50 வயசிலும் 20 வயசு பொண்ணு போல அழகாக இருக்க ஒரு ஸ்பூன் அரிசியை வைத்து இந்த பேக்கை போடுங்க. உங்க முகம் பால் போல வெண்மையாக மாறுவதுடன் எப்போதும் இளமையான அழகு தோற்றத்துடன் இருக்கும்.

- Advertisement -

எல்லா பெண்களும் முகம் அழகாக இருக்க வேண்டும் என்பதை காட்டிலும் முகம் வயதான தோற்றத்தை காட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் கொஞ்சம் கூடுதலாகவே கவனம் செலுத்துவார்கள். இந்த அழகு குறிப்பு பதிவில் முகம் எப்போதும் வெள்ளையாகவும் இளமையாகவும் தோற்றமளிக்க கூடிய ஒரு பேஸ் பேக்கை எப்படி தயார் செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.

இந்த பேக்கிற்கு நாம் எடுத்துக் கொள்ளப் போகும் முக்கியமான பொருள் அரிசி தான். அரிசியை வைத்து முகத்திற்கான பல வகை ஃபேஸ் பேக்குகளை தயார் செய்யலாம். இந்த பேஸ் பேக்குகளை கொரியன் ஜாப்பனிஷ் பெண்கள் எல்லாம் தொடர்ச்சியாக பயன்படுத்தும் முறை தான். அவர்களை நீங்கள் பார்த்தாலே தெரியும் எவ்வளவு வயதானவர்களாக இருந்தாலும் அது முகத்தில் தெரியாமல் எப்போதும் இளமையாகவும் நல்ல அழகுடனும் இருப்பார்கள். அதற்கு இந்த ஃபேஸ் பேக் ஒரு முக்கியமான காரணமும் என்றே சொல்லலாம். இதை எப்படி தயார் செய்வது என்பதை இப்போது நான் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

முகம் அழகாகவும் இளமையுடனும் இருக்க ரைஸ் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க ஒரு ஸ்பூன் அரிசியை நன்றாக சுத்தம் செய்த பிறகு ஒரு சிறிய பௌலில் சேர்த்து அரிசி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் இந்த அரிசியை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரிசி ஊற வைக்க தண்ணீரை ஊற்றி நல்ல பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக ஒரு பவுலில் அரைத்த இந்த பேஸ்ட்டை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். வடிக்கட்டும் போது கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து வடிகட்டிக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு சிறிய பேனை வைத்து வடிகட்டி எடுத்து இந்த அரிசி மாவு கலவையை சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் தண்ணீருக்கு பதிலாக மிக்ஸி ஜாரை கழுவி அந்த தண்ணீரை கொஞ்சமாக சேர்த்து கொள்ளுங்கள். இதை செய்யும் போது அடுப்பை லோ ஃபிலிமில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரிசி மாவில் இருக்கும் தண்ணீர் வற்றிய உடன் கால் கப் அளவு காய்ச்சாத பாலை ஊற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஆயில் சருமம் என்றால் இதில் பால் ஊற்றுவதை தவிர்த்து விட்டு வெறும் அரிசி மாவை மட்டும் பேஸ்ட் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி தனியாக ஒரு பௌலில் மாற்றி விடுங்கள். இந்த அரிசி மாவு பேஸ்ட் நன்றாக ஆறிய பிறகு இதில் ஒரு ஸ்பூன் ஆலுவேரா ஜெல் ஒரே ஒரு விட்டமின் இ கேப்சூல் அனைத்தையும் சேர்த்து நன்றாக குழைத்தால் நல்ல ஒரு கிரீம் பதத்திற்கு கிடைத்து விடும். இதை ஒரு காற்று போகாத ஏர்டெர் கண்டெய்னர் பாக்சில் போட்டு வைத்து விடுங்கள்.

இப்போது உங்கள் முகத்தை சுத்தமாக துடைத்த பிறகு இந்த பேஸ்ட்டை கொஞ்சமாக எடுத்து உங்கள் முகம் முழுவதும் அப்ளை செய்து ஒரு பேக் போல போட்டுக் கொள்ளுங்கள். இது அரை மணி நேரம் வரை உங்கள் முகத்தில் அப்படியே இருக்கட்டும். அரை மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீர் வைத்து முகத்தை கழுவி விடுங்கள். இந்த பேக்கை முடிந்த வரையில் இரவு உறங்க செல்வதற்கு முன் போட்டால் மிகவும் நல்லது ஏனென்றால் இந்த பேக்கை போட்டவுடன் நீங்கள் மறுபடியும் வெயிலில் சென்றால் அது அந்த அளவிற்கு வேலை செய்யாது.

இதையும் படிக்கலாமே: வெறும் 7 நாட்களில் ஏஞ்சல் போல அழகாக மாற வேண்டுமா? இந்த 3 பொருட்களை வைத்து ஃபேஸ் பேக் போட்டு தான் பாருங்களேன். பிறகு தேவதைக்கும் உங்களுக்கும் வித்தியாசமே தெரியாது.

ஒரு முறை தயார் செய்த இந்த பேக்கை பத்து நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். இதை வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் பயன்படுத்தினாலே போதும் உங்கள் முகம் எப்போதும் பால் போல பளிச்சென்று மெருதுவாக இருக்கும். அது மட்டும் இன்றி முகச் சுருக்கங்கள் வராமல் காக்கும். இந்த ஐஸ் கிரீம் பேக் முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -