பெண்கள் அனைவருக்கும் நீளமான முடியை வளர்த்துக் கொள்ள ஆசை ஆகத்தான் இருக்கும் அதற்கான வழியை தான் நாம் பல முறைகளில் தேடிக் கொண்டே இருக்கிறோம். நல்ல நீளமாக கெண்டைக்காலை தொடும் அளவிற்கு முடி இருக்கும் பெண்களை பார்த்து முடியே வேண்டாம் என்று நினைப்பவர்கள் கூட ஒரு கணம் வாயை பிளக்க தான் செய்வார்கள். அந்த அளவிற்கு மற்றவரை ஈர்க்கும் சக்தி இந்த அழகிய கூந்தலுக்கு உண்டு. இப்போது இந்த பதிவில் முடி வளர்ச்சிக்கான ஷாம்புவை நாம் வீட்டில் எப்படி தயார் செய்வது என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம்.
உங்களுக்கு அதிகமாக முடி வளர வேண்டுமானால் முதலில் இந்த கெமிக்கல் கலந்த ஷாம்பூ ஸ்ப்ரே போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதை முதலில் தவிர்க்க வேண்டும். இதில் இருக்கும் ரசாயன பொருள்கள் நம்முடைய இயற்கையான முடி வளர்ச்சியை பெரும்பாலும் தடுத்து விடுகிறது சில நேரங்களில் இது உடனடியாக பலனளிப்பதைப் போல் தோன்றினாலும் அதுவும் சில காலம் தான் பிறகு முன்பை விட அதிகமான இழப்பு கட்டாயமாக தோன்றும். இப்போது நம் வீட்டில் முன்னோர்கள் பயன்படுத்தி முடி வளர்ச்சிக்கான முக்கியமான ஒரு பொருளை வைத்து இந்த ஷாம்பூவை எப்படி தயாரிப்பது என்று பார்த்துக் கொள்வோம்.
அந்த முக்கியமான பொருள் வேறொன்றும் இல்லை கறிவேப்பிலை தான். கறிவேப்பிலை அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொண்டாலும் அல்லது வெறும் வயிற்று தினமும் 10 இலைகள் உண்டு வந்தால் கூட போதும் முடியின் வளர்ச்சி அவ்வளவு நன்றாக இருக்கும் இது காலம் காலமாய் முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் பொருள் அதை வைத்து தான் இப்பொழுது நாம் இந்த ஷாம்பு தயாரிக்கப் போகிறோம்.
இந்த ஷாம்புவை தயாரிக்க ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை எடுத்து அலசி தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் நன்றாக ஊற வைத்து விடுங்கள். கருவேப்பிலையில் உள்ள சாறு முழுவதும் அந்த தண்ணீரில் இறங்கி இருக்கும். அடுத்த நாள் இந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொண்ட பிறகு இதில் கொஞ்சம் ஆலுவேரா ஜெல்லை சேர்த்துக் கொள்ளுங்கள். கடைகளில் விற்கும் செயற்கை ஜல் இதற்கு பயன்படுத்த வேண்டாம். இந்த இரண்டையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அடித்து எடுத்தால் நல்ல ஒரு ஜல்லி பதத்திற்கு கிடைத்து விடும். இதில் நீங்கள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பேபி ஷாம்பு கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள் இதில் கெமிக்கல் அதிகமாக இருக்காது. இது மூன்றையும் ஒன்றாக கலந்து உங்கள் தலையில் நீங்கள் தேய்த்து குளித்துப் பாருங்கள் முடி உதிர்வு இருந்தால் கூட அது சரியாகி விடும்.
நீங்கள் நினைக்கலாம் இதற்கு பேபி ஷாம்பு மட்டுமே தேய்த்து குளிக்கலாமே என்று குழந்தைகளுக்கு பயன்படுத்தும் இந்த ஷாம்பில் முடி வளர்ச்சிக்கான எந்த ஒரு பொருளும் இருக்காது சிறு குழந்தைகளுக்கு தலையில் உள்ள அழுக்கு போக மைல்டான ஒரு ஷாம்பாகத்தான் இருக்கும் இதை வைத்து தலை சுத்தம் செய்து கொள்ளலாம் ஆனால் முடி வளர்ச்சிக்கு இதில் மெர்குரிய பொருள்களை சேர்த்தால் தான் நல்ல பலனை நீங்கள் பெற முடியும்.
இதை பயன்படுத்திய பிறகு நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உங்கள் முடி வளரும். இதை ஒரு ஐஸ் கியூப் டிரேவில் ஊற்றி பிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது ஒன்று இரண்டு கியூபாக எடுத்து தண்ணீரில் கரைத்து நீங்கள் தலைக்கு பயன்படுத்தலாம்.