் உப்பை மாற்றி இந்துப்பை பயன்படுத்துங்கள். அன்றாட உணவு பழக்க வழக்கங்களில் தேவையான சத்துக்கள் கிடைத்தால் தலைமுடி சார்ந்த எந்த பிரச்சினைகளும் நம்மை அணுகுவது இல்லை.

- Advertisement -

தலைமுடி பிரச்சனையை தடுத்து நிறுத்தி கருகருவென கூந்தல் அடர்த்தியாக இருக்க கருவேப்பிலையை அன்றாட உணவில் ஒரு கைப்பிடி அளவு சேர்க்க வேண்டும். ஆனால் ஏதோ சாஸ்திர சம்பிரதாயத்திற்கு கொஞ்சம் கருவேப்பிலையை கிள்ளி தாளித்து சமையல் செய்து விடுகிறோம். சமையல் செய்தது மட்டுமல்லாமல் அதை சாப்பிடும் பொழுது சேர்த்து சாப்பிடாமல் தூக்கி வேறு எரிந்து விடுகிறோம். பிறகு எப்படி அதில் இருக்கும் சத்துக்கள் நமக்கு கிடைக்கும்? இப்படி தலை முடி சார்ந்த பிரச்சினைகளை நீக்கக்கூடிய ஒவ்வொரு உணவுப் பொருளையும் நாம் சரியான அளவில் எடுத்துக் கொள்வது கிடையாது.

ஒரு கைப்பிடி அளவிற்கு பச்சை கருவேப்பிலையை பிரஷ் ஆக கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் துருவிய இஞ்சி, சீரகம், கெட்டியான தயிர், இந்துப்பு, தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த ஹெல்த்தி மோர் வெறும் வயிற்றில் காலையிலேயே குடித்து விடுங்கள். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்து வர நாளடைவில் உங்களுடைய தலைமுடி தொடர்பான எல்லா பிரச்சனைகளும் விரைவில் மறைவதை காணலாம். இளநரை, முடி உதிர்தல், வழுக்கை விழுதல், முடிப்பிளவுறுதல், வலிமை இல்லாத முடி என்று எல்லா பிரச்சினையையும் தீர்க்கக் கூடிய இந்த ஒரு சத்து மிக்க மோரை நீங்களும் தினமும் குடித்து பயன்பெறலாமே!

- Advertisement -