கைக்கு அடங்காத அளவிற்கு அடர்த்தியான முடி வளர்ச்சியை பெற முருங்கைக்கீரையை இப்படித்தான் சாப்பிட வேண்டும்.

hair14
- Advertisement -

நம்முடைய தலைக்கு மேலே எவ்வளவுதான் எண்ணெய் தேய்த்தாலும் எவ்வளவு தான் ஹேர்பேக் போட்டாலும் உடலில் ஊட்டச்சத்து சரியான அளவில் இருந்தால் தான் முடி வளர்ச்சி வேகமாக அதிகரிக்கும். அந்த வரிசையில் முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய ஒரு பொருள் இந்த முருங்கைக்கீரை. முருங்கைக்கீரையில் இருக்கும் இரும்பு சத்து நம்முடைய உடம்பில் அனிமியா வராமல் தடுத்து முடி வளர்ச்சியை சீக்கிரம் அதிகரிக்கும். அதே சமயம் முடி உதிர்வை உடனடியாக கட்டுப்படுத்தும். முருங்கைக் கீரையை நம் உணவோடு எப்படி வேண்டும் என்றாலும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் முருங்கைக் கீரை பொடியை வைத்து தான் இன்று இரண்டு டிரிங்க் ரெசிபியை பார்க்க போகின்றோம்.

ஊட்டச்சத்து நிறைந்த பானம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த ஊட்டச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை பானத்தை தயாரிக்க நமக்கு முருங்கைக் கீரை பொடி தேவை. முருங்கைக் கீரை பொடி கடைகளில் ஆர்கானிகாக கிடைத்தால் அதை வாங்கிக்கொள்ளலாம். இல்லை என்றால் முருங்கைக்கீரையை வாங்கி சுத்தமாக காம்புகள் இல்லாமல் எடுத்து நிழலிலேயே உலர வைத்து மிக்சியில் அரைத்து சலித்து கூட முருங்கைக்கீரை பொடியை தயார் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

குறிப்பு 1:
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முருங்கைக்கீரை பொடி – 1 ஸ்பூன், சீரகப்பொடி – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, புளிக்காத தயிர் – 1/2 கப், தண்ணீர் – 1/2 கப் சேர்த்து ஒரு ஓட்டு ஓட்டி ஒரு டம்ளரில் ஊற்றினால் முருங்கைக் கீரை பொடி சேர்த்த தயிர் பானம் தயார். தினமும் இதை ஒரு டம்ளர் அளவு குடிக்கலாம். எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் குடிக்கலாம். அது உங்களுடைய விருப்பம் தான். இந்த பானம் குடிப்பதற்கு மிகவும் சுவையாகவும் இருக்கும். அதேசமயம் இந்த வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பானமாகவும் இருக்கும்.

குறிப்பு 2:
இரண்டாவது பானம் தயாரிப்பது எப்படி. மிக்ஸி ஜாரில் வெள்ளரிக்காய் நறுக்கியது – 4 துண்டுகள், முருங்கைக் கீரை பொடி – 1 ஸ்பூன், தேன் – 1 ஸ்பூன், தண்ணீர் – 1/2 கப் ஊற்றி விழுதாக அரைத்து ஒரு டம்ளரில் ஊற்றி அப்படியே குடித்து விடவேண்டும். வடிக்கட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதை அப்படியே குடிக்கலாம்‌. சுவையாகத்தான் இருக்கும். இனிப்பு சுவையோடு இருக்கும். இந்த பானத்தை தினமும் குடித்து வரலாம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

- Advertisement -

இந்த இரண்டு பானத்தையும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக தயார் செய்து கூட ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். இரண்டு நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முருங்கைக் கீரையை சமைத்து சாப்பிடும் போது கிடைக்கக்கூடிய போஷாக்கை விட, முருங்கைக் கீரையை பொடியாக இப்படி நாம் உணவோடு சேர்த்துக் கொள்வது அதிக சத்தை நேரடியாக கொடுக்கும்.

எங்களுக்கு எதற்குமே நேரமில்லை என்பவர்கள் வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் முருங்கைக்கீரை பொடியை போட்டு கலந்து அப்படியே குடித்தாலும் தவறு கிடையாது. ஆனால் சுவை கொஞ்சம் குறைவாக இருக்கும். எல்லோராலும் இந்த சுவையை சகித்துக்கொண்டு குடிக்க முடியாது. ஆனால் மேல் சொன்ன குறிப்புகளை பின்பற்றினால் சத்துடன் சேர்ந்து நாவிற்கு சுவையும் கிடைக்கும். ஆரோக்கியத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் இந்த குறிப்பை மிஸ் பண்ணாமல் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -